ரோகினியின் முகத்திரையை கிழித்த மனோஜ், மாதர் சங்க தலைவி எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 1/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வக்கீலுமே, விஜயா செய்த வேலையை திட்டி மாதர் சங்கத்திடம் பேசி மன்னிப்பு கேட்க சொன்னார். இதை மீனா, விஜயாவிடம் சொன்னார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வந்தார். அப்போது சிந்தாமணி, மாதர் சங்கத்திற்கு லஞ்சம் கொடுத்தால் அமைதியாகி விடுவார்கள் என்று சொல்லி தன்னை பணத்தை கொடுத்தார். பின் சுருதி, ரவியின் ரெஸ்டாரண்ட்க்கு மாதர் சங்கத்தை வரவைத்து விஜயா பேசி இருந்தார். அவர்கள் ரோகினிக்கு சப்போர்ட் செய்து தான் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் விஜயா, தன்னுடைய லஞ்சத்தை பணத்தை அவர் பையில் வைத்து விட்டார். இதையெல்லாம் அவர் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.

மாதர் சங்கம் தலைவி, நீங்கள் இவ்வளவு மோசமானவர்களா? பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்க நினைக்கிறீர்களா? இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று திட்டி விட்டு செல்கிறார். ரவி-சுருதி இருவரும் விஜயாவின் செயலை கண்டிக்கிறார்கள். பின் இதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டுகிறார். பயத்தில் விஜயாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் முத்து, மீனாவிடம் இந்த பிரச்சனையை எப்படியாவது முடித்து சொல்லி அண்ணாமலை கேட்கிறார். மீனா, மனோஜ் மூலமாக அந்த தலைவியிடம் பேசலாம் என்று சொல்கிறார். பின் மனோஜிடம் இதைப்பற்றி முத்து- மீனா இருவரும் பேசுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ், நான் யாரையும் சந்தித்து பேச முடியாது. யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று திமிராக பேசி இருந்தார். முத்துவிற்கு கோபம் தான் வருகிறது அதற்குப்பின் வீட்டிற்கு ஸ்வேதா வந்தார். அப்போது ஸ்வேதா, மாதர் சங்க தலைவியை பற்றி இப்போதுதான் விசாரித்தேன். அவர்கள் நேரடியாக கோர்ட்டு போக மாட்டார்கள். உங்கள் வீட்டின் முன்பு பெண்களை வர வைத்து பிரச்சாரம் செய்வார்கள். அதற்குப்பின் உங்கள் அம்மாவையும் உங்களையும் கைது செய்வார்கள். அதற்கு பிறகு தான் கோர்ட்டில் கேஸ் நடக்கும் என்றார். இதை கேட்டு மனோஜ் பயந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் ஸ்வேதா, நீங்கள் அந்த தலைவி இடம் பேசவில்லை என்றால் உங்கள் வீட்டில் பல பிரச்சனைகள் வெடிக்கும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார். அதனால் பயந்து போன மனோஜ், தன்னுடைய வீட்டின் முன்பு ரோகினி பிரச்சாரம் செய்வது போலவும் போலீஸ் தன்னையும் தன் அம்மாவையும் கைது செய்வதும் போல கனவு கண்டு கத்துகிறார். பின் மனோஜ், அதெல்லாம் வேண்டாம் நான் தலைவியிடம் பேச வருகிறேன் என்று சொல்கிறார். உடனே முத்து, நீ வழக்கம் போல சுதப்பி விடுவாய். நாங்கள் எழுதித் தருவதை மட்டும் பேசு என்று எல்லோரும் எழுதித் தருகிறார்கள். பின் மாதர் சங்க தலைவியை முத்து- மீனா- மனோஜ் சந்தித்து பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது மனோஜ், என் வாழ்க்கையில் நான் ரோகினியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். அவளுடன் கடைசி வரையும் சந்தோசமாக வாழனும் என்று நினைத்தேன். ஆனால், அவள் எனக்கு மிகப்பெரிய வலியையும் துரோகத்தையும் செய்து விட்டாள். அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லவில்லை என்று நடந்தது எல்லாவற்றையும் சொல்கிறார். அதைக் கேட்டு மாத சங்கத் தலைவி ஷாக் ஆகினார். முத்து, ரோகினியின் பித்தலாட்ட வேலை எல்லாம் சொல்கிறார். இதனால் கோபப்பட்ட மாத சங்கத் தலைவி, இனி நாங்கள் ரோகிணிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்று சொல்கிறார். அந்த சமயம் வந்த ரோகிணியை தலைவியை திட்டி அனுப்புகிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொல்கிறார். அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full