கதிரை பிடிக்கப்போன மனோஜுக்கு ஏற்பட்ட விபரீதம், ரோகினி என்ன செய்யப் போகிறார் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் பேரன்ஸ் மீட்டிங்கில் நடந்ததை பற்றி அண்ணாமலை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது முத்து, வீடியோ காலில் எதற்கு மாஸ்க் போட வேண்டும்? எதையோ மறைக்க பார்க்கிறார்கள் என்று எல்லோரும் மாத்தி மாத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்ட ரோகினிக்கு பயம் ஏற்பட்டது. உடனே அவர், அடுத்தவர்களை பற்றி நாம் எதற்கு பேசனும் என்று அந்த இடத்தை விட்டு மனோஜை அழைத்துக் கொண்டு சென்றார். இதையெல்லாம் பார்த்த முத்து,மீனாவிற்கு சந்தேகம் அதிகமானது.
இருவரும் எப்படியாவது, கிரிஷ் பின் மறைந்து இருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கன்னும் என்றார்கள். நேற்று எபிசோட்டில் மனோஜ் டயட்டீசனுக்காக வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர், விஜயாவிற்கு என்னென்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்றெல்லாம் ஒரு லிஸ்ட் கொடுத்தார். இதை பார்த்தவுடன் எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். பின் அதையெல்லாம் மீனாவை சமைக்க சொன்னார் விஜயா. பின் மனோஜ்க்கும் சேர்த்து சமைக்க சொன்னவுடன் அவர் முடியாது என்றார்.
உடனே முத்து, சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்ற உடன் வேறு வழி இல்லாமல் மனோஜ் ஒத்துக் கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் அருண், வீட்டிற்கு சென்று பூ கொடுத்தார். சீதாவை பார்த்தவுடன் அருண் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் அருண் வேலைக்கு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் விஜயா- சிந்தாமணி இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து மீனா, விஜயாவிற்கு சாப்பாடு கொண்டு வந்தார். மீனாவை பார்த்தவுடன் வழக்கம்போல் விஜயா திட்ட ஆரம்பித்தார். பின் நக்கலாக சிந்தாமணியும் மீனாவை வம்பு இழுத்தார். அது தெரியாமல் விஜயா, மீனாவை திட்டி கொண்டு ஏளனமாக பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணியின் ஒவ்வொரு வார்த்தைக்குமே மீனா பதில் கொடுக்கிறார். இதெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவை திட்டி விடுகிறார். பின் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருக்கிறார். மனோஜ், விஜயாவிற்கு மட்டும் தனியாக டயட் புட்டை சமைத்து வைத்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து ரவி-சுருதி இருவரும் பீட்சா வாங்கி வருகிறார்கள். அதை பார்த்தவுடன் மனோஜ், விஜயாவிற்கு ஆசையாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
இருந்தாலும் இருவரும் டயட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சாப்பிடாமல் இருக்கிறார்கள். எல்லோருமே பீட்சாவை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள். அதற்குப்பின் இரவு வயிறு வலி தாங்க முடியாமல் மனோஜ், விஜயா இருவருமே மாற்றி மாற்றி பாத்ரூம் போகிறார்கள். வயிறு வலி தாங்க முடியாமல் இரண்டு பேருமே ரொம்ப சோர்வாகி விடுகிறார்கள். பின் இருவரும் இனிமேல் டயட்டிஸனே தேவை இல்லை என்று முடிவெடுக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அண்ணாமலை வெளியே வருகிறார்.
https://www.youtube.com/watch?v=wBM8s8hxDas
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தன்னை மோசம் செய்த கதிரை, மனோஜ் பார்த்து விடுகிறார். உடனே அவரை தேடி போகும் போது எதிர்பாராத விதமாக மனோஜுக்கு ஆக்சிடெண்ட் ஆகிறது. அப்போது மனோஜ் கண்ணில் அடிபட்டு விடுகிறது. பின் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை பற்றி ரோகினி வீட்டில் சொல்ல எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் வருகிறார்கள். அதற்குப்பின் மனோஜ், யாருடைய உதவி இல்லாமல் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று எமோஷனலாக பேச, ரோகினி அவருக்கு துணையாக இருக்கிறார்.