குழந்தையாக மாறி மனோஜ் செய்யும் அட்ராசிட்டி, குழம்பி நிற்கும் குடும்பம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஆன்லைன் மூலம் பூ டெலிவரி செய்யலாம் என்று சுருதி, மீனாவிற்கு ஐடியா கொடுப்பதால் முத்து சந்தோஷப்பட்டார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சுருதி செய்து தருவதாக சொன்னார். அதற்குப்பின் விஜயா, ஸ்ருதி நடத்தும் ரெஸ்டாரண்டில் வேலை செய்ய சொன்னார். ஆனால், ரவி முடியாது என்றார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவருக்கும் இடையே சின்ன சின்ன மன கசப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்குப்பின் மீனா, தன் தொழிலில் டெவலப் செய்வதற்காக செய்யும் வேலைகளை எல்லாம் அண்ணாமலையிடம் முத்து சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த விஜயா கிண்டல் செய்து கொண்டிருந்தார். அதோடு ரோகிணியை ரொம்ப இழிவாக பேசினார். இதைக் கேட்ட ரோகிணி, நானும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன். மனோஜ் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் நான் தான் என்றெல்லாம் விஜயாவையே எதிர்த்து பேசி இருந்தார். இதனால் கோபத்தில் கொந்தளித்த விஜயா ருத்ர தாண்டவம் ஆடி ரோகினியை திட்டினார். ஆனால், ஒரு வார்த்தை கூட மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இன்று எபிசோட்டில் சீதாவை பார்க்க வந்த அருண், நான் வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை. ஆனால், எனக்கு உங்க மாமாவை பிடிக்கவில்லை என்று சொல்கிறார். பின் சீதா, நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் உண்மையை சொல்லணும் என்று இருவருமே சமாதானம் ஆகி விடுகிறார்கள். பின் அருண் பாத்ரூமில் இருக்கும் போது முத்து-மீனா இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது முத்து, உன்னுடைய புருஷன் அரை மெண்டல், திமிர் பிடித்தவன் தான். இருந்தாலும் நீ வீட்டை விட்டு வருவதா? எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட அருண் கோபப்படுகிறார். பின் அருண் வீட்டிற்கு வந்திருப்பதை பார்த்த முத்து வாயடைத்து போனார்.
சீரியல் ட்ராக்:
ஒரு வழியாக சீதா, அருணுடன் சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஷோரூமில் குழந்தை ரொம்பவே சேட்டை செய்து கொண்டிருக்கிறது. இதனால் மனோஜ் அந்த குழந்தையை அடித்து விடுகிறார். உடனே அந்த குழந்தையின் பெற்றோர் மனோஜை திட்டி, உனக்கு குழந்தையே பிறக்காது என்கிறார்கள். இதனால் மனோஜ் தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு குழந்தை மருத்துவரிடம் கவுன்சிலிங் வந்திருக்கிறார். அப்போது அவர், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் குழந்தையாக மாறனும் என்று சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் டாக்டரே கிடையாது. பின் மனோஜ், வீட்டில் தொட்டில் கட்டி குழந்தை போலவே விளையாடிடுகிறார். இதை பார்த்த ரோகினிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=YtmsYfiVcc0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ், போலி டாக்டர் சொன்னதை கேட்டு குழந்தையாகவே மாறி வீட்டில் புடவையில் தொட்டில் கட்டி, புட்டியில் பால்குடித்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சாக் ஆகிறார்கள். அண்ணாமலை, என்னடா இது? என்று கேட்கிறார். கோபத்தில் முத்து, மனோஜ் வாயில் இருக்கும் பால்புட்டியை பிடுங்குகிறார். உடனே மனோஜ், குழந்தையைப் போல அடம் பிடித்து கத்துகிறார். பின் முத்து பால்புட்டியை மனோஜ் வாயில் வைக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் மனோஜ் தொட்டிலில் தூங்க, சுருதி ஆட்டி விடுகிறார்.