பேராசையால் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட மனோஜ், ரோகினி சொன்ன விஷயம் - சிறகடிக்க ஆசை

By subhashini · 26/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, மீனாவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, நீ இந்த சிவனுடன் சேர்ந்து கொண்டு கதை எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றார். அந்த சமயம் பார்த்து சிவன், கதை எழுதி எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது பார்வதியின் மகன் வருகிறார். பார்வதி, தன்னுடைய மகனை அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால், பார்வதி மகன் கோபத்தில் சிவனை அதிக சென்று தாய் என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டி விட்டார். இதனால் பார்வதி ரொம்பவே எமோஷனலாக அழுதார்.

சித்தார்த், இந்த வயசில் உனக்கு இந்த காதல் தேவையா? என்று தன்னுடைய அம்மா என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். உடனே அந்த இடத்திற்கு வந்த முத்து, சித்தார்த்தை திட்டினார். சித்தார்த், இதையெல்லாம் உன்னுடைய அம்மா விஜயா தான் என்று சொன்னது என்றவுடன் பார்வதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சித்தார்த், மீண்டும் மீண்டும் சிவன்- பார்வதி நட்பை ரொம்ப கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட முத்து, சித்தார்த்தை அடித்து விட்டார். பின் மீனா, பார்வதி ஆண்டியின் நட்புக்கு நீங்கள் தகுதியானவரே கிடையாது. இப்படி கேவலமாக நடந்து கொள்வதா? என்று மாமியார் என்று கூட பார்க்காமல் விஜயாவை எதிர்த்து பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

கடைசியில் பார்வதி, என்னைக்கி நீ புரிந்து கொள்கிறாயோ அன்னைக்கு என்னை அம்மா என்று கூப்பிடு. எனக்கு என்னுடைய நட்புதான் முக்கியம் என்றார். இதனால் சித்தார்த் கிளம்பி விட்டார். பின் பார்வதி, என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறான நட்பு நீதான். நீ இனிமேல் என்னை பார்க்க வராதே. உன்னுடைய கிளாஸ் இங்கு நடத்த வேண்டாம். வெளியே சென்று விடு என்று விஜயாவை திட்டிய அனுப்பி விட்டார். வீட்டுக்கு வந்த விஜயா, நடந்ததை சொல்லாமல் முத்து-மீனா என்னுடைய நட்பை பிரித்து விட்டார்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா இருவரும் விஜயா செய்த வேலையை வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார்கள். பின் பார்வதி, தன் மகனிடம் பார்வதி பட்ட அசிங்கத்தை எல்லாம் சொல்கிறார்கள். இதனால் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டுகிறார். விஜயா கடைசி வரை தான் செய்த தவறை உணராமல் முத்து, மீனாவை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா செய்த வேலையை கண்டித்து திட்டுகிறார்கள். அதற்குப்பின் மனோஜ், ரோகினி இருவரும் ஆஃபீஸ் சென்று இருக்கிறார்கள். அப்போது ஜீவா, ஆபீஸ் கடனில் சென்று கொண்டிருக்கிறது. 30 லட்சம் கடன் இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்ட ரோகினி, இதற்கு தான் ஆபீஸ், பிஏயெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். என் பேச்சை கேட்டாயா? என்று திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு மனோஜ், ஆர்டர் கொடுத்த மேடம்க்கு போன் செய்து அட்வான்ஸ் கேள் என்று சொல்கிறார். ஆனால், அந்த மேடம் போனை எடுக்கவில்லை. அந்த சமயம் பார்த்து போலீஸ், மனோஜ் ஆபீசிற்குவருகிறார்கள். அப்போது போலீஸ், கடத்தல் விஷயமாக தினேஷை பிடித்து விட்டோம். ஆனால், காரில் அடிபட்டதால் அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது. அவன் கல்யாணி என்ற பெயரை மட்டும் சொல்கிறான். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கிறார். மனோஜ் ஷாக் ஆகி அதெல்லாம் ஒன்றும் தெரியாது என்று மறைத்து விடுகிறார். பின் போலீஸ் சென்றவுடன் மனோஜ், கல்யாணி பற்றி ரொம்ப மோசமாக திட்டி பேசினார். ரோகினியால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full