மீனாவிற்கு எதிராக திருப்பி நிற்கும் மொத்த வீடு, மன வேதனையில் புலம்பும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் அம்மா அப்படி கிடையாது என்றெல்லாம் சொன்னார். முத்து, உனக்கு தெரியுமா? கிரிஷ் அம்மா ரொம்ப கேவலமானவள் என்று சொன்னார். கோபத்தில் ரோகினி, நீ சொல்வதெல்லாம் பொய், நான்தான் கிரிஷ் அம்மா என்று ரோகிணி என்று உண்மையை உளறி விட்டார். மொத்த வீடுமே ஆடிப் போகிறது. அப்போது முத்து, இவள் பெயர் கல்யாணி. கிரிஷ் உடைய பாட்டி தான் ரோகிணி உடைய அம்மா என்று எல்லா உண்மையுமே சொல்லி விட்டார். இதைக் கேட்டு மனோஜ், விஜயா ரொம்பவே அதிர்ச்சியில் நின்றார்கள்.
கிரிஷ் அம்மா ரோகினி தான் என்ற உண்மையை தெரிந்தவுடன் மொத்த வீடு கொந்தளிக்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயா, ரோகினியை அடித்தார். அண்ணாமலை வேண்டாம் என்று தடுத்து விட்டார். மனோஜ், ரோகினியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். ரோகினி, போகமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எல்லோர் காலிலும் விழுந்து கெஞ்சினார். ஆனால், விஜயா- மனோஜ் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் விஜயா, அவளுடைய கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளை வெளியே அனுப்புடா என்றார்.
சிறகடிக்க ஆசை:
மனோஜ், அந்த தாலியை வைத்து நான் என்ன செய்வது? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்று ரோகிணி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ரோகினி, ரொம்ப நன்றி மீனா.எல்லா உண்மையும் முத்துவிடம் சொல்லிவிட்டீர்கள் தானே என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே மீனா பக்கம் திரும்பினார்கள். முன்னாடியே உண்மை தெரியுமா என்று விஜயா, முத்து, அண்ணாமலை எல்லோரும் மாத்தி மாத்தி மீனாவை கேள்வி கேட்டார்கள். ஒரு கட்டத்தில் மீனா நடந்ததை எல்லாம் சொல்லி விட்டார். விஜயா, எல்லோரும் சேர்ந்து என் மகன் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என்றார். முத்து, ரோகிணி செய்தது தவறு என்றால் நீ செய்ததும் தவறுதான் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, பயங்கரமாக கோபப்பட்டு மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். விஜயா, உனக்கும் ரோகிணிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என் மகன் வாழ்க்கை இப்படி அழித்துவிட்டீர்களே? என்று இன்னும் கோபப்படுகிறார். ஸ்ருதி- ரவி எல்லோருமே மீனாவிற்கு எதிராக தான் பேசுகிறார்கள். மீனா, தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், யாருமே கேட்பதாக இல்லை. அதற்குப்பின் ஸ்ருதி, நீங்கள் எதுவாக இருந்தாலும் வீட்டில் சொல்லி இருக்கணும். அட்லீஸ்ட் என்னிடம் ஆவது சொல்லி இருக்கணும் என்று சொல்கிறார். மீனா, என்ன நடந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசி அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ், ரோகினி உடைய நினைவுகளை நினைத்து எமோஷனலாக கத்தி அழுது கொண்டிருக்கிறார். பின் மீனா சமைத்து வைத்து வீட்டில் எல்லோரையும் கூப்பிட, யாரும்
வரவில்லை. இன்னொரு பக்கம் மீனா, மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். இதைக்கேட்ட மகேஷ்வரின் கணவர், உன் தோழி இங்கு தங்கத் தேவையில்லை. அவர்கள் வேறு எங்காவது தங்கி கொள்ளட்டும் என்று சொல்கிறார். இதை கேட்ட ரோகிணி அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் வித்யா வீட்டிற்கு சென்ற ரோகிணி நடந்தது எல்லாம் சொல்கிறார். அப்போது முருகன், முத்து அண்ணன் ரொம்ப பழக்கம். ரோகினி இங்க தங்குவதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார் இதனால் இடிந்து போய் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.