ரோகினி விரித்த வலையில் வசமாக சிக்கிய மனோஜ், விஜயா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை

By subhashini · 4/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், இவனால் தான் என் அம்மா இறந்துவிட்டார். அவன் என் அம்மாவை பார்க்க கூடாது என்று பிரச்சனை செய்தார். எல்லோரும் எடுத்துச் சொல்லியும் அருண் கேட்கவில்லை. இதனால் முத்து பிரச்சனை வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்த இரண்டு ரவுடிகள், கடையையும் நீத்துவையும் அடித்த விஷயத்தை பற்றி பேசி இருந்தார்கள். தன் அப்பா தான் இந்த வேலையை செய்தது என்று அறிந்த சுருதி கோபப்பட்டு தன்னுடைய அப்பாவிடம் சண்டை போட்டார். செல்வத்தின் மனைவி, குழந்தை இருவரும் முத்துவை சந்தித்து பேசி இருந்தார்கள். முத்துவும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த சமயம் பார்த்து மீனாவிற்கு போன் செய்த ஸ்ருதி, தன் அப்பா செய்த வேலையை எல்லாம் சென்றார். பின் வீட்டில் மீனா, சுருதியின் அப்பா செய்த கேவலமான காரியத்தை சொன்னார். இதனால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் உண்மை அறிந்த ரவி, சுருதியின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா- அம்மா இருவரிடம் சண்டை போட்டார். அது மட்டும் இல்லாமல் கடையை அடித்து நொறுக்கியதற்கும், நீத்துவின் காலை உடைத்ததற்கும் ஒன்பது லட்சம் செலவாகி இருக்கிறது. அது நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்றார். ஸ்ருதியின் அப்பாவால் எதுவுமே பேச முடியவில்லை.

சிறகடிக்க ஆசை:

இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா இருவரும் வக்கீலை சந்தித்து செல்வம் ஜாமீன் விஷயமாக பேசுகிறார்கள். வக்கிலுமே சீக்கிரத்தில் ஜாமின் கிடைத்துவிடும் தைரியமாக இருங்கள் என்கிறார்.
இன்னொரு பக்கம் அருணின் வீட்டிற்கு சென்ற செல்வத்தின் மனைவி மன்னிப்பு கேட்டுவிட்டு ஜாமின் விஷயமாக பேசுகிறார். கோபத்தில் அருண் செல்வத்தின் மனைவியிடமும் அவருடைய நண்பர்களிடமும் மோசமாக பேசுகிறார். இதனால் முத்துவின் நண்பர்களுக்கும் அருணுக்கும் இடையே சண்டை நடக்கிறது. அந்த சமயம் வந்த முத்து, செல்வத்தின் மனைவியையும் அவருடைய நண்பர்களையும் அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் விஜயா, வீட்டில் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டிருப்பதால் பூஜை செய்யலாம் என்று சொல்கிறார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நீயே பார்த்து கொள் என்று சொல்கிறார். பின் மனோஜ்க்கு போன் செய்து ரோகினி ரொம்ப ரொமான்டிக்கா பேசுகிறார்.. மனோஜ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் ரோகிணி பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். முத்துவும் சமாதானம் செய்கிறார். இருந்தாலும் ரவிக்கு ரொம்ப கஷ்டமாகி விடுவதால் எமோஷனலாக பேசுகிறார்.

https://www.youtube.com/watch?v=A1VV-mXQak0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ்க்கு போன் செய்த நபர், ஒரு பார்க்கில் ஒரு நபருடன் உங்கள் மனைவி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார். அதை நம்பிக்கொண்டு மனோஜ் பார்க்கிற்கு செல்கிறார். ஆனால், அது ரோகினி வைத்த ஆள் தான். பார்க்கிற்கு வந்த மனோஜ், ரோகினிக்கு தெரியாமலேயே வாட்ச் பண்ணுகிறார். அங்கு இருந்த செக்யூரிட்டி எல்லோருமே மனோஜை
சுற்றி வளைத்து கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் மனோஜ், அவள் என்னுடைய மனைவி என்று சொல்வதால் ரோகினி ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full