வம்பிழுத்து நாயிடம் கடி வாங்கிய மனோஜ், சோகத்தில் முத்து குடும்பம் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 26/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் படிக்கும் ஸ்கூலில் இருந்து சில ஆசிரியர்கள் பொருள் வாங்குவதற்காக மனோஜ் கடைக்கு வந்திருந்தார்கள். அப்போது அந்த ஆசிரியர், மனோஜை சிறப்பு விருந்தினராக தங்கள் பள்ளிக்கு அழைத்தார். அதற்குப்பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற சுருதி, ரவி ஹோட்டலில் நடந்த விஷயத்தை பற்றி கேட்டார். அதற்கு ஸ்ருதி அம்மா, நீத்து சரியில்லை. ரவியை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்க தான் இப்படியெல்லாம் செய்தேன் என்றார். சுருதி, நீ செய்த வினையால் என் வாழ்க்கையே போய்விடும் போல இருக்கிறது என்று கோபப்பட்டு கத்தினார்.

ஸ்ருதி, நீயே ரவி-நீத்துவை சேர்த்து வைத்து விடாதே. தயவு செய்து உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று தன் அம்மாவை திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மனோஜ், தன்னை ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். வழக்கம் போல் முத்து கிண்டல் அடித்தார். இதனால் ரோகிணி கோபப்பட்டு முத்துவை திட்ட, மீனா சண்டைக்கு போனார். பின் முத்து, கல்வி தான் முக்கியம் என்பது போல் பேசி இருந்தார். மனோஜ், பள்ளியில் எப்படி பேசணும் என்று ஸ்பீச் கொடுத்தார். ஆனால், மனோஜ் பணம் முக்கியம் என்று ஆங்கிலத்தில் பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

இதை கேட்ட விஜயா, நீ ரொம்ப திறமைசாலி மனோஜ். ஆனால், ரோகினி மாதிரி பொய் சொல்லி யாரையும் ஏமாற்றக்கூடாது என்று சொல்லி கொடு என்றார். பின் மனோஜ் பேச்சை கேட்டு தெருவில் இருக்கும் நாய் வெறிபிடித்து குறைத்தது. உடனே கோபத்தில் மனோஜ் அந்த நாயை கல்லால் அடித்தார். பின் நாயின் உரிமையாளர் முத்து வீட்டில் ப்ரச்சனை செய்தார்கள். பின் மனோஜ், பணம் கொடுத்து அந்த நபரை அனுப்பி விட்டார். க்ரிஷ் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவர்களுடைய பெற்றோர்களுமே தங்களுடைய பிள்ளைகளுக்கு பாசமாக சாப்பாடு ஊட்டி விட்டு கவனித்துக் கொண்டார்கள்.

நேற்று எபிசோட்:

இதை பார்த்து கிரிஷ்க்கு ஏக்கமாக இருந்தது. பின் தன் அம்மாவிற்கு போன் செய்து கிரிஷ் பேசினார். கோபத்தில் ரோகினி திட்டி போனை வைத்து விட்டார். அதே பள்ளிக்கூடத்தின் விழாவிற்கு டெக்கரேஷன் செய்ய மீனா வந்திருந்தார். மீனாவின் ஆர்டரை கெடுக்க சிந்தாமணியும் வந்தார். பின் மீனா தனக்கு தெரிந்தவரிடம் என்னை விட அவர்கள் குறைவாக தான் ஆர்டர் எடுப்பார்கள் என்றார். இதனால் மீனா புத்திசாலித்தனமாக ஆர்டருக்கான செலவை கம்மியாக சொல்வதால் சிந்தாமணியும் அதைவிட குறைவாக சொல்லிவிட்டார். இதனால் சிந்தாமணிக்கு நஷ்டம் ஏற்பட்டது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மீனாவை பார்த்த கிரிஷ் கத்திக் கொண்டே வந்தார். ஆனால், மீனா அதை கவனிக்கவே இல்லை. இன்னொரு பக்கம் மனோஜ் ஸ்பீச் கொடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு தான் மனோஜ் செல்கிறார் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரோகினி ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் விஜயா மரக்கன்றுகளை நடுவதை பற்றி எல்லாம் பேசிய வீடியோ போட்டுக் கொண்டிருந்தார். இதை எல்லாம் பார்த்து முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் மனோஜ் காரில் சென்று கொண்டு இருக்கும் போது போன் செய்த ரோகினி, எனக்கு உடம்பு முடியவில்லை, என்னவோ செய்கிறது என்று ஏதேதோ காரணங்களை சொல்வதால் மனோஜ் பதறி கொண்டு வீட்டிற்கு கிளம்பப் பார்த்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி உடம்பு முடியவில்லை என்று சொன்னதால் மனோஜ் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் வீட்டிற்கு வருகிறார். அப்போது வீட்டு வாசலில் நாய், மனோஜை பார்த்து குறைக்கிறது. கோபத்தில் மனோஜ் அந்த நாயை அடிக்கும் போது அந்த நாய் மனோஜின் காலை கடித்து விடுகிறது. பின் வலி தாங்க முடியாமல் மனோஜ் கத்துகிறார். அந்த நாயின் உரிமையாளர், மனோஜை வீட்டில் கொண்டு வந்து விட்டு நடந்ததை சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே வழக்கம் போல மனோஜை கேலி செய்து பேசுகிறார்கள். அப்போது மனோஜை செக் செய்த டாக்டர், அந்த நாய் உயிருடன் இருக்க வேண்டும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பயமுறுத்துவிட்டு செல்கிறார். அதனால் விஜயா-மனோஜ் இருவருமே பதறுகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full