ஜோதிடர் பேச்சை கேட்டு முட்டாள்தனமாக மனோஜ் செய்யும் வேலை - சிறகடிக்க ஆசை

ஜோதிடர் பேச்சை கேட்டு முட்டாள்தனமாக மனோஜ் செய்யும் வேலை

By subhashini · 23/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீக்கிரமாகவே மீனா, பார்வதியின் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி தன்னுடைய அம்மாவை தங்க வைப்பதற்கு அனுமதி கேட்டார். பார்வதி, சத்யா-ரேகா கல்யாணம் நடக்கும் வரை உன் அம்மா என் வீட்டிலேயே தங்கி கொள்ளட்டும். எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அதற்குப்பின் மீனா கிளம்பி போனார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவிற்கு போன் செய்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. அண்ணாமலை, சந்திரா எல்லாருமே போன் செய்தார்கள். ஆனால், மீனா போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து கொண்டு முத்து எல்லா இடங்களிலும் தேடினார்.

முத்து, எங்கு தேடியும் மீனா கிடைக்கவில்லை என்றவுடன் சிந்தாமணியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சிந்தாமணி தன்னுடைய அடியாட்களுக்கு பணம் கொடுத்தார். இதை கவனித்த முத்து, மீனாவை என்ன செய்தாய்? எதற்காக கடத்தினாய்? என்றெல்லாம் மிரட்டினார். சிந்தாமணியும் அவருடைய கணவரும் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. நீ போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்பளைண்ட் கொடு என்று தெனாவட்டாக பதில் சொன்னார்கள். பின் வேதனையுடன் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவின் வண்டி இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் மீனாவை பார்த்தவுடன் முத்து எமோஷனலாக பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அப்போது மீனா, என்னுடன் வேலை செய்பவரின் மகளுக்கு பிரசவ வலி வந்து விட்டது. அதனால் தான் என்னால உங்களிடம் தகவல் சொல்ல முடியவில்லை என்றார். அதற்குப்பின் டூரிஸ்ட் அசோசியேஷனிலிருந்து சிலர் முத்துவை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தார்கள். முத்துவின் குணங்களையும் அவர் செய்து வரும் நல்ல விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டு தங்களுடைய அசோசியேஷனில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதாக சொல்லி இருந்தார்கள். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். அதோடு அவர்கள் முத்துவை ரொம்பவே பெருமையாக புகழ்ந்து பேசி இருந்தார்கள். இதைக் கேட்டு அண்ணாமலை ரொம்பவே பெருமைப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜின் ஷோரூமுக்கு ஜோதிடர் ஒருவர் வருகிறார். அவர் உள்ளே நுழைந்தவுடன் இங்கு ஒரு நெகட்டிவ் வைப்ரேஷன் இருக்கிறது என்கிறார். மனோஜ்க்கு ஒன்றுமே புரியவில்லை. ஜோதிடர், அந்த நெகட்டிவ் வைப்ரேஷனே நீதான் என்று சொல்கிறார். அதைக் கேட்டு ஷாக் ஆன மனோஜ், இப்படி சொல்கிறீர்கள்? என்கிறார். ஜோதிடர், நீங்க ரொம்ப கஷ்டத்தில் இருக்கீங்க. உன் வாழ்க்கை பின்னோக்கி செல்கிறது என்கிறார். அதற்கு மனோஜ், ஆமாம். அதை எப்படி சரி செய்வது என்று கேட்கிறார். அதற்கு அந்த ஜோதிடர், உங்க பெயரை மாற்ற வேண்டும் என்கிறார். மனோஜ் ஒத்து கொள்கிறார்.

ஜோதிடர், உங்கள் பெயரை மாற்றினால் எல்லாமே சரியாக விடும். ஒரே நாளில் உங்கள் கடையில் கோடிக்கு மேல் வியாபாரமாகும்.

சீரியல் ட்ராக்:

உங்கள் பெயருக்கு முன்னால் தான் வைக்கணும். பப்பரப்பா மனோஜ் என்று வையுங்கள். சூப்பராக இருக்கும். உங்கள் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்கிறார். அதைக் கேட்டவுடன் மனோஜின் முகம் சுருங்கிறது. ஜோதிடர், இனிமேல் உங்கள் எல்லோரையும் இப்படி தான் கூப்பிடனும் என்கிறார். இன்னொரு பக்கம் ரேகா-சத்யா இருவரும் கிராமத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கிராம மக்கள் எல்லோருமே ரேகா- சத்யா இருவரும் போட்டோ, ரீல்ஸ் எல்லாம் போடுவதைப் பார்த்து கோபப்பட்டு பாட்டியிடம் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள். பாட்டி, உங்கள் பிள்ளைகள் போனை பார்த்து கெட்டுப் போவதை விட இவர்கள் ஊரை சுற்றி பார்ப்பது மூலம் தான் கெட்டுக் போகிறார்களா? என்று திட்டி ஊர் மக்களை விரட்டி அனுப்புகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full