கோர்ட்டில் ரோகினிக்கு எதிராக இருக்கும் ஆதாரங்கள், மனோஜுக்கு விவகாரத்து கிடைக்குமா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் தோழிகள், உங்களுக்கு செய்த துரோகத்திற்கு இதெல்லாம் குறைவு. இவர்களை சும்மா விடக்கூடாது என்றார். பின் மீனா, தன்னுடைய தோழிகளை திட்டினார். இருந்தாலும் ரோகினி, மீனா- முத்துவின் மீது தான் பயங்கரமாக கோபப்பட்டார். பின் மனோஜ் கடைக்கு சென்ற ரோகினி, முத்து-மீனா செய்ததை சொல்லி அழுதார். உடனே கோபத்தில் மனோஜ், ரோகினியை திட்டி அனுப்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ், முத்து-மீனா செய்த வேலையை அண்ணாமலையிடம் சொன்னார். மீனா, நாங்கள் அடிக்கவில்லை. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றார்.
வீட்டிற்கு வந்த போலீஸ், ரோகிணி புகார் கொடுத்திருப்பதாக சொல்லி முத்து-மீனா இருவரையும் கைது செய்தார்கள். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் ரோகினி, முத்து-மீனாவால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மீண்டும் ட்ராமா போட்டார். அதை நம்பிய போலீஸ், முத்து-மீனா மீது எஃப் ஐ ஆர் போட சொன்னார். அந்த சமயம் பார்த்து ஒரு சிறுவனுக்கு தொண்டையில் சாப்பிடும் பொருள் அடைத்ததால் முத்து உதவி செய்து அந்த சிறுவனை காப்பாற்றினார். இதை பார்த்த போலீஸ் மனம் இறங்கி ரோகினியை விசாரித்தார். பின் ரோகினி செய்த எல்லா பித்தலாட்ட வேலையையும் முத்து-மீனா சொன்னார்கள்.
சிறகடிக்க ஆசை:
அப்போது ரோகினி இல்லை என்றார். உடனே அங்கு வந்த அருண், முத்து-மீனா சொல்வது தான் உண்மை என்றார். இதனால் போலீஸ் ரோகினியை திட்டி அனுப்பி விட்டார்கள். பின் ரோகினி, மனோஜுடன் சேர்ந்து வாழ நான் என்ன வேணாலும் செய்வேன் என்று சவால் விட்டு சென்றார். வீட்டிற்கு வந்த முத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொன்னார். அப்போது வந்த பைனான்சியர், சிந்தாமணி எனக்கு தெரிந்தவர்தான். அவர்தான் உங்களுடைய கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்னிடம் பேசினார். பேங்கில் இருக்கும் கடனை நானே அடைந்து விடுகிறேன். பத்திரத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்றார். இதைக் கேட்ட முத்து-மீனா இருவரும் வேண்டாம் என்றார்கள். பின் நடந்ததை பைனான்சியர் சிந்தாமணியிடம் சொன்னார். சிந்தாமணி, முத்து-மீனா அந்த வீட்டை விட்டு போனால் தான் நிம்மதி என்றார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ்க்கு போன் செய்து ரொமான்டிக்காக பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, வீட்டு பத்திரத்தை எப்படியாவது மூக்க வேண்டும். கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்று மீனாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நீத்து- ரவி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஸ்ருதி சண்டை வாங்கிக் கொண்டிருக்கிறார். ரவி எவ்வளவு எடுத்து சொல்லியுமே சுருதி புரிந்து கொள்ளவில்லை. நீத்து விடம் வேலை செய்வதை விட்டு வர சொல்கிறார் சுருதி. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது. அதற்கு பின் விஜயா வக்கீலை சந்தித்து விவாகரத்து விஷயமாக பேசுகிறார். அப்போது விஜயா, முத்துவிற்கு ஃபோன் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
முத்து, தன் அம்மா முதன் முதலாக போன் செய்தால் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பின் வக்கீல் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முத்து பதில் சொல்கிறார். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வருவதால் ஆஜராகிறார்கள். மனோஜ் தரப்பு வக்கீல், ரோகினி செய்த எல்லா பித்தலாட்ட வேலைகளையும் சொல்கிறார். பின் நீதிபதி, ரோகினிடம் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.