கோபத்தில் ரோகினியின் கழுத்தை பிடிக்கும் மனோஜ், வேதனையில் உடைந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை
+விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி, என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறான நட்பு நீதான். நீ இனிமேல் என்னை பார்க்க வராதே. உன்னுடைய கிளாஸ் இங்கு நடத்த வேண்டாம். வெளியே சென்று விடு என்று விஜயாவை திட்டிய அனுப்பி விட்டார். வீட்டுக்கு வந்த விஜயா, நடந்ததை சொல்லாமல் முத்து-மீனா என்னுடைய நட்பை பிரித்து விட்டார்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருந்தது. முத்து, மீனா இருவரும் விஜயா செய்த வேலையை வீட்டில் எல்லோரிடமும் சொன்னார்கள்.
பின் பார்வதி, தன் மகனிடம் பார்வதி பட்ட அசிங்கத்தை எல்லாம் சொன்னார்கள். இதனால் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டினார். விஜயா கடைசி வரை தான் செய்த தவறை உணராமல் முத்து, மீனாவை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா செய்த வேலையை கண்டித்து திட்டினார்கள். அதற்குப்பின் மனோஜ், ரோகினி இருவரும் ஆஃபீஸ் சென்று இருந்தார்கள். அப்போது ஜீவா, ஆபீஸ் கடனில் சென்று கொண்டிருக்கிறது. 30 லட்சம் கடன் இருக்கிறது என்றார். இதை கேட்ட ரோகினி, இதற்கு தான் ஆபீஸ், பிஏயெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். என் பேச்சை கேட்டாயா? என்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு மனோஜ், ஆர்டர் கொடுத்த மேடம்க்கு போன் செய்து அட்வான்ஸ் கேள் என்றார். ஆனால், அந்த மேடம் போனை எடுக்கவில்லை. அந்த சமயம் பார்த்து போலீஸ், மனோஜ் ஆபீசிற்கு வந்தார்கள். அப்போது போலீஸ், கடத்தல் விஷயமாக தினேஷை பிடித்து விட்டோம். ஆனால், காரில் அடிபட்டதால் அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது. அவன் கல்யாணி என்ற பெயரை மட்டும் சொல்கிறான். உங்களுக்கு தெரியுமா? என்றார். மனோஜ் ஷாக் ஆகி அதெல்லாம் ஒன்றும் தெரியாது என்று மறைத்து விட்டார். பின் போலீஸ் சென்றவுடன் மனோஜ், கல்யாணி பற்றி ரொம்ப மோசமாக திட்டி பேசினார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், ஆர்டர் கிடைக்காமலேயே ஆபீஸ் திறப்பதற்கு 30 லட்சம் கடன் வாங்கி இருப்பதால் அந்த கடன் கொடுத்த கந்து வட்டி முத்து வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். மனோஜ், எடுத்து சொல்லியுமே அவர் கேட்கவில்லை. கந்து வட்டி, உன்னுடைய பெற்றோர்கள் கையெழுத்து போட்டால் இந்த இடத்தை விட்டு கிளம்பவும் இல்லை என்றால் உன்னை தூக்கி விடுவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். அண்ணாமலை வேறு வழியில்லாமல் மனோஜ் வாங்கிய கடனை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்து முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அந்த கந்துவட்டி ஆள் கிளம்பிய உடன் முத்து, மனோஜிடம் சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அண்ணாமலை, முத்துவை தடுக்கிறார். பின் மனோஜ், யாரும் எனக்காக கஷ்டப்பட தேவை இல்லை. அவரை சொத்து பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கிறார். இதை கேட்டு அண்ணாமலை உடைந்து விடுகிறார். விஜயா, மனோஜை திட்டி யாருக்காகவும் இந்த வீட்டை விற்க முடியாது. உன் கடனை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அதற்குப்பின் கோபத்தில் இருக்கும் மனோஜ், கிரிஷை அடிக்கிறார். ரோகினி, ஏன் அடித்தாய்? என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், ரோகினி கழுத்தை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறார். பின் அது கல்யாணி பேய் இல்லை என்றவுடன் மனோஜ், ரோகிணி மீது கையை எடுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் அண்ணாமலை வேதனையில் புலம்ப முத்து ஆறுதல் சொல்கிறார்.