என்னது மனோஜுக்கு இரண்டாவது கல்யாணமா? முத்து கொடுத்த அதிரடி டீவ்ஸ்ட் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி வீட்டில் டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக சில டாக்குமெண்டில் விஜயாவிடம் கையெழுத்து வாங்க வந்தார் கோகிலா. அந்த சமயம் வந்த முத்து, விஜயாவின் சுயரூப வீடியோவை போட்டு காண்பித்தார். அதை பார்த்த கோகிலா, கொந்தளித்து விஜயாவை திட்டி விட்டு சென்றார். டாக்டர் பட்டம் விஜயாவிற்கு கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் முத்து-மீனா என்று விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் விஜயா, நடந்ததை எல்லோரிடமும் சொன்னார். மனோஜ் மட்டும் தான் விஜயாவிற்கு சப்போர்ட் செய்தார்.
டாக்டர் பட்டத்தை நல்லது செய்துதான் வாங்க வேண்டும். பொய்யாக ஏமாற்றி வாங்க கூடாது என்றெல்லாம் அண்ணாமலை சொன்னார். ஆனால், விஜயா ஏற்றுக்கொள்ளவே இல்லை. வழக்கம்போல் மீனாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். பின் மனோஜ் தன்னுடைய நண்பர் சொன்னது போல ராணியின் வீட்டிற்கு சென்று தவறாக நடப்பது போல நடித்தார். உடனே ராணி, கத்தி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் வந்து மனோஜ் துடைப்பத்தாலே அடி வெளுத்து வாங்கினார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா, வீட்டில் உள்ள எல்லோருக்குமே சூப் செய்து தந்தார். அதை சாப்பிட்டு வீட்டில் உள்ள எல்லோருமே புகழ்ந்து பாராட்டினார்கள். ஆனால், விஜயா வழக்கம் போல கிண்டல் செய்தார். அப்போது ஸ்ருதி, என்னுடைய ஹோட்டலுக்கு நீங்க பார்டனராக சேர்ந்து விடுங்கள் என்றார். அதற்கு மீனா, நீங்கள் ரவியை சம்மதிக்க வைத்து, அவருடைய மனதில் என்ன இருப்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வந்தார். மனோஜின் நிலைமை பார்த்து எல்லோருமே பதறிப் போனார்கள். விஜயாவிற்கு ரொம்ப பயமாக இருந்தது.
நேற்று எபிசோட்:
அப்போது மனோஜ், உண்மையை சொல்லாமல் ஒரு பெண்ணை தான் காப்பாற்றியதாக பொய் சொன்னார். ஆனால், அதை ரோகினி நம்பவே இல்லை. பின் ரூமில் ரோகினி, என்னானது என்றார். அதற்கு மனோஜ், எல்லா உண்மையும் சொல்ல ரோகினி திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் யோகா கிளாசில் பார்வதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரை காதலிக்கும் நபர் கேக் வாங்கி வந்து பரிசு கொடுத்தார். அப்போது மீனா, ப்ரூட் பொக்கே கொடுத்தார். மீனாவின் ஐடியாவை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால், சிந்தாமணி, இதை வளர விடக்கூடாது என்று பொறாமைப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=0-pKInNZtUw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து, மனோஜ்- ராணி இடம் தவறாக நடந்து இருக்கிறான். அவருடைய கற்பை சூறையாடி இருக்கிறான். அதனால் அவன் ராணி கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று சொல்கிறார். விஜயா, அதை நம்பவே இல்லை. மனோஜ்க்கு தான் சப்போர்ட் செய்து பேசுகிறார். கடைசியில் முத்து, உன்னை அவன் எனக்கு ஏமாற்றியது உண்மை தானே, மனோஜ் உன் கழுத்தில் தாலி கட்டுவான் என்று சொன்னவுடன் ராணி ரொம்பவே பதறுகிறார்.