ரோகினியின் திருவிளையாடல் ஆரம்பம், வேதனையில் புலம்பும் சகோதரர்கள் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 5/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, தன் அப்பா செய்த வேலையை எல்லாம் சென்றார். பின் வீட்டில் மீனா, சுருதியின் அப்பா செய்த கேவலமான காரியத்தை சொன்னார். இதனால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் உண்மை அறிந்த ரவி, சுருதியின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா- அம்மா இருவரிடம் சண்டை போட்டார். அது மட்டும் இல்லாமல் கடையை அடித்து நொறுக்கியதற்கும், நீத்துவின் காலை உடைத்ததற்கும் ஒன்பது லட்சம் செலவாகி இருக்கிறது. அது நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்றார். ஸ்ருதியின் அப்பாவால் எதுவுமே பேச முடியவில்லை.

முத்து, மீனா இருவரும் வக்கீலை சந்தித்து செல்வம் ஜாமீன் விஷயமாக பேசி இருந்தார்கள். வக்கிலுமே சீக்கிரத்தில் ஜாமின் கிடைத்துவிடும் தைரியமாக இருங்கள் என்றார். இன்னொரு பக்கம் அருணின் வீட்டிற்கு சென்ற செல்வத்தின் மனைவி மன்னிப்பு கேட்டுவிட்டு ஜாமின் விஷயமாக பேசி இருந்தார். கோபத்தில் அருண் செல்வத்தின் மனைவியிடமும் அவருடைய நண்பர்களிடமும் மோசமாக பேசி இருந்தார். இதனால் முத்துவின் நண்பர்களுக்கும் அருணுக்கும் இடையே சண்டை நடக்கிறது. அந்த சமயம் வந்த முத்து, செல்வத்தின் மனைவியையும் அவருடைய நண்பர்களையும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் விஜயா, வீட்டில் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டிருப்பதால் பூஜை செய்யலாம் என்றார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நீயே பார்த்து கொள் என்று சொன்னார். பின் மனோஜ்க்கு போன் செய்து ரோகினி ரொம்ப ரொமான்டிக்கா பேசி இருந்தார். மனோஜ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் ரோகிணி பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவிடம் மன்னிப்பு கேட்டார். முத்துவும் சமாதானம் செய்கிறார். இருந்தாலும் ரவிக்கு ரொம்ப கஷ்டமாகி விடுவதால் எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாடியில் வாங்கி வந்த பியரை முத்து-மனோஜ்- ரவி குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பின் மூவருமே தங்கள் மனதுக்குள் இருக்கும் வேதனையை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் ரவி மனதார முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். முத்து, ரவிக்கு ஆறுதல் சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ்க்கு போன் செய்த ஒரு நபர், உங்கள் மனைவி ரோகினி பார்க்கில் யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லி ஏத்தி விடுகிறார். இதனால் மனோஜிற்கு பயங்கர கோபம் வருகிறது. அந்த நபர் ரோகினி சொன்னதைப் போலவே செய்துவிட்டார். மனோஜ் பார்க்கிற்கு சென்று ரோகிணி செய்யும் வேலையை கையும் களவுமாக பிடிக்க நினைக்கிறார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது சீதாவின் கையில் அடிபட்டு இருப்பதை மீனா விசாரிக்கிறார். பின் ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் சீதா அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full