மனோஜ் செய்த வேலையால் ஆடிப்போன அண்ணாமலை, கோபத்தில் முத்து - சிறகடிக்க ஆசை

By subhashini · 25/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி,கிரிஷை மேனேஜர் தினேஷ் கடத்தின விஷயத்தை சொன்னார். பின் தன்னுடைய முழு விவரமும் தினேஷுக்கு தெரியும் என்ற உண்மையையெல்லாம் ரோகிணி சொன்னார். இதை கேட்ட மீனா, வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல் என்றார். ஆனால், ரோகினி முடியாது என்றார். மீனா, நீ மனோஜ் போன் நம்பரை கொடுத்து பணம் கேட்க சொல் என்று ஒரு ஐடியா சொன்னார். அதற்குப் பின் தினேஷ், மனோஜ்க்கு போன் செய்து கிரிஷை கடத்தின விஷயத்தை சொல்லி பணம் கேட்டார். உடனே முத்து, பணம் தருகிறேன். கிரிஷ் இருக்கும் இடத்தைப் பற்றி எல்லாம் கேட்க சொன்னார்.

அதற்குப்பின் மனோஜ், என்னால் பணம் தர முடியாது. நீ சொன்னதால்தான் சொன்னேன் என்றார். உடனே முத்து, பணத்தை கொடுப்பது போல் அவன் சொன்ன இடத்திற்கு சென்று அவனை பிடித்து விடலாம் என்றெல்லாம் ஐடியா சொன்னார். அதற்கு பின் தினேஷ் சொன்ன இடத்திற்கு மனோஜ் வந்துவிட்டார். முத்து யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தார். பின் தினேஷ், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது முத்து அவனைப் பிடித்து விட்டார். இருந்தாலும் எப்படியோ தினேஷ் தப்பித்து விட்டார். முத்து அவர்களை துரத்திக் கொண்டே வரும்போது அருண் அங்கு வந்தார். உடனே முத்து, நடந்ததை சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

அருண், அந்த திருட்டு கும்பலை தேடி சென்றார். முத்து கிரிசை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின் முத்து, மனோஜ் நம்பர் எப்படி வந்தது? எதற்காக கிரிஷை கடத்தனும் என்றெல்லாம் சந்தேகப்பட்டார். அதற்கு அண்ணாமலை, எனக்கும் இந்த கேள்விதான் எழுகிறது. இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. நீ சீக்கிரத்தில் அதை கண்டுபிடி என்றார். உடனே ரோகினி ரொம்பவே பயப்பட்டார். இன்னொரு பக்கம் அருண் கடத்தல் கும்பலை பிடித்துக் கொடுத்ததால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டியதை பற்றி வீட்டில் சொல்லி சந்தோஷப்பட்டார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அருணுக்கு பிரமோஷன் தருவதாக சொன்னார்கள். இதை கேட்டு அருண் வீட்டில் எல்லோருமே சந்தோசப்படுகிறார்கள். பின் இதைப்பற்றி சத்யா, மீனாவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, நீ இந்த சிவனுடன் சேர்ந்து கொண்டு கதை எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றார். அந்த சமயம் பார்த்து சிவன், கதை எழுதி எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது பார்வதியின் மகன் வருகிறார். பார்வதி, தன்னுடைய மகனை அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால், பார்வதி மகன் கோபத்தில் சிவனை அதிக சென்று தாய் என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டி விட்டார். இதனால் பார்வதி ரொம்பவே எமோஷனலாக அழுதார்.

https://www.youtube.com/watch?v=r-V9QHjB8GM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் மனோஜ் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருக்கிறார். இதனால் கடன் கொடுத்த பிசினஸ் மேன் வீட்டிற்க்கே வந்து மிரட்டுகிறார். இதனால் முத்து கோபப்படுகிறார். மனோஜ், நான் பணத்தை தருகிறேன் என்று சொல்கிறார். உடனே பிசினஸ் மேன், உன்னுடைய பெற்றோர்கள் யாராவது ஒருவர் கையெழுத்து போடணும் என்று என்று சொல்கிறார். இதனால் அண்ணாமலை கையெழுத்து போடுகிறார். அதற்குப்பின் முத்து, அவர்களை இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே என்று திட்டுகிறார். மனோஜ், யாருடைய உதவியும் தேவையில்லை. எனக்கு சொத்தில் பங்கு கொடுங்கள் என்கிறார். இதைக் கேட்டு விஜயா- அண்ணாமலை இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full