செல்வத்தை அசிங்கப்படுத்திய மனோஜ், கோபத்தில் முத்து செய்தது - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 16/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா, ஏன் சமைக்கவில்லை? எங்கே போய் ஊர் சுற்றுகிறாய்? என்று வழக்கம்போல் அவரை சண்டை போட்டார். மீனா, எனக்கு மனசு சரியில்லை என்று சொல்ல, விஜயா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். உடனே மீனா, சிந்தாமணி எதுவும் சொல்லவில்லையா? அவரிடம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கோபப்பட்டார். அப்போது அண்ணாமலை வீட்டிற்கு வந்தார். அவர், கடைக்காரன் என்னை ஏமாற்றி விட்டான். நான் அவன் வழியிலேயே ஏமாற்றி விட்டேன் என்று சொன்னவுடன் மீனாவும் இதுதான் சரியான வழி. அந்த மேனேஜருக்கு பாடம் புகட்டனும் என்று நினைத்தார்.

மீனா, சிந்தாமணிக்கு பாடம் புகூட்ட வேண்டும் என்று யோசித்தார். அப்போது அவர், சீதாவிடம் சிந்தாமணிக்கு போன் செய்து மண்டபத்திற்கு டெக்ரேசன் ஒர்க் பண்ண வேண்டும் என்று செய்ய சொன்னார். சீதா, மீனா சொன்னது போலவே பேசியதால் சிந்தாமணி ஒத்துக் கொண்டார். பின் அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து அதை ஸ்ருதி இடம் போட்டு காண்பித்து சிந்தாமணி குரலில் மேனேஜரிடம் பேச சொன்னார் மீனா. சுருதியும் சிந்தாமணி போலவே பேசி அந்த மேனேஜரை பொன்னியம்மன் கோயிலுக்கு பணத்தோடு வரவைத்தார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் சீதா, சிந்தாமணிக்கு போன் செய்து பொன்னியம்மன் கோயிலுக்கு வரவைத்தார். இதற்கிடையில் அந்த மண்டபத்தின் ஓனரையும் அந்த கோயிலுக்கு மீனா வரவைத்தார். பின் கோயிலுக்கு வந்த மேனேஜர்- சிந்தாமணி இருவருமே மீனா ஏமாந்து போனதை பற்றி பேசி சிரித்தார்கள். இதை மீனா, மண்டபத்தின் ஓனர் எல்லோருமே பார்த்து விட்டார்கள். உடனே கோபத்தில் அந்த ஓனர், மேனேஜரை வெளுத்து வாங்கி திட்டி இருந்தார். அதோடு சிந்தாமணியையும் திட்டினார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் மண்டபத்தின் ஓனர் பணத்தை மேனேஜரிடம் வாங்கி மீனாவிடம் கொடுத்துவிட்டார். பின் அவர், இனிமேல் இந்த மண்டபத்தின் பக்கமே உன்னையும், சிந்தாமணியும் பார்க்க கூடாது என்று திட்டி விட்டார். அதற்கு பின் இனிமேல் என்னுடைய மண்டபத்திற்கு வரும் எல்லா ஆர்டருக்கும் உனக்குதாம்மா என்று சொன்னார். சந்தோஷத்தில் மீனா அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பணம் வட்டிக்கு வாங்கிய பைனான்சியரை சந்தித்து நடந்ததை சொல்லி மீனா பணத்தை கொடுத்தார். பைனான்சியர், இனி உனக்கு எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுமா என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் முத்துவிற்கு ஃபோன் செய்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்ல, அவர் ரொம்பவே ஷாக் ஆனார். உடனே முத்து, எனக்கும் சவாரி முடிந்துவிட்டது, நானும் வருகிறேன் என்று சொன்னார் அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு மாலை அணிவித்து அவர் செய்த சாகசத்தை வீட்டில் சொன்னார். இதைக் கேட்டவுடன் விஜயா ஷாக் ஆகிறார். மனோஜ் வழக்கம்போல முத்து,மீனாவை நக்கல் அடித்து பேசி இருந்தார். ஆனால், அண்ணாமலை திட்டி விட்டார். அதற்குப்பின் எல்லோருக்கும் முத்து ஸ்வீட் கொடுத்தார்கள். விஜயா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

https://www.youtube.com/watch?v=lpW3alZmGV4

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் முத்து, தன்னுடைய நண்பன் செல்வத்தின் குடும்பத்தினை வீட்டிற்கு அழைத்து சாப்பிட வைத்திருக்கிறார். அப்போது மனோஜ், யார் யாரோ வந்து சாப்பிடுவதற்கு இது சத்திரமா? நான் அவர்கள் போன பிறகுதான் சாப்பிடணுமா? என்று ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். உடனே முத்து, அமைதியாக இரு. அவர்கள் போன பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியும் கேட்காமல் மனோஜ் கத்திக்கொண்டே இருக்கிறார். இதனால் செல்வம் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார். உடனே கோபப்பட்ட முத்து, மனோஜை உட்கார வைத்து வாயில் சாப்பாடு போட்டு திணிக்கிறார். உடனே மனோஜ், என்னை கொல்ல தானே பார்க்கிறாய். ஏற்கனவே நீ ஜெயிலுக்கு போனவன் தானே என்று சொன்னவுடன் முத்து அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full