மனோஜ்-முத்து இடையே நடந்த காரசார விவாதம், வெறிபிடித்த நாயின் நிலை? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்துவிடம் சொல்ல வேண்டாம் என்று செல்வம் தன்னுடைய நண்பர்களிடம் சொன்னார். அந்த சமயம் வந்த முத்து, செல்வத்திடம் பேசினார். பின் செல்வத்திற்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை முத்து அறிந்துகொண்டு விசாரித்தார். உடனே செல்வத்தின் நண்பர்கள், நடந்த விஷயத்தை சொன்னார்கள். இன்னொரு பக்கம் அருண், உன் மாமாவின் நண்பன் செல்வம் ஹெல்மெட் போடாமல் லஞ்சம் கொடுத்து மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார் என்று ஒரு கதையை சொல்ல, இதை சீதாவும் நம்பி விட்டார்.
பின் ஹாஸ்பிடலில் இருக்கும் சீதாவை சந்தித்த முத்து, அருணிற்கு கோபம் என்றால் என்னிடம் காண்பிக்க சொல். செல்வம் தவறு செய்தால் அதற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுக்க சொல். தேவையில்லாமல் அடிக்க வேண்டாம் என்று சொன்னார். இதற்கு சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் க்ரிஷ் ஒழுங்காக சாப்பிடவில்லை அடம்பிடிக்கிறார் என்று ஸ்கூலில் இருந்து போன் செய்தார்கள். இதனால் கோபப்பட்ட ரோகினி, நீ இப்படியே சொல்பேச்சை கேட்கவில்லை என்றால் நானும் எங்காவது போய் விடுவேன் என்று சொன்னார். இதனால் பயந்து போன கிரிஷ், நான் சாப்பிடுகிறேன் ஒழுங்காக இருக்கிறேன் என்று சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
விஜயா வழக்கம்போல் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் ரோகிணியை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் ரவி வேலை செய்யும் ஹோட்டலில் சில ரவுடிகள் குடித்துக்கொண்டு பிரச்சனை செய்தார்கள். ரவி சொல்லியும் அவர்கள் திமிராக பேசினார்கள். இதனால் முத்துவை ரவி வரவைத்தார். முத்து, அந்த ரவுடிகளை வெளுத்து வாங்க, அந்த ரவுடிகள் ஸ்ருதி அம்மா சொல்லி தான் இதை எல்லாம் செய்தோம் என்றார்கள். கோபத்தில் ரவி, எதற்காக உன் அம்மா இப்படி எல்லாம் செய்தார்கள்? என்று நடந்ததை சொன்னார்.
சீரியல் ட்ராக்:
ஸ்ருதி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என் அம்மாவிடம் கேள் என்கிறார். பின் மீனாவும் ரவிக்காக சப்போர்ட் செய்து ஸ்ருதியிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் கிரிஷ் படிக்கும் ஸ்கூலில் இருந்து சில ஆசிரியர்கள் பொருள் வாங்குவதற்காக மனோஜ் கடைக்கு வந்திருந்தார்கள். அப்போது அந்த ஆசிரியர், மனோஜை சிறப்பு விருந்தினராக தங்கள் பள்ளிக்கு அழைத்தார். அதற்குப்பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற சுருதி, ரவி ஹோட்டலில் நடந்த விஷயத்தை பற்றி கேட்டார். அதற்கு ஸ்ருதி அம்மா, நீத்து சரியில்லை. ரவியை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்க தான் இப்படியெல்லாம் செய்தேன் என்றார். சுருதி, நீ செய்த வினையால் என் வாழ்க்கையே போய்விடும் போல இருக்கிறது என்று கோபப்பட்டு கத்தினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, நீயே ரவி-நீத்துவை சேர்த்து வைத்து விடாதே. தயவு செய்து உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று தன் அம்மாவை திட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மனோஜ், தன்னை ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். வழக்கம் போல் முத்து கிண்டல் அடிக்கிறார். இதனால் ரோகிணி கோபப்பட்டு முத்துவை திட்ட, மீனா சண்டைக்கு போகிறார். பின் முத்து, கல்வி தான் முக்கியம் என்பது போல் பேசி இருந்தார். மனோஜ், பள்ளியில் எப்படி பேசணும் என்று ஸ்பீச் கொடுக்கிறார். ஆனால், மனோஜ் பணம் முக்கியம் என்று ஆங்கிலத்தில் பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதை கேட்ட விஜயா, நீ ரொம்ப திறமைசாலி மனோஜ். ஆனால், ரோகினி மாதிரி பொய் சொல்லி யாரையும் ஏமாற்றக்கூடாது என்று சொல்லி கொடு என்கிறார். பின் மனோஜ் பேச்சை கேட்டு தெருவில் இருக்கும் நாய் வெறிபிடித்து குறைக்கிறது. உடனே கோபத்தில் மனோஜ் அந்த நாயை கல்லால் அடிக்கிறார். பின் நாயின் உரிமையாளர் முத்து வீட்டில் ப்ரச்சனை செய்கிறார்கள். பின் மனோஜ், பணம் கொடுத்து அந்த நபரை அனுப்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது