குளிர் காய்ச்சலில் மனோஜ் சொன்ன வார்த்தையால் கோபப்பட்ட விஜயா, வேதனையில் ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 20/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், அதற்கு சிந்தாமணி, மீனாவை ஏளனமாக பேசி இருந்தார். உடனே மீனா, இரண்டு நாளில் நான் பணத்தை ரெடி பண்ணி ஆர்டரை வாங்குவேன் என்று சவால் விட்டு வந்தார். பின் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் நடந்ததை சொன்னார். உடனே முத்து, தன்னுடைய அப்பாவிடம் ஏலத்திற்காக பணத்தைக் கேட்டார். அப்போது மனோஜ் கிண்டலாக பேசி இருந்தார். உடனே விஜயா கோபப்பட்டு, மீனாவையும் முத்துவையும் ரொம்ப ஏளனமாகவும் கிண்டலாகவும் பேசி இருந்தார்.

விஜயா, முத்து என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த முத்து, நீங்கள் பேசி முடித்து விட்டீர்களா? நான் இந்த வீட்டை வைத்து பணம் கேட்கவே இல்லை. நான் கடன் வாங்க போகிறேன் என்று அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன். பாட்டியிடம் உதவி கேட்க போகிறேன் என்று முத்து சொன்னார். உடனே மீனா, பாட்டியிடம் கூட உதவி வேண்டாம். எனக்கு தெரிந்த பைனான்ஸரிடம் கேட்கலாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, சிந்தாமணிக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருந்தார். பார்வதிக்கு ஒன்றுமே புரியவில்லை.

சிறகடிக்க ஆசை:

அப்போது விஜயா, மீனா ஆர்டர் எடுக்க முடியாமல் பணத்திற்காக அவஸ்தைப்படுகிறார். கண்டிப்பாக இந்த ஆர்டர் உங்களுக்கு தான் என்று சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் பார்த்து பார்வதிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் மீனா பைனான்சியரிடம் பணம் கேட்கப் போனார். ஆனால், அவர் பணம் இல்லை என்று சொன்னார். இதனால் வேதனையில் மீனா, முத்துவிடம் சொன்னார். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் காரில் வந்த முத்துவை நிறுத்திய அருண், குடித்திருக்கிறாயா? ஊது என்று சொன்னார். முத்து, குடிக்கவில்லை என்று சொல்லியுமே அருண் விடவில்லை.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் முத்து குடிக்கவில்லை என்று சொல்லியுமே அருண் கேட்கவில்லை. ஊதிதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். பின் அங்கிருந்த போலீஸ், முத்து இடம் விசாரித்துவிட்டு ஊதிவிட்டு செல் என்று சொன்னார். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அம்மா வீட்டில் புதிய ஆர்டரை பற்றி சொன்னார். உடனே சீதா, என்னிடம் பணம் இருக்கிறது. நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தன்னுடைய அக்காவிற்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும், கோபத்தில் முத்து நன்றாக நிறைய குடித்துவிட்டு செல்வத்தை வரவைத்தார்.

சீரியல் ட்ராக்:

நான் ஓட்டினால் தான் பிரச்சனை. நீ ஒட்டிக்கொண்டு போ, அந்த போலீசை வெறுப்பேத்தியே ஆகணும் என்று சொன்னார். பின் அருண் இருக்கும் இடத்திற்கு வந்த முத்து, நான் நன்றாக குடித்து இருக்கிறேன். ஆனால், நான் வண்டி ஓட்டவில்லை என்று ரொம்பவே கிண்டலாக பேசி இருந்தார். அருணுக்கு அதிகமாக கோபம் வந்தது. பின் அங்கிருந்த போலீஸ் அருணை சமாதானம் செய்து முத்து, செல்வத்தையும் திட்டி அனுப்பி விட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த முத்து குடித்திருப்பதை தெரிந்து மீனா கோபப்பட்டார். முத்து நடந்ததை சொல்ல மீனாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.

https://www.youtube.com/watch?v=JSmQ1GrikwM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ், காய்ச்சல் தாங்க முடியாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார். இதை பார்த்து ரோகினி மனோஜ்க்கு மாத்திரை கொடுத்து கூடவே உட்கார்ந்து பார்த்துக் கொள்கிறார். மறுநாள் காலையில் மனோஜிக்காக ரோகினி சாப்பாடு செய்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த விஜயா, யாருக்காக சமைக்கிறாய் என்று கேட்டார். மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று ரோகினி சொல்கிறார். உடனே மனோஜை பார்த்த விஜயா, என்ன ஆனது என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், நான் ரோகினி இடம் பேசாமல் இருப்பதால் தான் காய்ச்சல் வந்ததா? என்று கேட்கிறார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full