ரோகினிக்கு ஐடியா கொடுக்கும் மீனா, கிரிஷை வைத்து அரங்கேறும் நாடகம் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 30/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், வேண்டுமென்றே இளநீர் குடிப்பது போல முத்துவை கேவலமாக பேசி தீர்த்துக் கொண்டிருந்தார். செல்வம், முத்துவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த ரோகினி இடம் விஜயா, எங்கு போனாய்? யாரைப் பார்த்தாய்? என்றெல்லாம் விசாரித்தார். ரோகினி, ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் கோபத்தில் விஜயா, மீனாவை எதற்காக பார்த்தாய்? மீண்டும் பொய் சொல்கிறாயா? என்றெல்லாம் திட்டி இருந்தார். உடனே ரோகினி, நான் என்னுடைய கிளைன்ட் பார்க்கப் போனேன்.

அந்த இடத்தில் மீனா இருந்தார். நான் சும்மா பேசிவிட்டு வந்தேன் என்றார். அப்போது வந்து அண்ணாமலை, மீனாவை பார்ப்பதால் என்ன தவறு? என்றார். விஜயா, மீனாவை யாரும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போட்டார். அதற்குப்பின் முத்து மாலை போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து விஜயா- மனோஜ் இருவருமே கொந்தளித்து திட்டினார்கள். கடைசியில் முத்து, நான் கார் செட்டிலேயே தூங்கிக் கொள்கிறேன் என்று சென்று விட்டார். பின் கார் செட்டில் நடந்த பூஜைக்கு மீனா, மீனாவின் அம்மா, சத்யா எல்லோரும் வந்தார்கள். அதை பார்த்து முத்துவிற்கு சந்தோஷமாக இருந்தது.

சிறகடிக்க ஆசை:

முத்துவின் பூஜை நல்லபடியாக நடக்கிறது. மீனாவுமே மனம் மாறி விட்டார். இருந்தாலும் மீனா, கடவுளிடம் குற்ற உணர்ச்சியில் இருப்பதை சொல்லி மனதுக்குள் புலம்பினார். இன்னொரு பக்கம் நீத்து, ஸ்ருதி ரெஸ்டாரண்டை மூடுவதற்காக இரண்டு பேரை தவறாக ரிவ்யூ எடுக்க சொன்னார். இதை எல்லாம் அறிந்த சுருதி, அவர்களுக்கு தெரியாமல் வீடியோவை எடுத்து ரிவ்யூவரை மிரட்டி இருந்தார். பின் இதை நீத்து தான் செய்தார் என்று தெரிந்த ஸ்ருதி, அவருக்கு போன் செய்து திட்டினார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மீனா வீட்டிற்கு மீண்டும் வந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், விஜயா கவலைப்பட்டார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொன்னார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போனார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொன்னார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=GD4W7drko9Y

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகினி, க்ரிஷை மனோஜ் ஏற்றுக் கொண்டால் தான் என்னால் உண்மையை சொல்ல முடியும் என்கிறார். அதற்கு மீனா, கற்பனையில் சொன்ன அம்மா இருந்தால் என்ன செத்தால் என்ன என்று சொல்கிறார். ரோகினி, நல்ல ஐடியா தந்தீர்கள் என்று தன்னுடைய அம்மாவையும் கிரிஸ்யும் முத்து வீட்டிற்கு வர வைக்கிறார். அப்போது லட்சுமி, என்னுடைய மகள் இறந்து விட்டாள். க்ரிஷ், முத்து-மீனாவுடன் தான் இருப்பேன் என்கிறார். அண்ணாமலை, கிரிஷ் இங்கேயே இருக்கட்டும் என்று சந்தோஷப்படுகிறார். ஆனால் விஜயா வழக்கம் போல திட்டிக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full