அருணின் சூழ்ச்சியில் சிக்கிய சீதா- மீனா, முத்து என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை

By subhashini · 1/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, உன்னுடைய புருஷன் தான் ஆள் வைத்து அருணை அடித்திருந்தார். எதற்கு இப்படி எல்லாம் செய்யணும் என்று கோபமாக கேட்டார். மீனா, அவர் ஒன்றும் செய்யவில்லை. அருண் தான் தவறாக சொல்லி இருக்கிறார் என்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் சீதா, முத்துவை ரவுடி என்று சொல்லி விட்டார். அதனால் கோபத்தில் மீனா, சீதாவை அடித்து விட்டார். இதனால் கோபப்பட்ட சீதா, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நான் உன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என்று சென்று விட்டார். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா ரொம்பவே வருத்தப்பட்டார். மீனாவுமே சீதாவை அடித்தது நினைத்து வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் சீதாவுமே நடந்த சண்டையை நினைத்து பார்த்து வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் விஜயாவின் யோகா கிளாஸில் சில பேர் சேர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாக விஜயா சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது புது நபர் யோகா கற்றுக்கொள்ள வந்தார். அவர் பார்வதிக்கு ரூட் விடுவது போல் தெரிந்தது.

சிறகடிக்க ஆசை:

யோகா கிளாசில் சிந்தாமணியும் மாணவியாக சேர்ந்தார். அந்த கிளாசுக்கு வந்த புது நபர் பார்வதியை ஒன்சைடாக பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் மீனா, உடம்பு அசதியாக இருப்பதால் தூங்கிருந்தார். வீட்டிற்கு வந்த விஜயா கிச்சனில் சாப்பாடு எதுவும் இல்லாததால் கோபத்தில் தண்ணீரை எடுத்து தூங்கி இருந்த மீனாவின் முகத்தில் ஊற்றி விட்டார். இதை பார்த்த முத்து, கோபத்தில் விஜயா கையிலிருந்து ஜக்கை புடிங்கி கீழே போட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது முத்து நடந்ததை சொன்னவுடன் ஸ்ருதி, அண்ணாமலை, ரவி எல்லோருமே விஜயாவை திட்டினார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:

வழக்கம் போல் மனோஜ் தன்னுடைய அம்மாவிற்கு தான் சப்போர்ட் செய்தார். இருந்தாலுமே அண்ணாமலை கோபத்தில் விஜயாவை பயங்கரமாக திட்டி அனுப்பி விட்டார். பின் விஜயா, செய்த தவறுக்காக மீனாவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். உடனே மீனா, நீங்கள் எதுவும் கேட்கத் தேவையில்லை மாமா என்று சொன்னார். அதற்குப்பின் மொட்டை மாடியில் அண்ணாமலை திட்டியதை நினைத்து பார்த்து விஜயா வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, விஜயாவை சமாதானம் செய்யப் போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதா பேசியதை நினைத்து வேதனையிலேயே மீனாவிற்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. இதை அறிந்த முத்து தன்னுடைய பாட்டியிடம் வைத்தியம் கேட்டு அதை செய்து கொடுக்கிறார். மீனா கசாயத்தை குடித்துமே மனவேதனையில் மீனா இருக்கிறார். பின் மீனா, சீதா சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். உடனே முத்து, இது அருண் செய்த வேலைதான். உங்கள் இருவரையும் பிரிக்க பார்க்கிறார். அதற்கு நான் ஒரு வழி செய்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் சத்யா, சீதா- மீனா இருவரையும் சேர்த்து வைப்பதற்காக சீதாவிடம் பேசுகிறார். ஆனால் சீதா, சத்யா செல்வதை கேட்கவே இல்லை. இது எல்லாம் அருண் ஒட்டு கேட்டு சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் அருண், நான் எல்லோரும் ஒன்றாக தான் நினைக்கிறேன். முத்து தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று இன்னும் தேவையில்லாததெல்லாம் சொல்லி சீதாவின் மனதை கலைக்க பார்க்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமுக்கு ராஜா- ராணி இவருமே தங்களுடைய வக்கீலை அழைத்து வந்து மீண்டும் பிரச்சினை செய்கிறார்கள். அப்போது வக்கீல், மனோஜ் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்கு கேஸ் போடுகிறேன். ஊர் முழுக்க ஆதாரத்தை ஒட்டி இந்த கடையின் மீது அசிங்கத்தை ஏற்படுத்துகிறேன் என்றெல்லாம் சொல்கிறார். கோபத்தில் மனோஜ், நானே போலீசை வர வைக்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகினி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full