ஸ்ருதி சொன்ன விஷயத்தால் ஷாக்கான மீனா, விஜயா செய்த வேலை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது. கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போனார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டினார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் விட்டார். இன்னொரு பக்கம் ரோகினியை சந்தித்த சிந்தாமணி, கிரிஷுக்கு மனோஜ் ஞாபகம் இருப்பதாக சொல்லி மனோஜை உன் பக்கம் கொண்டு வா என்றார்.
சிந்தாமணி, ரோகினியிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சத்யா, ரோகினியின் வீட்டிற்கு வந்துவிட்டார். உடனே சிந்தாமணி ஒளிந்து கொண்டார். அப்போது சத்யா, அக்கா- மாமா இருவரும் கிரிஷிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் வீடியோ காலில் காண்பிக்க வந்தேன் என்று சொன்னார். பின் வீடியோக்களில் முத்து-மீனா இருவரும் கிரிஷிடம் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் தூக்கத்திலேயே ரோகிணியிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவு காண்கிறார். ரோகினின் பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் கோபத்தில் விஜயா, மனோஜை அடித்து எழுப்பினார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் ரூம் கிடைத்ததால் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருந்தார்.
முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்பட்டார். பின் மனோஜிடம் விசாரித்தார். அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்று சொன்னார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடித்தார். பின் இதைப்பற்றி முத்துவிடம் விஜயா சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா அருணிடம் பேச சொல்லி சீதாவிடம் கேட்கிறார். மீனா, எதுவும் தேவையில்லை. இனிமேல் சீதாவிற்கு எந்த பிரச்சினை இல்லை. அவர் அவர்கள் வாழ்க்கையை பார்க்கலாம். நாங்கள் எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறோம் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பின் வீட்டிற்கு வந்த முத்து-மீனா இருவரும் காரை வைத்து செல்வத்திற்கு பணம் வாங்கி தந்த விஷயத்தை சொல்கிறார்கள். கோபத்தில் விஜயா, மீனா வந்த நேரம் தான் என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ரவி, வீட்டு பத்திரத்தை வைத்து காரை மீட்க சொல்லி கேட்கிறார். விஜயா முடியாது என்று சொல்கிறார்.
முத்து, நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மனோஜின் வாழ்க்கையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் சுருதியை சந்தித்த மீனா, வீட்டிற்கு வர சொல்லி அறிவுரை சொல்கிறார். ஸ்ருதி, நீத்து நான் சொன்னது போல் செய்யவில்லை என்றால் நானும் கோர்ட்டுக்கு தான் போகப் போகிறேன். இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ரவி தான். என்னால் ரொம்ப நாட்கள் எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்கிறார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் விஜயா சிந்தாமணியை அழைத்துக் கொண்டு நீத்து வீட்டிற்கு போகிறார். அங்கு மனோஜை பற்றி ரொம்ப பெருமையாக விஜயா பேசிக் கொண்டிருக்கிறார். நீத்து அமைதியாக இருக்கிறார்.