முத்து கொடுத்த டுவிஸ்டால் ஆடிப்போன மனோஜ், சிக்கிகொள்வாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

By subhashini · 30/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், உண்மையை சொல்லாமல் ஒரு பெண்ணை தான் காப்பாற்றியதாக பொய் சொன்னார். ஆனால், அதை ரோகினி நம்பவே இல்லை. பின் ரூமில் ரோகினி, என்னானது என்றார். அதற்கு மனோஜ், எல்லா உண்மையும் சொல்ல ரோகினி திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் யோகா கிளாசில் பார்வதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரை காதலிக்கும் நபர் கேக் வாங்கி வந்து பரிசு கொடுத்தார். அப்போது மீனா, ப்ரூட் பொக்கே கொடுத்தார். மீனாவின் ஐடியாவை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால், சிந்தாமணி, இதை வளர விடக்கூடாது என்று பொறாமைப்பட்டார்.

நேற்று எபிசோட்டில் விஜயா, பார்வதியின் செயலை கண்டித்து திட்டினார். அதற்கு பார்வதி, நான் நண்பராக தான் பழகுகிறேன். வேறு ஒன்றும் இல்லை என்றார். இன்னொரு பக்கம் முத்து, மனோஜின் நண்பரை சவாரிக்கு அழைத்து வருகிறார். அப்போது மனோஜ், ராணியிடம் அடிவாங்கிய விஷயத்தை உளறி விடுகிறார். உண்மை அறிந்த முத்து, மனோஜின் தோழரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய நண்பனை பார்த்தவுடன் மனோஜ் பதறுகிறார். பின் முத்து, மனோஜ்- ராணி இடம் தப்பாக நடந்து கொண்டதால் தான் அவர்கள் பணம் கேட்டு மிரட்டும் விஷயத்தை எல்லாம் சொல்கிறார். உடனே மனோஜ், நான் எந்த தவறும் செய்யவில்லை.

சிறகடிக்க ஆசை:

அவர்கள் வேண்டும் என்று என் மீது பழி போடுகிறார்கள் என்கிறார்கள். பின் ராஜா, தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை காண்பிக்கிறார். இப்படி மாற்றி மாற்றி மனோஜின் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கிறது. அதற்கு வீட்டில் எல்லோருமே மனோஜை திட்டுகிறார்கள். ஆனால், விஜயா மட்டும் நம்பவில்லை. உடனே முத்து, இதற்கு ஒரே வழி மனோஜ் -ராணியை கல்யாணம் செய்ய வேண்டும். ராணி இந்த வீட்டு மருமகளாக வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு ராணி அதிர்ச்சியாகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், ராணி கழுத்தில் தாலி கட்ட வேண்டும். இது தான் முடிவு என்று முத்து சொல்கிறார். இதனால் கோபப்பட்ட ராஜா, முத்துவிடம் சண்டைக்கு போகிறார். உடனே ராணி, உண்மையை உளறி விடுகிறார். மனோஜ், ராணியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அப்போது ராஜா, நாங்கள் பணத்தை திருடவில்லை. ஆனால், எங்கள் மீது பழி போட்டார்கள். அதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்தேன் என்று சொல்கிறார். முத்து, இவர்கள் பணத்தை திருடவில்லை. ஆனால், இவர்கள் செய்தது தவறுதான் என்று ஒரு பேப்பரில் இனி இந்த தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் முத்து, பணத்தை மனோஜ்-ரோகினி இருவரில் ஒருவர் தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும். உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார். இதனால் ரோகிணி ரொம்பவே பதறுகிறார். அதற்குப்பின் மீனா, மனோஜ்- ரோகினி இருவருமே நன்றி கூட சொல்லவில்லை என்று கடுப்பாகி புலம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், முத்து அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின் மீனா, கிரிஷ் அம்மாவை கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார். அதற்குப்பின் கோவிலில் வித்யா- முருகன் இருவருமே தங்களுடைய திருமண பத்திரிக்கையை முத்து-மீனாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அப்போது மீனா, கிரிஸ் அம்மாவை பற்றி விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full