ரோகினி செய்த கேவலமான வேலை, மேனேஜரை வெளுத்து வாங்கிய மீனா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி- ரவி இருவருமே ரெஸ்டாரன்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரவி, அனுபவம் கிடைத்த பிறகு ஸ்டார்ட் பண்ணிக்கலாம். தயவு செய்து இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் பேச்சை நிறுத்திவை என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை, சீதா திருமணத்தை பற்றி எல்லோரிடமும் பேச, வழக்கம்போல விஜயா, மீனாவின் குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, தன்னுடைய பென்ஷன் பணத்தை மீனாவிடம் கொடுத்து திருமண செலவிற்கு வைத்துக் கொள் என்றார். விஜயா வேண்டாம் என்று சொல்லியுமே அண்ணாமலை கொடுத்தார்.
அதற்கு பின் ரவி, சாப்பாடு செலவு மொத்தத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஸ்ருதி, சீதாவிற்கு மூன்று பவுன் செயின் நான் வாங்கி கொடுக்கிறேன் என்றார். இதையெல்லாம் கேட்டு மனோஜ்- ரோகினி- விஜயா மூவருமே வயிறு எரிந்தார்கள். பின் மனோஜ் இடம் அண்ணாமலை, நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார். அதற்கு மனோஜ், எதுவும் செய்ய முடியாது என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் சுருதி- ரோகினி இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அப்போது ரோகினி, நான் பணம் கேட்கும் போது இல்லை என்றீர்கள். மீனாவின் தங்கை திருமணத்திற்கு மூணு பவுன் செயின் வாங்கித் தர இருக்கிறீர்கள். நீங்கள் நியாயமாகவே நடந்து கொள்ளவில்லை என்றார். அதற்கு சுருதி, நீங்கள் பணம் கேட்டது எமர்ஜென்சி கிடையாது. அத்தைக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மீனா என்னிடம் கேட்கவில்லை. சீதா என்னுடைய தோழி. அவளுக்காக நான் இதை செய்கிறேன் என்று சொன்னார். ரோகினிக்கு நோஸ்கட் கொடுக்கிற மாதிரி ஸ்ருதி பேசி இருந்தார்.
அதற்குப்பின் சிட்டி, மேனேஜரை விட்டு ரோகினிக்கு போன் பண்ண சொன்னார்.
நேற்று எபிசோட்:
அப்போது மேனேஜர், நான் முத்துவை பார்க்க தான் போகிறேன். ஓரு நாள் டைம் தருகிறேன். பணத்தை தரவில்லை என்றால் நான் முத்துவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் என்று மிரட்டி இருந்தார். இதை கேட்டு ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ரொம்பவே பதறி இருந்தார். அதற்கு பின் தூக்கத்தில் ரோகினி, வீட்டில் மேனேஜர் எல்லா உண்மையையும் சொன்னது போல் கனவு கண்டு கத்தினார். அப்போது வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டார்கள். விஜயா, ரோகினியை அவமானப்படுத்தி இருந்தார்
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிட்டி, மேனேஜர் இருவருமே நன்றாக சரக்கு குடித்துவிட்டு ரோகினியிடம் பணத்தை வாங்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், நீ பணத்தை ரெடி செய்யவில்லை என்றால் நான் இப்பவே முத்துவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். உடனே ரோகினி, மீனா தங்கையின் திருமணத்திற்காக நகைகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சொல்கிறேன். நீ நகையை வந்து எடுத்துக் கொள் என்கிறார். மறுநாள் ஸ்ருதி- மீனா இருவருமே நகைக்கடைக்கு சென்று நகை எல்லாம் வாங்கி வந்து சாமி ரூமில் வைத்து விட்டு திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க இருவரும் வெளியே கிளம்புகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இது தான் சந்தர்ப்பம் என்று ரோகினி, மேனேஜரை சந்தித்து நகையை எடுக்க வீட்டிற்கு வர சொல்கிறார்.
இன்னொரு பக்கம் முத்து, பார்வதி வீட்டிற்கு சென்று சீதா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்கிறார்.
அப்போது பார்வதி திருமண செலவிற்கு பணம் கொடுக்க, முத்து வேண்டாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மேனேஜர் வீட்டில் யாரும் இல்லை என்று சாமி ரூமில் இருந்த நகைகளை எல்லாம் திருடி எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வருவதால் திருடனை பிடித்து வீட்டிற்குள் தள்ளி அடிக்கிறார். அந்த திருடன் மனோஜின் முகத்தில் முகமூடியை போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து மீனா- சுருதி இருவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். திருடர்கள் ரெண்டு பேர் என நினைத்து ரெண்டு வெளுத்து வாங்குகிறார்கள். அதில் மேனேஜர் எப்படியோ தப்பித்து ஓடி விடுகிறார். மீனா, நகையை வாங்கி வைத்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது