வண்டியை பறிகொடுத்த மீனா, உண்மையை கண்டுபிடிக்க முத்து எடுத்த முயற்சி - சிறகடிக்க ஆசை

By subhashini · 4/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பார்வதி, நீ செய்வது தவறு என்று சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின் சிந்தாமணி, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக போன் செய்து மீனாவின் வண்டியையும் தூக்க சொல்லி ஏற்பாடு செய்தார். இன்னொரு பக்கம் மீனா அம்மா ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். அப்போது மீனா அவருக்கு ஆறுதல் சொல்லி சாப்பாடு ஊட்டி விட்டார்.இன்னொரு பக்கம் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கடையை திறக்க முத்து முயற்சி செய்தார். அப்போது மீனா, லஞ்சம் கொடுத்தால் அந்த ஆபிஸர் கடை வைக்க ஏற்பாடு செய்வார் என்றார்.

இன்னொரு பக்கம் சுருதி, தன்னுடைய ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்க மனோஜ் கடைக்கு போனார். அங்கு குறைந்த விலையில் பொருட்களை ஸ்ருதி கேட்டார். மனோஜ்- ரோகினி இருவருமே குறைந்த விலையில் கொடுப்பதால் புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதி அம்மா, தான் கொடுத்த பணத்தை கேட்டார். ரோகினி, இப்போது என்னிடம் பணம் இல்லை என்று சமாளித்தார். இதனால் ஸ்ருதி அம்மா திட்டி விட்டு பணத்தை சீக்கிரம் கொடுக்க சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் லஞ்சம் வாங்கும் அதிகாரியிடம் செல்வம் பணம் கொடுத்து பூ கடை வைப்பதற்கு பேசுகிறார். அந்த அதிகாரியுமே, ஏற்கனவே இருந்த அம்மாவிற்கு அந்த கடை தரமாட்டோம். நீ நான் சொல்லும் பணத்தை தந்து விட்டால் அந்த கடையை தந்து விடுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார். இதை முத்து பார்த்துக் கொள்கிறார். இதைப்பற்றி முத்து உயர் அதிகாரியிடம் பேச வருகிறார். ஆனால், அவர் முத்து சொல்வதைக் கேட்கவே இல்லை. அப்போதுதான் டாக்டர் பட்டம் கொடுக்கும் கோகிலா அந்த இடத்திற்கு வருகிறார்.

இன்றைய எபிசோட்:

அவருடைய கணவர் தான் அந்த உயர் அதிகாரி. பின் நடந்ததை எல்லாம் முத்து, கோகிலாவிடம் சொல்கிறார். பின் கோகிலா, தன்னுடைய கணவரிடம் முத்துவைப்பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். அதற்கு உயர் அதிகாரி, நீங்கள் சொல்வது போல் நாளைக்கு விசாரிக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, கோவிலுக்கு வருபவர்கள் இடம் தாங்கள் வைத்திருக்கும் கடை, பொருள்களைப் பற்றி எந்த குறையும் இல்லை என்று சொல்லி, கையெழுத்தும் ரெக்கார்டும் வைத்துக் கொள்கிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி சொன்ன ஆட்கள் மீனாவின் வண்டியை எடுத்து சென்று விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் கோவிலுக்கு வெளியே வந்த மீனா வண்டியை காணவில்லை என்று ரொம்பவே பதறி அழுகிறார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மீனா புகார் கொடுக்கப் போகிறார். அப்போது அருணிடம் நடந்ததை மீனா சொல்கிறார். அதற்கு அருண், முத்துவை இதில் தோற்கடிக்கனும் என்றெல்லாம் நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தன்னுடைய ஓட்டலுக்கு சமைப்பதற்காக செப்புக்கு தேர்வு நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் பின் வீட்டில் மனோஜ், தன்னுடைய ஷோரூமின் இன்னொரு பிரான்ச் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full