தேர்தலில் மீனா கொடுக்கும் வாக்குறுதிகள், சிந்தாமணி செய்யும் பித்தலாட்ட வேலை - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனாவின் தோழிகள் எல்லோருமே கட்டாயப்படுத்தி தேர்தலில் நிற்க மீனாவை ஒத்துக்க வைத்தார்கள். பின் இதைப்பற்றி மீனா தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். மீனாவின் அம்மா, சிந்தாமணி எதிர்த்து போட்டியிட முடியுமா? எதற்கு இந்த பிரச்சனை? என்றார். முத்து, அதெல்லாம் முடியாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா தன்னை எதிர்த்து போட்டியிடுவதை அறிந்த சிந்தாமணி கோபப்பட்டார். அதற்குப்பின் விஜயாவை சந்தித்து இதை பற்றி சிந்தாமணி சொன்னார். மீனா இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களை மதிக்க மாட்டாள் என்றெல்லாம் ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றி விட்டார் சிந்தாமணி.
சிந்தாமணி, மீனா தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களுக்கு வீட்டில் மரியாதை இருக்காது. உங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவாள் என்று ஒன்றுக்கு இரண்டாக பயமுறுத்தி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, அண்ணாமலை இடம் ஸ்வீட் கொடுத்து மீனா தேர்தலில் நிற்கும் விஷயத்தை சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது வந்த விஜயா, ஸ்வீட்டை தட்டி விட்டு மீனா தேர்தலில் நிற்க கூடாது என்று சொன்னார். முத்து, ஏன்? என்று கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
விஜயா, மீனா என்னை மதிக்க மாட்டாள். சிந்தாமணி எதிர்த்து யாராலும் போட்டியிட முடியாது என்றெல்லாம் வழக்கம் போல மீனாவை ரொம்ப தரக்குறைவாக பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலை, முத்து எல்லோருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால் விஜயா இந்த தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொல்கிறாள். மீனாவுமே அமைதியாக நிற்கிறார். அண்ணாமலை சொன்னதால் மீனா தேர்தலில் நிற்க ஒத்துக் கொண்டார். பின் தேர்தலுக்கான வேலைகளில் மீனா-முத்து இருவரும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தன்னுடைய வாக்குறுதிகளை எல்லாம் எழுதி வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்கிறார். வழக்கம்போல மனோஜ், விஜயா இருவரும் அதை கிண்டல் கேலி செய்கிறார்கள். அண்ணாமலை, உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக இரு என்று சொல்கிறார். அதற்கு பின் முத்து-மீனா இருவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணி மக்களை தன் பக்கம் கவர்வதற்காக எல்லோருக்குமே புடவை வேஷ்டி எல்லாம் வாங்கி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனா, சிந்தாமணியை எப்படியாவது எதிர்கொள்ள ஒரு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
முத்து- ஸ்வேதா- ஸ்ருதி- ரவி எல்லோருமே அதைப்பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, வியாபாரிகளின் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கலாம் என்று சொல்கிறார். ஸ்வேதா, நானே இலவசமாக எடுக்கிறேன் என்கிறார். இதைப் பற்றி மீனா
தன்னுடன் வேலை செய்பவர்களிடம் சொல்கிறார். எல்லோருமே மீனாவின் திட்டத்தை பாராட்டுகிறார்கள். இதை அறிந்த சிந்தாமணி லஞ்சம் கொடுத்து எல்லோரையும் தன் பக்கம் விலைக்கு வாங்க திட்டம் போடுகிறார். இதெல்லாம் கவனித்த ரேகா, இந்த தேர்தலில் நிற்காதீர்கள் என்று தடுக்கின்றார். ஆனால் சிந்தாமணி கேட்கவில்லை.