வெளிவந்த சிந்தாமணியின் சுயரூபம், தன் குடும்பத்தை காப்பாற்றுவாளா மீனா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 29/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, நிறைய லாபம் கிடைக்கும் என்று சொன்னார். மீனாவுமே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் நிறைய வாடகையை எடுத்துக்கொண்டு முத்து சென்றார். இன்னொரு பக்கம் விஜயா, வீட்டை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது மனோஜ், பிரியாணி வாங்கி வந்து தன்னுடைய அம்மாவை சாப்பிட கூப்பிட்டார். கோபத்தில் விஜயா, வீடு என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லையா என்று மனோஜை அடி விழுது வாங்கினார்.

சிந்தாமணி, முத்து-மீனாவை நிம்மதியாக வேலை செய்யவிட்டால் அவர்கள் சீக்கிரமாகவே கடனை அடைத்து விடுவார்கள். அதனால் அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் சுற்றிக் கொண்டிருக்கணும். மனோஜின் மீது போர்ஜரி கேஸ் போட்டு விடு என்றார். பைனான்சியர், போலீசில் மனோஜின் மீது போர்ஜரி கேஸ் போட்டு விட்டார். முத்து வீட்டுக்கு வந்த போலீஸ், மனோஜை அதிரடியாக கைது செய்தார்கள். பைனான்சியர் கொடுத்த புகாரை சொன்னார். வீட்டில் எல்லோரும் எடுத்து சொல்லி புரிய வைத்துமே போலீஸ் கேட்கவே இல்லை. மனோஜை இழுத்துக் கொண்டு சென்றார்கள்.

சிறகடிக்க ஆசை:

இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு பயங்கர கோபம் தான் வருகிறது. விஜயா, தன் மகனின் நிலைமை நினைத்து கஷ்டப்பட்டார். இதை அறிந்த சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். ரோகிணி, சிந்தாமணியை சந்தித்து எமோஷனலாக அழுதார். சிந்தாமணி, உனக்காக தான் செய்தேன். நீ பணம் செலவு பண்ணி மனோஜை வெளியே கொண்டு வர முயற்சி செய். அது மனோஜ்க்கு தெரிய வேண்டும். அப்போதுதான் நீங்கள் இருவரும் சேருவீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் வக்கீலை சந்தித்து மனோஜ் நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் விஜயா, மனோஜை விட சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். போலீஸ், விஜயாவை திட்டி வெளியே போக சொல்கிறார்கள். அந்த சமயம் ரோகினி, மனோஜை வெளியில் எடுப்பதற்கு போராடுவது போலவே நடித்து டிராமா பண்ணுகிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் வக்கீல், பைனான்சியர் கேஸை வாபஸ் வாங்கினால் தான் இந்த பிரச்சனை முடியும். இல்லையென்றால் ரொம்பவே கஷ்டம் என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, முத்து- மீனாவை பழிவாங்கி விட்டதாக நினைத்து ரொம்பவே சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த மீனா, என் குடும்பத்தை எதுவும் செய்யாதே. உனக்கும் எனக்கும் தான் பிரச்சனை என்று சொல்கிறார். சிந்தாமணி, பைனான்சியர் என்னுடைய ஆள் தான். நான் சொல்லி தான் கேஸ் கொடுத்தார். உன் வீடு எனக்கு வேணும். அந்த வீட்டை உங்களுக்கு கிடைக்க விட மாட்டேன். நான் உன் மாமியாரோட பழகினதே அந்த வீட்டை ஆட்டைய போட தான். நான் பூ வியாபாரம் மட்டும் நடத்தவில்லை. பிரச்சனை இருக்கும் வீட்டை என் வசம் கொண்டு வந்து அதை கோடிக்கணக்கில் விற்பேன். உங்கள் வீட்டோட மதிப்பு கோடி கணக்கில் போகும் என்று எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார்.
இதனால் மீனா, அந்த பைனான்சியர் இந்த கேசை வாபஸ் வாங்க வைக்கிறேன். ஒழுங்கு மரியாதையாக என் குடும்பத்தை விட்டு விலகி இரு என்று சவால் விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full