சவாலில் வென்ற முத்து, மீனாவை ஆரத்தி எடுத்து அழைக்கும் விஜயா - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அழுது கொண்டே வந்த சீதாவை மீனாவின் அம்மா விசாரித்தார். அப்போது சீதா நடந்ததை எல்லாம் சொல்லி தாலிச் செயின் இருந்தால் தான் வீட்டிற்கு போக முடியும் என்றார். இன்னொரு பக்கம் அந்த திருடியை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் திருடிய நகை உருக்கும் இடத்திற்கு முத்து, மீனா சென்றார்கள். அங்கு அவர்கள் தாங்கள் நகை திருடுபவர்கள் என்றும், எங்களுடைய நகையும் உருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்கள் முத்து-மீனா சொல்வதை நம்பவில்லை.
ஒரு கட்டத்தில் அவர்கள் நம்பி விட்டார்கள். அந்த சமயம் பார்த்து போலீஸ் அங்கு வந்து விட்டார்கள்.
நகை திருடுபவர்கள் எல்லாரையும் போலீஸ் கைது செய்தார்கள். அவர்களுடன் முத்து,மீனாவையும் கைது செய்தார்கள். முத்து, தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ் ஸ்டேஷனில் முத்து தன்னுடைய குடும்பத்தை பற்றி எல்லாம் சொன்னார். பின் போலீஸ், அண்ணாமலைக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். போலீஸ் ஸ்டேஷன் வந்த ரவி, ஸ்ருதி இருவரும் முத்து, மீனாவை பற்றி எல்லாம் சொன்னார்கள். ஆனால், போலீஸ் நம்பவில்லை.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, முத்து-மீனா செய்யும் வேலையெல்லாம் காண்பித்து அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்கிறார். அதோடு மீனா தங்கையின் தாலியை கண்டுபிடிக்க தான் இப்படி எல்லாம் செய்தார்கள் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். போலீஸ்
உண்மையை புரிந்து கொண்டு முத்து, மீனா இருவரையும் விட்டு விடுகிறார்கள். அதற்கு பின் போலி சாமியார் சொர்ணம் திருட்டு நகை விற்கும் இடத்திற்கு வருவதை தெரிந்து கொண்டு முத்து-மீனா செல்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லாததால் சொர்ணம் சந்தேகப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
ஒரு கட்டத்தில் மீனா அம்மன் வேஷம் போட்டு சொர்ணத்தின் வாயில் உண்மையை வர வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் முத்துவின் வீட்டிற்கு மீனாவின் அம்மா தங்கை வந்து இருக்கிறார்கள். அப்போது முத்து-மீனா இருவரும் சொர்ணத்தை அலைத்துக் கொண்டு வருகிறார்கள். விஜயா சாமியாரை பார்த்து கையெழுத்து கூப்பிடுகிறார். உடனே முத்து, நடந்ததை எல்லாம் சொல்கிறார். விஜயா ஷாக் ஆகிறார். சொர்ணமும் தான் போலி சாமியார் என்ற உண்மையை சொல்கிறார். கோபத்தில் விஜயா, சொர்ணத்தை அடித்து யார் இப்படி செய்ய சொன்னது என்று கேட்கிறார். சொர்ணம், ரோகிணி சொல்லி தான் செய்தேன் என்கிறார். மனோஜ் அதிர்ச்சி அடைந்தார்.
https://www.youtube.com/watch?v=Hg1MhdrhiI8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ரோகிணி தான் இந்த பித்தலாட்ட வேலை எல்லாம் செய்ய சொன்னது என்று முத்து குடும்பம் அறிந்து விடுகிறார்கள். அதற்கு பின் சொர்ணத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். அதற்கு பின் முத்து, உள்ளே எதற்கு நிற்கிறாய்? வெளியே போ என்று மீனாவை அனுப்புகிறார். விஜயா கையில் ஆர்த்தி தட்டை கொடுத்து மீனாவை வரவேற்க சொல்லுகிறார் முத்து. விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. முத்து, மருமகளே வா என்று சொல்லுங்க என்கிறார். விஜயாவும் மீனாவை முறைத்துக் கொண்டு உள்ளே வா மருமகளே என்கிறார்.