மீனாவின் ரீ என்ட்ரியால் கதிகலங்கி போன ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 29/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, முத்து மீது இருந்த கோபத்தில் தான் வீட்டை விட்டு வந்தாயே? வேற என்ன பிரச்சனை? நீ ஏதோ மறைக்கிறாய் என்றார். ஆனால், மீனா உண்மையை சொல்லாமல் ஒன்றும் இல்லை என்று சமாளித்தார். அதற்கு பின் ரோகிணி ஃபோன் செய்து மீனாவை வர சொன்னார். ரோகினி, உன்னுடைய அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை தானே என்றார். அதற்கு மீனா, நான் எதுவும் சொல்லவில்லை. ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொல்லவில்லை என்றால் நானே வீட்டில் சொல்லி விடுவேன் என்றார். அதற்குப்பின் ரோகினி- மீனா ஒன்றாக வருவதை பார்த்து விஜயா முறைத்தார்.

முத்து- செல்வம் இருவருமே ஒரு கடையில் நின்று இளநீர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பக்கம் வந்த அருண், வேண்டுமென்றே இளநீர் குடிப்பது போல முத்துவை கேவலமாக பேசி தீர்த்துக் கொண்டிருந்தார். செல்வம், முத்துவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த ரோகினி இடம் விஜயா, எங்கு போனாய்? யாரைப் பார்த்தாய்? என்றெல்லாம் விசாரித்தார். ரோகினி, ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் கோபத்தில் விஜயா, மீனாவை எதற்காக பார்த்தாய்? மீண்டும் பொய் சொல்கிறாயா? என்றெல்லாம் திட்டி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

உடனே ரோகினி, நான் என்னுடைய கிளைன்ட் பார்க்கப் போனேன். அந்த இடத்தில் மீனா இருந்தார். நான் சும்மா பேசிவிட்டு வந்தேன் என்றார். அப்போது வந்து அண்ணாமலை, மீனாவை பார்ப்பதால் என்ன தவறு? என்றார். விஜயா, மீனாவை யாரும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போட்டார். அதற்குப்பின் முத்து மாலை போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து விஜயா- மனோஜ் இருவருமே கொந்தளித்து திட்டினார்கள். கடைசியில் முத்து, நான் கார் செட்டிலேயே தூங்கிக் கொள்கிறேன்
என்று சென்று விட்டார். பின் கார் செட்டில் நடந்த பூஜைக்கு மீனா, மீனாவின் அம்மா, சத்யா எல்லோரும் வந்தார்கள். அதை பார்த்து முத்துவிற்கு சந்தோஷமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் பூஜை நல்லபடியாக நடக்கிறது. மீனாவுமே மனம் மாறி விடுகிறார். இருந்தாலும் மீனா, கடவுளிடம் குற்ற உணர்ச்சியில் இருப்பதை சொல்லி மனதுக்குள் புலம்புகிறார். இன்னொரு பக்கம் நீத்து, ஸ்ருதி ரெஸ்டாரண்டை மூடுவதற்காக இரண்டு பேரை தவறாக ரிவ்யூ எடுக்க சொல்கிறார். இதை எல்லாம் அறிந்த சுருதி, அவர்களுக்கு தெரியாமல் வீடியோவை எடுத்து ரிவ்யூவரை மிரட்டுகிறார். பின் இதை நீத்து தான் செய்தார் என்று தெரிந்த ஸ்ருதி, அவருக்கு போன் செய்து திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மீனா வீட்டிற்கு மீண்டும் வருகிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், விஜயா கவலைப்படுகிறார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொல்கிறார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போகிறார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொல்கிறார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full