ரோகினியின் சதியால் அவஸ்தைப்படும் மீனா குடும்பம், முத்து என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்- ரோகினி இருவருமே நன்றி கூட சொல்லவில்லை என்று கடுப்பாகி மீனா புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால், முத்து அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் கோவிலில் வித்யா- முருகன் இருவருமே தங்களுடைய திருமண பத்திரிக்கையை முத்து-மீனாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அப்போது மீனா, கிரிஸ் அம்மாவை பற்றி விசாரித்தார்.
வித்யா, நான் மகேஸ்வரி இடம் கேட்டு கிரிஷ் அம்மாவின் நம்பரை வாங்கி தரேன் என்று ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் மகேஸ்வரி வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வித்யா வந்தார். அப்போது அங்கு வந்த ரோகினியிடம் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வித்யா சொன்னார். அதோடு முத்து, மீனாவுக்கு முதல் பத்திரிக்கை வைத்ததையும் வித்யா சொன்னார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கடுப்பானது. பின் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அப்போது வித்யா, கிரிஷ் அம்மா போன் நம்பரை மீனா கேட்கும் விஷயத்தை சொன்னார். அதற்கு ரோகிணி, ஏதோ சொல்லி சமாளி என்றார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் மனோஜ், தனக்கு தெரிந்த கிளைண்ட் ஒருவரின் வீட்டில் டெக்கரேஷன் வேலைக்கு ஆள் வேண்டும். அதனால் மீனாவிடம் சொல்லலாம் என்றார். அதற்கு ரோகினி, வேண்டாம் என்றார். அதற்குப்பின் யோகா கிளாசில் பார்வதியை காதலிக்கும் நபர் போன் செய்து பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, பூ ஆர்டரை பற்றி சிந்தாமணியிடம் சொன்னார். அப்போது ரோகினி, நான் உங்களுக்கு இந்த பெரிய ஆர்டர் தரணும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு வேலை செய்யணும். மீனா அம்மா வைத்திருக்கும் கடையை அடித்து நொறுக்க வேண்டும் என்றார். இதை கேட்டு ரோகினி சிந்தாமணி ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகினி சொன்ன வேலைக்கு சிந்தாமணி ஒத்துக் கொள்கிறார். பின் சிந்தாமணி தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி மீனா அம்மாவின் கடையை காலி செய்ய சொல்கிறார்.
இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கோயிலில் மீனா,முத்து, மீனாவின் அம்மா, சீதா, சத்யா எல்லோருமே பேசி கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து கார்ப்பரேஷனில் இருந்து வந்த சிலர், மீனா அம்மா கடையை காலி செய்றார்கள். அப்போது முத்து தட்டிக் கேட்க, அதற்கு அவர்கள், இந்த அம்மா நடத்தும் கடையில் தரமற்ற பொருட்களை தருகிறார் என்று புகார் வந்திருக்கிறது. எதுவாக இருந்தாலும் நீங்கள் மேல் இடத்தில் பேசுங்கள் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் மீனாவின் அம்மா உடைந்து போய் விடுகிறார். பின் சீதா இதைப் பற்றி அருணிடம் சொல்கிறார். அருண், முத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்குள் நாம் செய்யணும் என்று மனதுக்குள் திட்டம் போடுகிறார். அதற்குப்பின் முத்து, தன்னுடைய வீட்டில் நடந்ததை சொல்கிறார். இதைக் கேட்டு ரோகிணி, விஜயா சந்தோஷப்படுகிறார்கள். உடனே விஜயா, பிரியாணி சாப்பிடணும் என்று மீனாவை சமைக்க சொல்கிறார். கோபப்பட்டு ஸ்ருதி, அண்ணாமலை எல்லோருமே விஜயாவை திட்டுகிறார்கள்.
பின் மீனா, இதெல்லாம் சிந்தாமணி வேலையாக தான் இருக்கணும் என்று சொல்கிறார். முத்து, உண்மையை சீக்கிரத்திலேயே கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பார்வதி வீட்டில் பிரியாணி வாங்கி வந்து மீனா வீட்டில் நடந்ததை சொல்லி சந்தோஷப்படுகிறார் விஜயா. இத்துடன் சீரியல் முடிகிறது