சிந்தாமணி செய்த சதியால் வேதனையில் கதறும் மீனா, கொந்தளித்த முத்து என்ன செய்தார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து, அண்ணாமலை இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் சவாரி இருக்கிறது என்று முத்து கிளம்பி விட்டார். அப்போது கோயிலில் விஜயா, வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக மனோஜ், ரோகினி இருவரையும் அங்கபிரதசனும் செய்ய சொன்னார். மனோஜ் முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டார் ஆனால், விஜயா வேண்டுதல் என்பதால் செய்தே தீர வேண்டும் என்று இருவரையும் கோயிலில் உருட்டி விட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த முத்து பயங்கரமாக கலாய்த்து தள்ளி விட்டார்.
இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புது ஆர்டருக்காக பணம் வாங்குவதற்காக பேங்கில் லோன் கேட்டு முயற்சி செய்தார். ஆனால், அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டார்கள். அங்கிருந்த நபர் ஒருவர், பினான்சியரின் அட்ரஸ் கொடுத்து பண உதவி கேட்க சொன்னார். அப்போது போன் செய்த ரவி, உங்களுடைய ஆர்டருக்கு பண உதவி நாங்கள் செய்கிறோம். எவ்வளவு வேண்டும் என்று சொல்லுங்கள் என கேட்டார். அதற்கு மீனா, வேண்டாம். நான் பினான்சியரை பார்க்க போகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் மீனா தன்னுடைய தம்பி சத்யாவுடன் சேர்ந்து பினான்சியரை பார்க்க போனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் பைனான்சியர் மீனாவின் நல்ல மனதையும் அவருடைய உழைப்பையும் பாராட்டி கடனாக பணம் தருவதற்கு ஒற்றுக்கொண்டார். மீனாவும் சந்தோஷமாக தன்னுடைய டெக்கரேஷன் வேலையை செய்தார். நல்லபடியாக வேலையும் செய்து முடித்து விட்டார். இதை பார்த்து சிந்தாமணி கோபப்பட்டார். அதற்குப்பின் மீனா தன்னுடைய கணவருக்கு போன் செய்து டெக்ரேசன் செய்து முடித்ததை பற்றி சந்தோஷமாக பேசி இருந்தார்கள். மறுநாள் காலையில் வேலை முடிந்து விட்டது மீதி பணம் கொடுங்க என்று மீனா கேட்க, நான் மொத்த பணத்தையும் அன்றே கொடுத்துவிட்டேன்.
நேற்று எபிசோட்:
அதற்கான பத்திரத்தில் நீ கையெழுத்து போட்டு விட்டாய் என்று மேனேஜர் சொன்னார். இதை கேட்டவுடன் ஷாக் ஆன மீனா, நீங்கள் அட்வான்ஸ் மட்டும் தான் தந்தீர்கள் என்று சண்டை போட்டார். பின் அங்கிருந்தவர்களிடம் மேனேஜர், பத்திரத்தை படித்து பாருங்கள். மொத்த பணத்தையும் கொடுத்து விட்டேன். இந்த பெண் பிரச்சனை செய்கிறார் என்று சொன்னார். மீனா, உங்கள் மீது இருந்த நம்பிக்கையில் தான் அதை படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டேன் என்று கெஞ்சி கேட்டு கதறி அழுதார். ஆனால், அந்த மேனேஜர் மீனாவை அடித்து துரத்தி விட்டார். இதை பார்த்து சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டு விஜயாவிற்கு போன் பண்ணி சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, இன்றையோடு மீனா டெக்கரேஷன் வேலையை ஓரங்கட்டி வைத்து விடுவாள். எங்கேயும் வேலை செய்ய போக மாட்டாள் என்று சொன்னவுடன் விஜயா சந்தோஷப்படுகிறார். ஆனால், என்ன வேலை செய்தார் என்று சிந்தாமணி சொல்லவில்லை. சந்தோஷத்தில் ரவிக்கு போன் செய்த விஜயா, சாப்பாட்டை ஆர்டர் செய்கிறார். ரவியும் ஒன்றும் புரியாமல் சரி என்கிறார். இன்னொரு பக்கம் மீனா, மண்டபத்தின் ஓனரிடமே சென்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே அவர் சிந்தாமணிக்கு கொடுக்க வேண்டிய ஆர்டரை புது ஆட்களுக்கு எல்லாம் கொடுத்து தேவை இல்லாத வேலை செய்கிறார் என்று மீனாவை அடித்து வெளியே அனுப்ப சொல்கிறார். மீனா, எவ்வளவு கெஞ்சி கதறியுமே அந்த ஓனரும் கேட்கவில்லை, மேனேஜரும் கேட்கவில்லை. மனவேதனையில் மீனா வீட்டிற்கு வருகிறார். வீட்டில் சந்தோஷத்தில் விஜயா, எல்லாருக்குமே சாப்பிடுகிறார். அதற்குப்பின் முத்து வீட்டிற்கு வந்த உடன் மீனா நடந்ததை எல்லாம் சொல்கிறார். உடனே முத்து, கோபத்தில் அந்த மேனேஜரை அடித்து கத்தியால் குத்த போகிறார். ஆனால், கடைசியில் அது மீனா கண்ட கனவு. அப்போது முத்து போன் செய்கிறார். ஆனால், அவரிடம் எதுவும் சொல்லாமல் மீனா அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.