முத்துவை வெளியில் எடுக்க போராடும் மீனா, போலீசில் வசமாக சிக்கி கொண்ட சிட்டி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் வீட்டில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விஜயா, கிரிஷை ரொம்ப மோசமாக திட்டினார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே விஜயாவை திட்டினார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்து பார்வதி, ரதி- தீபன் வீட்டில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்கும் விஷயத்தை சொன்னார். இதனால் விஜயா ஷாக் ஆனார். உடனே முத்து, மனோஜ் செய்த வேலையால் தான் அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று நடந்த எல்லாவற்றையும் சொன்னார். மனோஜால் தான் இந்த பிரச்சனை. அவர் தான் பணம் கொடுக்கணும் என்று சொன்னார். உடனே மனோஜ், ரோகினியால் தான் நான் அப்படி சொன்னேன் என்றார். அதற்கு விஜயா, நீதான் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.
நான் உன்னை மன்னிக்கணும் என்றால் அந்த பணத்தை கொடு என்று சொன்னார். ரோகினி முடியாது என்று சொல்லி விஜயா கேட்கவில்லை. அதற்குப்பின் மாடியில் மனோஜ், இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது காப்பாற்று. நீ சொல்வதை செய்கிறேன் என்று கேட்டார். முத்துவுமே சம்மதித்தார். இன்னொரு பக்கம் கிச்சனில் ரோகினி பணத்தை எப்படி வெளிப்படுவது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தார். மீனா, ஸ்ருதி இருவருமே ரோகினி செய்த தவறை சொல்லி ஆறுதல் சொன்னார்கள். அந்த சமயம் வந்த விஜயா வழக்கம்போல் ரோகினி, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோடில் சிட்டிக்கு போன் செய்த ரோகினி, ரதி- தீபன் விஷயத்தைப் பற்றி சொல்லி
உதவி கேட்டார். அதற்கு சிட்டி, எனக்கு ஏசி, பிரிட்ஜ் வேண்டும். சும்மா எல்லாம் வேலை செய்ய முடியாது என்று சொல்வதால் ரோகினியுமே ஒத்துக்கொண்டார். மறுநாள் காலையில் ரோகினி, எனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் தீபன் வீட்டில் பேச சொல்லி இருக்கிறேன் என்று மனோஜிடம் சொன்னார். அப்போது பிசினஸ் டெவலப்பாக ராணி, ராஜா இருவருமே சேர்ந்து மனோஜ்க்கு ஐடியா கொடுத்தார்கள். அதற்கு ரோகினியும் சம்மதித்தார். இன்னொரு பக்கம் தீபன் வீட்டிற்கு சென்ற முத்து, பணமெல்லாம் கொடுக்க முடியாது என்றார்.
நேற்று எபிசோட்:
இதைக் கேட்ட தீபன் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப மோசமாக பேசி திட்ட, கோபத்தில் முத்துவுமே திட்டி விட்டு வந்தார். இதை பார்த்து சிட்டியின் ஆட்கள் முத்துவின் பெயரை சொல்லி தீபன் குடும்பத்தை அடித்து விட்டார்கள். இது தெரியாமல் வீட்டிற்கு வந்த முத்து, தீபன் வீட்டில் பேசிவிட்டேன். பணமெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த போலீஸ் முத்துவை கைது செய்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். அப்போது போலீஸ், முத்து அடியாட்களை வைத்து தான் தீபன் வீட்டில் பிரச்சனை செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். முத்து நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் முத்துவை கைது செய்து சென்று விடுகிறார்கள். அண்ணாமலை, மீனா எவ்வளவு சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. ரோகினி உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். பின் மீனா தனக்கு தெரிந்தவர்கள் மூலம் முத்துவை வெளியே எடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முத்து கைதானதை அறிந்த அருண் உள்ளுக்குள் சந்தோசப்பட்டு வெளியில் நல்லவன் போல நடமாடுகிறார். பின் அருண் வீட்டிற்கு சென்ற மீனா, நடந்ததை சொல்லி உதவி கேட்கிறார். அதற்கு அருண், இது கொஞ்சம் கஷ்டம் என்கிறார். பின் மீனா, ரதியை சந்தித்து நடந்ததை பற்றி சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ரதியும் தீபனுக்கு போன் செய்து அங்கு நடந்ததை பற்றி விசாரிக்கிறார். அப்போது தீபன், அடித்தவுடன் சிட்டி பெயரை சொன்னான். உடனே மீனாவுக்கு இது சிட்டி செய்த வேலைதான் என்று தெரிந்து கொள்கிறார். பின் இதைப் பற்றி மீனா போலீஸிடம் சொல்கிறார். சிட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கிறார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் சிட்டி, இது எல்லாம் செய்ய சொன்னது ரோகிணி தான். எனக்கும் அவங்களுக்கும் சின்ன சின்ன டீலிங் இருக்கு என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் மீனா-முத்து இருவரும் ஷாக் ஆகிறார்கள். சிட்டி குருப்பை போலீசார் கைது செய்கிறார்கள். பின் முத்துவை விடுதலை செய்கிறார்கள். இத்துடன் செய்திகள் முடிகிறது