சீதாவின் காதலை அறிந்த மீனா, ரோகினி-மனோஜை பிரிக்க விஜயா செய்யும் வேலை - சிறகடிக்க ஆசை

By subhashini · 11/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, முத்து- மீனா கண்ணுக்கு மட்டும் மலேசியா மாமா படவில்லை என்றால் நீங்கள் மாட்டி இருக்க மாட்டீங்க. உங்களுடைய எல்லா விஷயத்திலும் உண்மையை முத்து தான் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்ல சொல்ல, ரோகினிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது. ஆனால், அவர் அமைதியாகவே இருந்தார். ஸ்ருதி விடாமல் ரோகினியை கிண்டல் செய்து கொண்டிருந்தார். இதை கேட்டு மீனாவும் சிரித்துக் கொண்டிருந்தார். பின் ரோகினி எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பி விட்டார். இதை பார்த்த ஸ்ருதி, முத்து சொன்னது போல் இவர்களிடம் இன்னும் ஏதோ ரகசியம் இருக்கிறது என்றார்.

அதற்குப்பின் மனோஜ் மாடியில் தூங்கப் போனார். உடனே விஜயா, அந்த மேடம் கீழே படுக்கட்டும். நீ பெட்டில் படு என்று சொன்னார். இதை கேட்டு ரோகினி ரொம்ப வேதனைப்பட்டார். மனோஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக தூங்கி இருந்தார் இதைப் பார்த்து முத்து- மீனா இருவரும் ரோகினி நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சுருதி- ரவி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுருதி, எனக்கு தெரிந்தவருக்கு மேக்கப் போட வேண்டும். ரோகிணிக்கு அந்த ஆர்டர் கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் ரவி, அம்மா ஏதாவது திட்ட போகிறார்கள் என்று சொன்னார். ஸ்ருதி, எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அது அவர்களுடைய தொழில் என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினியிடம் ஸ்ருதி, எனக்கு தெரிந்தவருக்கு மேக்கப் செய்துவிட வேண்டும். நீங்கள் செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு அவர் விஜயாவை பார்த்தார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா என்ன சொல்வார்? என்று தான் எதிர்பார்த்தார்கள். உடனே அண்ணாமலை, நீ ரோகினி வேலைக்கு போகக்கூடாது என்று சொன்னாயா? எதற்கு இந்த பிரச்சினை? எல்லாத்தையும் மறந்து விடு என்று சொன்னார். ஆனால், விஜயா எதுவும் பேசாமல் கோபத்திலேயே இருந்தார்.

நேற்று எபிசோட்:

ரோகினி குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் நான் அத்தை சொல்வது தான் கேட்பேன் என்று சொன்னார். கடைசியில் விஜயா, ரோகினி ஷோரூம் போகக்கூடாது, பார்லர் வேலையை பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் சீதா. அருணின் வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கு அருணின் அம்மா அவருடைய கல்யாணத்தை பற்றி பேசினார். அதற்கு பின் சீதாவை வீட்டிற்கு அருண் அழைத்து வந்தார். அந்த இடத்தில் தான் முத்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இது தெரியாமல் சீதா- அருண் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அருண் கிளம்பும்போது முத்து பார்த்து விட்டார். பின் சீதாவிடம் இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்பதற்கு பிரண்ட் வீட்டில் விட வந்தார் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது சீதாவிடம் மீனா, நீ யாருடன் பைக்கில் வந்தாய்? உன்னுடைய பிரண்டா? என்றெல்லாம் விசாரிக்கிறார். சீதாவும் முடிந்தவரை சமாளித்தார். பின் அவர், அவர் என்னை காதலிக்கிறார். நானும் அவரை காதலிக்கிறேன். ஆனால், இன்னும் அவரிடம் நான் சம்மதம் சொல்லவில்லை. அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வீட்டில் எல்லோரிடமும் பேசிவிட்டு சொல்லலாம் என்று இருக்கிறேன். அவர் டிராபிக் போலீஸ் அருண் தான் என்று சொன்னவுடன் மீனா சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய பார்லர் ஆர்டரை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது விஜயா, ரோகினி இடம் விசாரித்துவிட்டு அவருடைய கிரெடிட் கார்டை வாங்கி வைத்து விடுகிறார். ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மனோஜிடம் ரோகினி இடம் பேசினாயா? கடைக்கு வந்தாளா? என்றெல்லாம் விசாரிக்கிறார். மனோஜிடம் ரோகினி உங்கள் அம்மா, என்னுடைய கிரிடிட் கார்ட் வாங்கி விட்டார் என்று சொன்னதற்கு மனோஜ் எதுவுமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதற்குப்பின் ஸ்ருதி, மீனா, முத்து, ரவி ஆகிய 4 பேருமே ரோகினி விஷயத்தை பற்றி பேசுகிறார்கள். அப்போது மாடிக்கு மனோஜை வரவைத்து விஜயா செய்த விஷத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால், மனோஜ் அதை கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்கு எதிராக தான் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full