கிரிஷ் பாட்டியை கண்டுபிடிக்க மீனா சொன்ன ஐடியா, மனோஜ் போட்ட திட்டம், அதிர்ச்சியில் ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 12/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா அன்னதானம் போடுகிறார் என்று அறிந்தவுடன் முத்துவுமே சாப்பிட போனார். முத்துவை பார்த்து விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது முத்து, அம்மா கையால் சாப்பிட்ட நினைவே இல்லை, சாப்பாடு போடுங்கள் என்று சொன்னவுடன் மனம் தடுமாறி விஜயா முத்துவிற்கு சாப்பாடு பரிமாறினார். முத்துவுமே ரொம்ப சந்தோஷமாக சாப்பிட்டார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்து, விஜயா கையால் சாப்பிட்டதை வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். விஜயா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

வழக்கம் போல் மனோஜ் அதை நக்கலாக பேசி இருந்தார். அதற்குப்பின் ஹாஸ்பிடலுக்கு முத்து-மீனா போனார்கள். கிரிஷ் பாட்டியின் உடம்பு நன்றாகிவிட்டதால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று முத்து முடிவெடுத்து இருந்தார். கிரிஷுக்குமே முத்து வீட்டை விட்டு வர மனசு இல்லை என்பது தெரிந்து விட்டது. இதையெல்லாம் ஒளிந்து நின்று ரோகினி கேட்டார். பின் கிரிஷ் பாட்டி, நீ வீட்டில் உண்மையை சொல்லி விடு என்றார். இதனால் கோபப்பட்ட ரோகினி, தயவுசெய்து இங்கிருந்து கிளம்பி விடு. நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று வழக்கம்போல தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் கிரிஷ் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்ய கிரிஷ் முத்து, மீனா, கிரிஷ் தயாரானார்கள். அப்போது கிரிஷுக்காக முத்து புது துணி வாங்கி தந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கிரிஷ் கிளம்புவதால் சந்தோஷமாக வழி அனுப்பினார்கள். ஆனால், வழக்கம் போல் விஜயா தான் கிரிஷை திட்டி கொண்டிருந்தார். அதற்குப்பின் முத்து-மீனா ஹாஸ்பிடல் போனார்கள். ஆனால், அங்கு கிரிஷ் பாட்டி இல்லை. ஷாக்கில் மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. முத்து ஹாஸ்பிடலில் விசாரிக்க, அவர்களுக்குமே தெரியவில்லை என்றார்கள். பின் ரோகினிக்குமே தன் அம்மா காணாமல் போன விஷயம் அறிந்து கவலைப்பட்டார்.

நேற்று எபிசோட்:

பின் மீனா, கிரிஷை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். முத்து வெளியில் எல்லா இடத்திலுமே விசாரித்தார். இன்னொரு பக்கம் ஷோரூமில் தன் அம்மா காணாமல் போனதை நினைத்து ரோகிணி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். வீட்டில் விஜயா, கிரிஷை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார். இதெல்லாம் முத்து-மீனா செய்த வேலையாக தான் இருக்கும். மகனை பார்த்துக்க முடியவில்லை என்று அவன் அம்மா ஓடிவிட்டாள். பேரனை பார்த்துக்க முடியவில்லை என்று அவள் பாட்டி நம்ம தலையில் கட்டி விட்டு சென்று விட்டால் என்று வழக்கம் போல ரோகிணியின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கிரிஷ் பாட்டி காணாமல் போனதால் விஜயா, அவனை எங்கேயாவது கொண்டு போய் விடுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட கிரிஷ் ரொம்பவே மனமடைந்து விடுகிறார். விஜயாவிற்கு ஏற்றவாறு மனோஜ், கிரிஷ் வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை, மனோஜ் விஜயாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு மீனா தன்னுடைய அம்மாவை பார்க்க போகிறார். அங்கு கிரிஷ் பார்த்து எல்லோருமே சந்தோஷமாக பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சுருதி, ரவியை ஹோட்டலுக்கு வரவைத்து மனோஜ் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது மனோஜ், கிரிஷை வீட்டில் இருக்கக் கூடாது. அதற்கு நீங்கள் தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்று சொல்கிறார். இதை கேட்டு சுருதி-ரவி எதுவுமே சொல்லவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, உங்கள் பாட்டியின் போட்டோ, அம்மா போட்டோ ஏதாவது இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு கிரிஷ், எனக்கு தெரியாது என்று சொல்லி விடுகிறார். உடனே மீனா, ஸ்கூலில் கிரிஷ் பாட்டி போட்டோ, அம்மாவுடைய போட்டோ இருக்கும். நாம் அதை வைத்து விசாரிக்கலாம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ரோகினி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full