விஜயாவின் சதி திட்டத்தை முறியடிக்க மீனா சொன்ன ஐடியா, சந்தோஷத்தில் ரோகினி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, போலீசுக்கு போன் செய்து விஜயாவை கைது செய்ய சொன்னார். வீட்டில் எல்லோருமே கேட்டுக் கொண்டதால் அண்ணாமலை அமைதியாகி விட்டார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணியிடம் ஃபோன் செய்து முத்து அந்த பையனை காப்பாற்றி விட்டான் என்று திட்டி விட்டார். இன்னொரு பக்கம் மீனா, கிரிஷை வீட்டுக்கு கொண்டு வருவது தான் என்னுடைய வேலை. அவன் உன்னுடைய அறையில் தூங்க வைத்து மனோஜுடன் பழக வைப்பது உன்னுடைய வேலை. சீக்கிரம் அந்த வேலையை செய்து முடி. வீட்டில் உண்மையைச் சொல்ல பாரு என்றார்.
மனோஜ், கிரிஷ் இங்க இருக்க கூடாது. இருந்தால் தேவையில்லாத பிரச்சினை வரும். ஒழுங்கு மரியாதையாக எங்கேயாவது கொண்டு போய் விடுங்கள் என்று கோபத்தில் முத்துவை திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் நீத்து, ரவியை ஹக் செய்து இருக்கும்மாறு எடுத்த போட்டோவை ஸ்ருதிக்கு கடுப்பேற்ற அனுப்பி விட்டார். ஸ்ருதி, ரவிக்கு போன் செய்து எனக்கு எதற்கு இப்படி எல்லாம் போட்டோ அனுப்பனும்.என்றார். உடனே ரவி, என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம். ரெஸ்டாரன்ட் சம்பந்தமாக மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் ஸ்ருதிக்கு மெசேஜ் அனுப்பாதீர்கள் என்றெல்லாம் நீத்துவிடம் சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு பின் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மீனா, கிரிஷை எழுப்பி ரோகினியிடம் தூங்க வைப்பதற்கு அனுப்பி வைத்தார். கிரிஷ் ரோகிணியுடன் சேர்ந்து தூங்கினார். காலையில் க்ரிஷ் பக்கத்தில் படுத்திருப்பதை பார்த்த மனோஜ் கத்திக்கொண்டு வீட்டில் பிரச்சினையை செய்தார். விஜயா, மீனாவையும் கிரிஷையும் திட்டிக் கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சென்றார். அதற்குப்பின் சிந்தாமணி, விஜயா, ரோகினி மூவருமே பார்வதி வீட்டிற்கு சென்று மீண்டும் கிரிஷை என்ன செய்வது என்று திட்டம் போடினார்கள். இதை பார்த்து ரோகினிக்கு கோபம் தான் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, அந்தப் பையன் உடம்பில் அவர் அம்மா ஆவி புகுந்திருக்கும் கவனமாக இருங்கள் என்றெல்லாம் விஜயாவை பயமுறுத்துகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினியுமே பேசுகிறார். பின் விஜயா, கிரிஷை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்பனும் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டே இருக்கிறார். பின் இதைப்பற்றி பேசுவதற்காக ரோகினி, மீனாவை மகேஸ்வரி வீட்டிற்கு வரவைக்கிறார். கோபத்தில் மீனா, வழக்கம் போல ரோகினியை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகினி, சிந்தாமணி சொன்ன விஷயத்தை சொல்கிறார். உடனே மீனா, என் உடம்பில் பேய் இருக்கிறது என்று நாடகமாட போகிறீர்களா? என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு ரோகினி, நல்ல ஐடியா தந்தீர்கள். நான் எனக்கே பேய் பிடித்தது போல நடித்து மனோஜுடன் கிரிஸை பேச வைக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு மீனா, நீ என்னவோ செய். ஆனால், உண்மையை ஒழுங்கு மரியாதையாக வீட்டில் சொல் என்றெல்லாம் புலம்பி விட்டு அங்கிருந்து செல்கிறார். இன்னொரு பக்கம் நீத்து செய்த வேலையால் சுருதி- ரவிக்கிடையே வாக்குவாதம் நடக்கிறது. கடைசியில் ரவி, நான் கவனமாக இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்து, கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்று போட்டி நடப்பதாக சொல்கிறார். அதைக் கேட்டு மீனா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது