மீனாவின் புது பிசினஸால் சந்தோஷத்தில் இருக்கும் குடும்பம், ரோகினியின் மாஸ் என்ட்ரி - சிறகடிக்க ஆசை

By subhashini · 29/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரவி, நீத்து செய்த வேலையெல்லாம் சொன்னார். இதை கேட்டு மீண்டும் சுதா கொந்தளித்து கத்தினார். விஜயா, ரவி மீது எந்த தவறும் இல்லை என்றார். பின் மீனா, ரவி இருவரும் சுருதியை சந்தித்து பேச போனார்கள். ஆனால், சுருதி, மீனாவை மட்டும் தான் அழைத்து பேசி இருந்தார். அப்போது நடந்ததை எல்லாம் மீனா சொன்னார். அதற்கு சுருதி, ரவி அந்த ரெஸ்டாரண்டில் இனி வேலை செய்யக்கூடாது. நீத்து தான் செய்த தவறுக்காக சோசியல் மீடியாவில் என்னிடம் மன்னிப்பு கேட்கணும் என்றார்.

சுருதி, நான் போட்ட கண்டிஷனுக்கு சம்மதம் என்றால் நான் வீட்டிற்கு வருவேன் இல்லை என்றால் வரமாட்டேன் என்றார். இதை அறிந்த சுருதி பெற்றோர்கள், ரவியையும் அவருடைய குடும்பத்தையும் மோசமாக பேசி மிரட்டினார்கள். வீட்டிற்கு வந்த மீனா நடந்தது எல்லாம் முத்துவிடம் சொன்னார். பின் ரவி, நீத்துவிற்கு போன் செய்தார். நீத்து, உங்களை தான் நினைத்தேன் என்று ரொம்ப காதலாக பேசி இருந்தார். ரவி, நான் வேலைக்கு வரமாட்டேன் என்றார். நீத்து, அது எனக்கு தெரியும். நான் வேறு ஒரு ஆளை வேலைக்கு எடுத்து விட்டு தான் உங்களிடம் காதலை சொன்னேன். என் மீது எந்த தவறும் இல்லை. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

சிறகடிக்க ஆசை:

விஜயா, ஸ்ருதிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொன்னார். ஆனால், சுருதி தன்னுடைய பிடிவாதத்தில்
உறுதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து- மீனா இருவரும் ஸ்ருதியிடம் பேசுவதற்கு அண்ணாமலை இடம் கேட்டார். அண்ணாமலையும் ரவியின் வாழ்க்கைக்காக பேசுவதற்கு ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் ரோகினி, ஆர்டரை கேன்சல் செய்த ஷோரூமில் சென்று பேசி இருந்தார். ஆனால், அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. பின் ரோகினி, நீங்கள் ஆர்டர் கொடுத்தால் என்னுடைய விவாகரத்து நின்றுவிடும். தயவு செய்து கொடுங்கள் என்றெல்லாம் மீண்டும் டிராமா போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, விஜயா இருவரும் பார்வதி வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது விஜயா,- ஸ்ருதி ரவி விஷயத்தை பற்றி சொல்கிறார். பார்வதி ரொம்பவே வருத்தப்பட்டு ஆறுதல் சொல்கிறார். அப்போது சிந்தாமணி, உங்கள் வீட்டில் ஒரு பூஜை செய்யுங்கள். எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்கிறார். பின் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை விஜயா, சிந்தாமணியை செய்ய சொல்கிறார். அதற்குப்பின் மீனாவிற்கு புது ஆர்டர் கிடைத்ததால் அந்த இடத்தில் பூக்கடையை திறக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே மீனாவின் கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

வழக்கம்போல் விஜயா, மீனாவையும் அவருடைய தொழிலையும் கிண்டல் அடித்து பேசுகிறார். பின் அந்த இடத்திற்கு ரோகிணி வருகிறார். ரோகினியை பார்த்தவுடன் மொத்த குடும்பமும் கொந்தளிக்கிறது.
விஜயா, எதற்காக வந்தாய்? என்று கேட்கிறார். மீனா, மேனேஜர் வர சொன்னார் என்று சொல்லிவிட்டு ஓரமாக போய் நிற்கிறார். பின் அந்த இடத்திற்கு பிளாட்டின் மேனேஜர் வருகிறார். அவர் முத்து,மீனாவிடம் பேசிவிட்டு பூஜையை தொடங்க சொல்கிறார். கடை திறக்கும் பூஜையை சிறப்பாக செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full