மீனாவிற்கு கிடைத்த பெரிய ஆர்டர், சிந்தாமணி செய்யும் சூழ்ச்சி - அடுத்து என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 5/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் டாக்டர், மனோஜ் கட்டை கழட்ட இருப்பதால் ரோகினியை அழைத்தார்கள். பின் டாக்டர், மனோஜின் கட்டை கழட்டி இருந்தார். ஆரம்பத்தில் ரோகிணியின் முகம் சரியாகவே தெரியவில்லை. அதற்குப்பின் ரோகினியை பார்த்தார். நல்லபடியாக மனோஜ்க்கு கண் தெரிந்தது அதற்குப்பின் வெளியே வந்த ரோகினி, எமோஷனலாக ரொம்ப அழுதார். அதை பார்த்தவுடன் எல்லோரும் பயந்து விட்டார்கள். கடைசியில் ரோகினி, மனோஜூக்கு கண் தெரிகிறது, நன்றாக இருக்கிறார் என்றவுடன் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.

நேற்று எபிசோட்டில் மனோஜை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது மீனா ஆரத்தி எடுக்க வந்தார். உடனே விஜயா, அதை வாங்கி மனோஜிற்கு ஆரத்தி எடுத்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி ஹோட்டலில் வேலை செய்வதை பார்த்து அவருடைய அம்மா பயங்கரமாக சண்டை போட்டார். முத்து குடும்பத்தையும், ரவியையும் மோசமாக திட்டி இருந்தார். ஆனால், ஸ்ருதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியுமே அவர் அம்மா கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த ரவியையும் திட்டி விட்டு சென்றார். இதனால் சுருதி-ரவி இடையே வாக்குவாதம் நடந்தது.

சிறகடிக்க ஆசை:

பின் முத்து, ஹாஸ்பிடலில் மனோஜ்க்கு செய்த செலவு லிஸ்ட்டை அண்ணாமலையிடம் கொடுத்தார். உடனே விஜயா, எதற்காக கொடுக்கனும்? கணக்கு பார்க்கிறாயா? என்று கேட்டார். அதற்கு அண்ணாமலை, முத்து-மீனா இருவரும் கடன் வாங்கி கொடுத்திருந்தார்கள். உங்களுடைய செலவை நீங்கள் தானே பார்க்கணும் என்று சொன்னவுடன் ரோகினி சம்மதித்தார். ஆனால், மனோஜ்-விஜயா இருவரும் ஏளனமாக பேசி இருந்தார்கள். இதனால் மீனாவிற்கு கோபம் வந்தது. கடைசியில் அண்ணாமலை, மனோஜை திட்டினார். ஆனால், விஜயா, முத்து-மீனாவை தான் திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலை வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். உங்களுக்கு பணம் தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். என் மகளை இரண்டு வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தாதீர்கள் என்று ரொம்ப மோசமாக அண்ணாமலை குடும்பத்தை பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு முத்துவால் தாங்க முடியவில்லை. இதை எல்லாம் கேட்ட முத்து, மீனாவால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரிடம் சண்டைக்கு போகிறார்கள். பின் ஸ்ருதி அம்மா, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ? எழுதிக் கொள்ளுங்கள்.

சீரியல் ட்ராக்:

என் மகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று செக் கொடுக்கிறார். உடனே முத்து, கோடி கணக்கில் செக் எழுதுகிறார். அதை பார்த்து சுருதி அம்மா ரொம்ப பயந்துவிட்டு செக்கை வாங்குகிறார். அதற்கு முத்து, உங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசத் தேவையில்லை. உங்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று
செக்கை கிழித்து போடுகிறார். அதற்கு பின் சுருதி அம்மா, ரவிக்கு ரெஸ்டாரண்ட் வைத்து தருகிறோம் என்றவுடன், எதுவாக இருந்தாலும் சுருதி- ரவி முடிவு என்றார் அண்ணாமலை. இன்னொரு பக்கம் கோவிலில் வித்யாவிடம் தன்னுடைய காதலை சொல்ல முருகன் ரொம்பவே தவிக்கிறார். அதேபோல் அருண்-சீதா இருவரும் கோவிலுக்கு வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=UYmiISS6hxM

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் மீனா, தனக்கு 2 லட்சம் ரூபாய் அளவிற்கு புது ஆடர் கிடைத்திருக்கிறது என்று வீட்டில் சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே மீனாவிற்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள். ஆனால், விஜயாவிற்கு மட்டும் பயங்கரமாக வயிறு எரிகிறது. பின் விஜயா, இதைப்பற்றி சிந்தாமணிக்கு போன் செய்து சொல்கிறார். உடனே சிந்தாமணி, இந்த ஆர்டரை மீனாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்ததே நான் தான். இதுதான் அவளுடைய கடைசி ஆர்டர். என்ன நடக்கப் போகிறதுன்னு பாருங்கள் என்று சிரிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full