மனோஜுக்கு மீனா செய்த உதவி, ரோகினியின் பித்தலாட்ட வேலை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 31/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, தன் மாமியாருக்கு வைத்த பாலை பாம்பு குடித்தது. ஆனால் விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். பாம்பு யார் கண்ணுக்குமே தெரியவில்லை. பின் இரவு விஜயா தண்ணி குடிக்க வரும்போது பிரிட்ஜ் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து பயங்கரமாக கத்தி அலறினார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாம்பு இருப்பதை பார்த்து பயந்தார்கள். அப்போதுதான் பாம்பு வந்த விஷயத்தை அறிந்து மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்கள். பின் ஒரு வழியாக முத்து அந்த பாம்பை பிடித்து விட்டார்.

விஜயா, வீட்டிற்கு பாம்பு வந்த விஷயத்தை பார்வதி- சிந்தாமணி இடம் சொன்னார். அப்போது சிந்தாமணி, பாம்பு வீட்டுக்கு வருவது நல்லது இல்லை. குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் என்றார். பின் இதைப் பற்றி விஜயா வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். அதற்குப்பின் சுருதி ரெஸ்டாரண்டிற்கு மீனா சென்றிருந்தார். அப்போது கோகிலா அந்த ரெஸ்டாரண்டுக்கு வந்திருந்தார். பின் கோகிலா, தன்னுடைய தோழியை மீனாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கோகிலா, மீனாவின் பூ வியாபாரத்தை பற்றி தன்னுடைய தோழிக்கு சொல்வதால் அவர்களும் மீனாவை பூ போட சொன்னார்கள்.

சிறகடிக்க ஆசை:

அப்போது மீனா, என்னுடைய கணவரின் அண்ணன் கடை வைத்திருந்தார். வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் நீங்கள் அங்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இதையெல்லாம் கேட்டு சுருதி-கோகிலா இருவருமே மீனாவின் குணத்தை ரொம்பவே பெருமையாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா, ரோகினிக்கு போன் செய்து பணத்தை கேட்டார். ஆனால், ரோகிணி இப்போது அப்போது என்று சமாளித்தார். உடனே ஸ்ருதி அம்மா, பணத்தை கொடுக்கவில்லை என்றால் நான் உன்னுடைய மாமியாரிடமே சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் ரோகிணி, மனோஜிடம் பணத்தை கேட்டார். ஆனால், மனோஜ் முடியாது என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா, தனக்கு கிடைத்த புது ஆர்டரை பற்றி முத்துவிடம் சொல்கிறார். முத்து, நானும் சீக்கிரத்தில் வண்டி வாங்கி அந்த பெரிய கான்ட்ராக்ட் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கிறேன். நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்கிறார். அதற்குப்பின் ரோகிணி வருகிறார். அவரிடம் ஒரு கார்டை கொடுத்து மீனா புது ஆர்டர் விஷயமாக பேசினார். ரோகினி சந்தோஷப்படுகிறார். பின் ரோகினி, இந்த ஆர்டர் நான் வாங்கி கொடுத்ததாக அத்தை இடம் சொல்கிறேன். நீங்கள் எதையும் சொல்லாதீர்கள் என்று சொல்வதால் மீனாவும் சரி என்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ரோகினி புது காண்ட்ராக்ட் விசயமாக கோகிலாவின் தோழியை சந்தித்து பேசுகிறார். அவர்களுமே அந்த ஆர்டரை ரோகிணிக்கு கொடுத்து விடுகிறார்கள். பின் இதைப்பற்றி ரோகினி, மனோஜிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். பின் மனோஜ், ரோகினி இருவருமே ஸ்வீட் புடவை எல்லாம் வாங்கி வந்து விஜயாவிடம் கொடுத்து விஷயத்தை பற்றி சொல்கிறார்கள். ரோகினி, தானே வாங்கியது போலவே பில்டப் விட்டு செல்வதால் சுருதிக்கு பயங்கர கடுப்பாகிறது.

behindtalkies AMP · Quick view
View full