சிந்தாமணி விரித்த வலையில் சிக்கிய மீனா, சந்தோஷத்தில் விஜயா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 11/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அண்ணாமலை, மீனாவிற்கு புதிய ஆர்டர் கிடைத்ததற்கு பாராட்டி வாழ்த்து சொல்லி இருந்தார். பின் சிந்தாமணிக்கு போன் செய்த விஜயா, மீனாவிற்கு புது ஆர்டர் கிடைத்தது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சொன்னார். உடனே சிந்தாமணி, இந்த ஆர்டரை கொடுத்ததே நான் தான். உங்கள் மருமகளுக்கு இது தான் கடைசி ஆர்டர். அதற்குப்பின் அவள் இந்த தொழிலுக்கே வர முடியாது. நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று சொல்ல, விஜயா என்ன திட்டம்? என்று கேட்டார். அதை பொறுத்திருந்து நீங்களே பாருங்கள். இப்போது சொன்னால் சுவாரசியம் இருக்காது என்று சிந்தாமணி சொன்னார்.

அதற்குப்பின் வீட்டிற்கு அண்ணாமலையின் நண்பர் . அவர் பவானி திருமணத்திற்கான ஏற்பாடுகளை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலையும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக சொன்னார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் முத்துவிற்கு ஒரு பெரிய சவாரி கிடைக்கிறது. 7 நாட்கள் டூர், அதனால் பணமும் கொஞ்சம் அதிகமாக வரும் என்று ஒத்துக் கொண்டார். இதை வீட்டில் சொன்னவுடன் அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்பட்டார். வழக்கம்போல் விஜயா, முத்து-மீனாவை திட்டிக் கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து, அண்ணாமலை இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் சவாரி இருக்கிறது என்று முத்து கிளம்பி விட்டார். அப்போது கோயிலில் விஜயா, வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக மனோஜ், ரோகினி இருவரையும் அங்கபிரதசனும் செய்ய சொன்னார். மனோஜ் முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டார் ஆனால், விஜயா வேண்டுதல் என்பதால் செய்தே தீர வேண்டும் என்று இருவரையும் கோயிலில் உருட்டி விட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த முத்து பயங்கரமாக கலாய்த்து தள்ளி விட்டார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புது ஆர்டருக்காக பணம் வாங்குவதற்காக பேங்கில் லோன் கேட்டு முயற்சி செய்தார். ஆனால், அவர்கள் முடியாது என்று சொல்லி விட்டார்கள். அங்கிருந்த நபர் ஒருவர், பினான்சியரின் அட்ரஸ் கொடுத்து பண உதவி கேட்க சொன்னார். அப்போது போன் செய்த ரவி, உங்களுடைய ஆர்டருக்கு பண உதவி நாங்கள் செய்கிறோம். எவ்வளவு வேண்டும் என்று சொல்லுங்கள் என கேட்டார். அதற்கு மீனா, வேண்டாம். நான் பினான்சியரை பார்க்க போகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் மீனா தன்னுடைய தம்பி சத்யாவுடன் சேர்ந்து பினான்சியரை பார்க்க போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பைனான்சியர் மீனாவின் நல்ல மனதையும் அவருடைய உழைப்பையும் பாராட்டி கடனாக பணம் தருவதற்கு ஒற்றுக்கொள்கிறார். மீனாவும் சந்தோஷமாக தன்னுடைய டெக்கரேஷன் வேலையை செய்கிறார். நல்லபடியாக வேலையும் செய்து முடித்து விடுகிறார். இதை பார்த்து சிந்தாமணி கோபப்படுகிறார். அதற்குப்பின் மீனா தன்னுடைய கணவருக்கு போன் செய்து டெக்ரேசன் செய்து முடித்ததை பற்றி சந்தோஷமாக பேசுகிறார்கள். மறுநாள் காலையில் வேலை முடிந்து விட்டது மீதி பணம் கொடுங்க என்று மீனா கேட்க, நான் மொத்த பணத்தையும் அன்றே கொடுத்துவிட்டேன்.

சீரியல் ட்ராக்:

அதற்கான பத்திரத்தில் நீ கையெழுத்து போட்டு விட்டாய் என்று மேனேஜர் சொன்னார். இதை கேட்டவுடன் ஷாக் ஆன மீனா, நீங்கள் அட்வான்ஸ் மட்டும் தான் தந்தீர்கள் என்று சண்டை போடுகிறார். பின் அங்கிருந்தவர்களிடம் மேனேஜர், பத்திரத்தை படித்து பாருங்கள். மொத்த பணத்தையும் கொடுத்து விட்டேன். இந்த பெண் பிரச்சனை செய்கிறார் என்று சொல்கிறார். மீனா, உங்கள் மீது இருந்த நம்பிக்கையில் தான் அதை படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டேன். எங்களை ஏமாற்றுகிறீர்கள் என்று கெஞ்சி கேட்டு கதறி அழுகிறார். ஆனால், அந்த மேனேஜர் அங்கிருந்து நபர்களை வைத்து மீனாவை அடித்து துரத்துகிறார். வேதனையில் அழுது கொண்டே மீனா அங்கிருந்து கிளம்புகிறார். இதை பார்த்து சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டு விஜயாவிற்கு போன் பண்ணி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full