ரோகினியை மிரட்டும் மேனேஜர், கோபத்தில் மீனா எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 1/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, மீனாவை பார்ப்பதால் என்ன தவறு? என்றார். விஜயா, மீனாவை யாரும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போட்டார். அதற்குப்பின் முத்து மாலை போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து விஜயா- மனோஜ் இருவருமே கொந்தளித்து திட்டினார்கள். கடைசியில் முத்து, நான் கார் செட்டிலேயே தூங்கிக் கொள்கிறேன் என்று சென்று விட்டார். பின் கார் செட்டில் நடந்த பூஜைக்கு மீனா, மீனாவின் அம்மா, சத்யா எல்லோரும் வந்தார்கள். அதை பார்த்து முத்துவிற்கு சந்தோஷமாக இருந்தது.

முத்துவின் பூஜை நல்லபடியாக நடக்கிறது. மீனாவுமே மனம் மாறி விட்டார். இருந்தாலும் மீனா, கடவுளிடம் குற்ற உணர்ச்சியில் இருப்பதை சொல்லி மனதுக்குள் புலம்பினார். இன்னொரு பக்கம் நீத்து, ஸ்ருதி ரெஸ்டாரண்டை மூடுவதற்காக இரண்டு பேரை தவறாக ரிவ்யூ எடுக்க சொன்னார். இதை எல்லாம் அறிந்த சுருதி, அவர்களுக்கு தெரியாமல் வீடியோவை எடுத்து ரிவ்யூவரை மிரட்டி இருந்தார். பின் இதை நீத்து தான் செய்தார் என்று தெரிந்த ஸ்ருதி, அவருக்கு போன் செய்து திட்டினார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மீனா வீட்டிற்கு மீண்டும் வந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், விஜயா கவலைப்பட்டார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொன்னார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போனார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொன்னார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்களுடைய புது ஐடியாவிற்கு மாடலாக மனோஜ் நடிக்கிறார். மனோஜுடன் சேர்ந்து ரோகினியுமே தங்களுடைய புது காம்போ ஆபரை பற்றி சொல்கிறார். அதை வீடியோவாக ஜீவா எடுத்துக் கொள்கிறார். அந்த சமயம் பார்த்து மேனேஜர், ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார். ரோகினியுமே என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் ஐயப்ப மலையில் இருந்து முத்து வந்து விடுகிறார். வழக்கம் போல விஜயா, முத்துவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் மீனாவிடமும் சந்தோஷமாக முத்து பேசுகிறார். அதற்குப்பின் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு வந்த சீதா, தன்னுடைய ஆபிஸில் வேலை செய்யும் ஒருவர் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டதை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனாவின் அம்மா, தவறு செய்பவரை விட அதை மறைக்க துணையாக இருப்பவர் செய்வதும் தவறு தான் என்றெல்லாம் சொல்வதால் மீனாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பின் மீனா, ரோகிணி வீட்டிற்கு போகிறார். அங்கு லட்சுமி, ரோகினி செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். ஆனால் மீனா, லட்சுமியை திட்டிவிட்டு ரோகிணி இடம் தனியாக பேச வேண்டுமென்றார். அந்த சமயம் பார்த்து வித்யா வீட்டிற்கு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full