கிரிஷ் பாட்டியை சந்தித்த மீனா, முத்து நண்பரிடம் மோசமாக நடக்கும் அருண் - சிறகடிக்க ஆசை

By subhashini · 20/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் பாட்டி வீட்டிற்கு முத்து-மீனா சென்று இருந்தார்கள். ஆனால், அங்கு வீட்டை காலி செய்து விட்டதாக ஓனர் சொன்னார். அதோடு அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அவருடைய அம்மா சாப்பிட போவதாக சொன்னார். உடனே முத்து-மீனா இருவருமே அந்த ஹோட்டலுக்கு போனார்கள். அதற்குள் கிரிஷ்- ரோகினி இருவரும் சென்று விட்டார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் தங்களுடைய புது ரெஸ்டாரண்டை திறப்பதற்கான கார்டை ஸ்ருதி, அண்ணாமலையிடம் காண்பித்தார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் கார்டை கொடுத்து ஸ்ருதி அழைத்தார்.

மறுநாள் காலையில் முத்து, தன் மாமியாரிடம் பணம் கொடுக்க சொல்லி இருந்தார். பின் மீனா, அருண் வீட்டிற்கு போனார். அப்பொழுது மீனா, தன்னுடைய அம்மாவிடம் பணத்தை கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான அருண், எதற்கு தேவையில்லாமல் செய்கிறீர்கள்? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா, என்னை அசிங்கப்படுத்துகிறீர்களா? என்று முத்து மீது இருந்த கோபத்தை மீனா மீது காண்பித்தார். மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அருண் அம்மா, அவருடைய மருமகன் கொடுத்தார். இதில் என்ன பிரச்சனை என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அருண், முத்து பணத்தை வாங்க கூடாது என்று சொல்வதால் மீனாவின் அம்மாவும் எதுவும் சொல்லாமல் பணத்தைக் கொடுத்து விட்டார். அதற்குப்பின் மீனா, அருண் வீட்டில் நடந்ததை சொல்ல, முத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. இதனால் மீனா, முத்துவை நினைத்து ரொம்ப பெருமைப்பட்டார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரன்ட் திறப்பதற்காக அழைப்பிதழ் கார்டை நீத்து, ரவிக்கு கொடுத்தார் ஸ்ருதி. இதை பார்த்து நீத்துக்கு பெரிய ஷாக். உடனே ரவி, எதற்காக இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறாய். கொஞ்சம் அமைதியாக இரு, பார்த்து கொள்ளலாம் என்றார். அதற்கு சுருதி, உன்னிடம் சொல்லி தான் எல்லாம் செய்தேன்.

நேற்று எபிசோட்:

ஹோட்டலுக்கு நீதான் செப் என்று சொல்ல, ரவி முடியாது என்று மறுத்தார். இன்னொரு பக்கம் ராஜா- ராணி இதுவருமே தன்னுடைய வக்கீலுடன் வந்து மனோஜிடம் பேசினார்கள். அப்போது வக்கீல், நீங்கள் ராணி இடம் தவறாக நடந்து கொண்டதற்காக போலீசில் புகார் கொடுப்பேன். நீங்கள் அவர்கள் மீது போட்ட திருட்டுப்பழிக்கு பணத்தை கொடுத்து விடுங்கள். ஆதாரத்தை கோட்டில் காண்பிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். இதனால் வேறு வழி இல்லாமல் ரோகினி- மனோஜ் இருவரும் தவணை முறையில் பணம் தருவதாக ஒத்து கொண்டார்கள். பின் ரோகினி, கிரிஷை வேறொரு புது ஸ்கூலில் சேர்த்து விடப் போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கிரிஷை புது ஸ்கூலில் ரோகினி சேர்த்து விடுகிறார். அதோட கிரிஷை ஹாஸ்டலில் தங்கி படிக்குமாறு ஏற்பாடு செய்கிறார். இது எல்லாம் பார்த்த க்ரிஷ் ஹாஸ்டல் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். வலுகட்டாயமாக கிரிஷை விட்டு வந்து விடுகிறார். இதையெல்லாம் ஒளிந்து நின்று ரோகினி அம்மா லட்சுமி பார்த்துவிடுகிறார். தன் அம்மாவை பார்த்த ரோகினி கோபப்பட்டு சண்டை போடுகிறார். உடனே லட்சுமி, நீ கிரிஷை பார்த்துக் கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால், இவ்வளவு மோசமாக நடந்து கொள்வாய் என்று எனக்கு தெரியாது. நான் கிரிஷை அழைத்துக் கொண்டு போகிறேன் என்கிறார். உடனே ரோகினி, கிரிஷ் ஹாஸ்டலில் இருக்கட்டும். அவனை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். உன் வேலையை பார் என்று திட்டி விட்டு சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் செல்வம் தன்னுடைய நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார். ஹெல்மெட் போடாததால் அருணிடம் பேசிப் பார்க்கிறார்கள். அருண், முத்து மீது இந்த கோபத்தில் செல்வத்தையும் அவருடைய நண்பனையும் ரொம்ப மோசமாக நடத்துகிறார். அதோடு முத்துவை அந்த இடத்திற்கு வர வைக்க சொல்கிறார். செல்வம் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, லட்சுமியை பார்த்து பேசுகிறார். அப்போது லட்சுமி, கிரிஷை அவருடைய அம்மா அழைத்து சென்று விட்டார். நீங்கள் எனக்காக செய்த உதவிக்கு நன்றி. என்னை மன்னித்து விடுங்கள் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த மீனா, லட்சுமியை சந்தித்த விஷயத்தை பற்றி எல்லோரிடமும் சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full