க்ரிஷ் பாட்டி மறைத்த ரகசியத்தை அறிந்தாரா மீனா? பயத்தில் ரோகினி - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஸ்ருதி, ரவி வேலை செய்யும் ஹோட்டலில் வைட்டராக வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால், அவரால் அந்த வேலையை சமாளிக்க முடியவில்லை.
பின் டிராபிக் போலீஸ் அருண் விதியை மீறி நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி இருந்தார். இதை பார்த்த முத்து, அவருடைய வண்டிக்கு பூட்டு போட்டு விட்டார். அதற்கு பின் வந்த அருண், வண்டியை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இதை முத்து தான் செய்தார் என்றவுடன் இருவருக்கும் சண்டை வந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருணுக்கு எதிராக முத்துவுக்கு ஆதரவாக பேசியவுடன் அவரால் எதுவுமே பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
நேற்று எபிசோட்டில் முத்து வீட்டிற்கு வந்த பவானி அப்பா, பவானிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
மீனா, முத்து இல்லை என்றால் இந்த திருமணம் நடக்காது. நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் வந்து திருமணத்தை நடத்தி கொடுக்க வேண்டும் என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் தான் வந்தது. வழக்கம்போல் அவர் நக்கலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து, ட்ராபிக் போலீஸ் அருண் செய்த வேலையை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார். இதனால் எஸ் ஐ, அருணை வரவைத்து வார்னிங் கொடுத்து மூன்று நாள் சஸ்பெண்ட் பண்ணி விட்டார்கள். இதனால் அருணுக்கு பயங்கர கோபம் வந்தது.
சிறகடிக்க ஆசை:
பின் அவர், இந்த வேலையை மட்டும் செய்தது யார் என்று தெரிந்தால் சும்மா விடமாட்டேன் என்று பொங்குகிறார். ஆனால், முத்து மீது அருண் சந்தேகப்பட்டார். இன்னொரு பக்கம் வித்யா, தன்னுடைய காதலுக்காக மீனா விடம் ஐடியா கேட்டார் .இதையெல்லாம் பார்த்த ரோகினிக்கு கோபம் வந்தது. அதற்குப் பின் சீதா, அருண் வீட்டிற்கு சென்று அவருடைய அம்மாவை பற்றி நலம் விசாரித்தார். ஆனால், ஏதோ மன கஷ்டத்தில் அருண் இருக்கிறார் என்று அவர் அம்மா சொல்ல, சீதா விசாரித்தார். ஆனால், அருண் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், நான் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அவசரத்தில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டேன். அதனால் ஒரு பொறுக்கி என்னை பழிவாங்க அதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டுவிட்டான். அதனால் என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என்று சொன்னவுடன் சீதா, அவருக்கு ஆறுதல் சொல்லி அம்மாவுடன் சந்தோசமாக இருங்கள். தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனால் அருணுக்கு சீதா மீது ஒரு நல்ல எண்ணம் உருவாகிறது.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம், முத்து அருணுக்கு சஸ்பெண்ட் ஆன விஷயத்தை மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால் மீனா, இதெல்லாம் ரொம்ப தப்பு. ஒருவரை பழிவாங்க கூடாது என்றெல்லாம் அட்வைஸ் செய்தார். அதனால் மீனா- முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதமானது. இன்னொரு பக்கம் நடன வகுப்பிற்கு வெயிட் மெஷினை காதல் ஜோடி கொண்டு வந்து தருகிறார்கள். அப்போது ஒவ்வொருவருமே ஏறி நின்று வெயிட் பார்க்கிறார்கள். விஜயாவின் வெயிட்டை பார்த்து பார்வதி, சிந்தாமணி இருவருமே கிண்டல் செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.
https://www.youtube.com/watch?v=ARK4f6Y09Pc
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் க்ரிஷ் படிக்கும் பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடைபெறுவதால் அண்ணாமலை கிளம்புகிறார். அவரை விடுவதற்காக முத்து -மீனா இருவருமே பள்ளிக்கு வருகிறார்கள். அப்போது கிருஷ், அவருடைய பாட்டியும் அங்கு வருகிறார்கள். மீனா அவரிடம் பேசுகிறார். ஆனால், கிரிஷ் உடைய பாட்டி, மீனா- முத்துவிடம் சரியாக முகம் கொடுத்து பேசாமல் அங்கிருந்து செல்கிறார். இதனால் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. பின் மீனா, கிரிஷ் உங்கள் அண்ணனுடைய குழந்தை குழந்தையாக இருக்கும். அவருடைய அம்மா ஜீவா தான் என்று முத்துவிடம் சொல்கிறார்.