குடிபோதையில் சண்டை போட்ட முத்து, மன்னிப்பு கேட்கும் மீனாவின் அம்மா, சந்தோஷத்தில் விஜயா- சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்ல, எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. இறுதி சுற்றில், மனோஜின் முட்டாள் தனத்தால் நடுவர்களிடம் அசிங்கம் பட்டார். கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள்.
அதன் பின் முத்து- மீனா மாலை, மேல தாளத்துடன் வந்தவுடன் விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. ஒவ்வொரு ஜோடியும் போட்டியில் நடந்ததை பற்றி பேசி இருந்தார்கள். மனோஜ், பேங்கில் இருந்து வந்த கிரிடிட் கார்ட் பணத்தை வைத்து தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார். ஆனால், தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுத்தார். பின் முத்து, ஒரு நபரை சவாரிக்கு அழைத்து சென்று இருந்தார். அந்த நபருடைய வீட்டில் சிட்டியும், சத்யாவும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அந்த நபர் கொஞ்சியும் சிட்டி விடவில்லை. இதை எல்லாம் பார்த்த முத்து, மொபைலில் ரெக்கார்ட் செய்து சிட்டியை மிரட்டி இருந்தார். வேறு வழி இல்லாமல் முத்து சொன்ன மாதிரி சிட்டி கையெழுத்து போட்டு இருந்தார். பின் அந்த நபர் முத்துவுக்கு நன்றி சொல்கிறார். நேற்று எபிசோடில், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டில் கூல் ஊத்த முடிவு செய்து இருக்க, அந்த சமயம் வீட்டுக்கு வந்த மீனாவிடம் தகவலை சொல்லி, உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னவுடன் மீனா கோபப்பட்டு பேசி இருந்தார்.
சீரியல் கதை:
மீனாவும் இதை வீட்டில் எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி முத்துவிடம் பேச, முத்து கண்டுபிடித்து விடுகிறார். உன் தம்பி என்னை வர வேணாம் என்று சொல்லி இருக்கிறான். எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் உனக்கு மட்டும் எப்படி மரியாதை தருவார்கள்? நீ போகவே கூடாது என்று முத்து சொல்ல, மீனாவும் தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். அந்த சமயம் அங்கு வந்த ஸ்ருதி, மீனாவை போக சொல்கிறார். இதையெல்லாம் விஜயா பார்த்து முத்துவிடம் பத்த வைக்கிறார். இன்னொரு பக்கம், மீனா கோயிலுக்கு வந்ததை பார்த்து அவருடைய குடும்பம் ரொம்ப சந்தோஷப்பட்டு கூல் ஊத்தும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
முத்துவும் கோயிலுக்கு போனார். முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியாகி நிற்க முத்துவும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்த மீனா எல்லோருக்கும் கூழ் ஊற்றி கொடுக்க, வழக்கம் போல் விஜயா கிண்டல் அடித்து முத்துவை பற்றி பேசுகிறார். கடைசியில் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை வாங்குகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா தன் தரப்பு நியாயத்தை சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், முத்து கேட்காமல் மீனாவிடம் கோபப்பட்டு பேசி போதையில் மயங்கி விடுகிறார். இதையெல்லாம் பார்த்த விஜயா சந்தோஷப்பட்டு, மீனாவிடம் கிண்டலாக பேசி இருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
மறுநாள் காலையில் போதை தெளிந்த முத்து வேலைக்கு அவசர அவசரமாக கிளம்புகிறார். அப்போது நக்கலாக விஜயா, முத்து சரக்கு அடித்த விஷயத்தை பற்றி பேச, அண்ணாமலை கோபப்பட்டு முத்துவிடம் பேசுகிறார். இருந்தாலுமே, மீனாவிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் முத்து சென்று விடுவார். முத்து வேலை செய்யும் இடத்திற்கு மீனாவின் அம்மா, தங்கை இருவருமே வந்து பேசுகிறார்கள். அப்போது முத்து, உங்கள் மகன் செய்யும் தப்பை யாருமே கேட்க மாட்டீர்கள். மீனாவும் தன்னுடைய தம்பி தான் முக்கியம் என்று செல்கிறார். எனக்கு மரியாதை கிடையாது என்று சொல்ல, சீதா-அம்மா இருவருமே மீனாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால், முத்து கோபமாக தான் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது