தன் அம்மாவிற்காக ஹாஸ்பிடலில் அடித்து கொள்ளும் மீனா-சீதா, கோபத்தில் முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 22/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருணின் அம்மாவும் முத்துவை பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசியதால் சீதாவிற்கு இன்னும் முத்து கோபம் அதிகமானது.
இன்னொரு பக்கம் முத்துவை பெருமையாக பேசி டிவி, சோசியல் மீடியாவில் எல்லாம் வருவதை பார்த்து மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். வழக்கம் போல விஜயா, மனோஜ் எல்லாம் வயிறு எரிந்தார்கள். வீட்டிற்கு வந்த முத்துவிற்கு சுத்தி போட்டு உள்ளே வரவைக்க வரவேற்கிறார் அண்ணாமலை. பின் முத்துவின் செயலை பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

ரோகினி-மனோஜ் இருவரும் அருணை பழி வாங்கத்தான் முத்து இப்படி செய்திருக்கிறார் என்று ரொம்ப ஏளனமாக பேச,மீனா கோபப்பட்டார். அதற்கு முத்து, எனக்கு யாரையும் அவமானப்படுத்தனும் என்ற எண்ணம் கிடையாது. நான் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்தேன் என்றார். அதற்குப்பின் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது வந்த சீதா, உன் புருஷன் செய்வது சரியில்லை. உன் புருஷனால்தான் அருண் வருத்தப்பட்டு இருக்கிறார். அவருடைய சுயரூபம் இப்பதான் தெரிந்தது. அவருடைய நண்பர்களை வைத்து இப்படி எல்லாம் கீழ் தனமாக நடந்து கொள்வதா? என்றெல்லாம் பேசினார்.

சிறகடிக்க ஆசை:

இதைக் கேட்டு மீனாவுக்கு கோபம் அதிகமானது. சீதா, அருணிடம் உன் புருஷன் மன்னிப்பு கேட்கணும் என்றார். அதற்கு மீனா, என் கணவர் சம்மதித்தாலும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். என் கணவர் மீது எந்த தவறும் இல்லை என்றார். அதற்குப்பின் முத்துவின் செயலை பாராட்டி விருது கொடுப்பதாக சிலர் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். முத்து, நான் எந்த விருதுக்காகவும் உதவி செய்யவில்லை என்று அவர்களை அனுப்பி விட்டார். அதற்குப்பின் மீனா, சீதா சொன்னதை எல்லாம் சொன்னார். அதற்கு முத்து, மன்னிப்பு கேட்பதால் ஒன்னும் நான் குறைந்து போக மாட்டேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி, யோகா கிளாஸ்சுக்கு வரும் சிவன் இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிவன், கதை கொடுத்து பார்வதியிடம் படிக்க சொல்கிறார். அந்த சமயம் வந்த மீனா, இந்த கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் படிக்கும் போது இதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போடுங்கள் என்று ஐடியாக்களை சொல்கிறார். அந்த சமயம் வந்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் பார்வதியும் கண்டித்து திட்டுகிறார். அதற்குப் பார்வதி, உனக்கு குடும்பம், மகன்கள், மருமகள் எல்லோரும் இருக்கிறார்கள். எனக்கு யாரும் இல்லை. சிவன் உடன் நண்பராகத்தான் பழகுகிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் டிராக்:

இன்னொரு பக்கம் தன் ரெண்டு மகள்களின் நிலைமையை நினைத்து மீனாவின் அம்மா உடம்பு சரியில்லாமல் போகிறது. பின் அவரை ஹாஸ்பிடலில் சேர்கிறார்கள். சீதாவிடம் மீனா- முத்து எவ்வளவு பேசியுமே பேசவே இல்லை. அதற்குப்பின் டாக்டர், மீனாவின் அம்மா ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். அப்போது மீனா, நான் ஒரு வாரம் நம் வீட்டிலேயே தங்கி உன்னை கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் வேலைக்கு போக வேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார். உடனே சீதா, நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். பின் மீனா-சீதா இருவரும் சண்டை போடுகிறார்கள். முத்து, சீதா வீட்டிற்கு அத்தை போகட்டும் என்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full