வித்யாவின் வீட்டிற்கு சென்ற விஜயா, வசமாக மாட்டி கொண்ட ரோகினி? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 17/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் கடையில் பணம் திருட்டு போன விஷயத்தை முத்து வீட்டில் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ள எல்லாருமே சாக் ஆகிறார்கள். பின் அண்ணாமலை அதை பற்றி விசாரிக்கிறார். உடனே விஜயா, இந்த பணத்தை ரோகினியே திருடிட்டு அங்கு வேலை செய்பவர்கள் மீது பழி போட்டு இருக்கலாம் என்கிறார். ரோகினியும் என்னென்னவோ காரணத்தைச் சொல்லிப் பார்க்கிறார். ஆனால், விஜயா ஒத்துக் கொள்ளவில்லை. முத்து, மனோஜ் மீது பழி போடுகிறார். இப்படி மாத்தி மாத்தி வீட்டில் வாக்குவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. கடைசியில் அண்ணாமலை, பணத்தை கண்டுபிடிக்கும் வழியை பாருங்கள் இல்லை என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன் என்று சொல்கிறார்.

இதை கேட்டு ரோகினி ரொம்பவே பயப்படுகிறார். அதற்கு பின்பு ரோகினி, உன் அம்மா என் மீது பழி போடும் போது அமைதியாக இருந்தாய். எனக்காக ஒரு நாளும் சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று மனோஜிடம் சண்டை போடுகிறார். அதற்குப்பின் முத்து - மீனா இருவரும் பணம் காணாமல் போன விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பணம் காணாமல் போனதற்கும் ராஜா, ராணிக்கும் சம்பந்தமில்லை. மனோஜ்- ரோகினி தான் ஏதோ கோல்மால் ஆடுகிறார்கள் என்று உண்மையை கண்டுபிடிக்கிறார்கள். அதற்குப்பின் மீனாவிற்கு போன் செய்த சீதா, அருணுக்கு ப்ரமோஷன் கிடைக்கப்போகிறது.

சிறகடிக்க ஆசை:

அதனால் எல்லோரும் கும்பகோணம் போகிறோம். நீங்களும் மாமாவும் வரவேண்டும் என்று சொல்கிறார். மீனா வேலை இருப்பதால் வர முடியாது என்று மறுத்து விடுகிறார். பின் மீனா அதைப் பற்றி முத்துவிடம் சொல்கிறார். முத்து, நீ போயிட்டு வா என்று சொல்கிறார். அதற்கு பின் ஸ்ருதி, ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணுவதற்காக இன்வெடேஷனை மீனாவிடம் காண்பிக்கிறார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் பத்திரிகைகளை காண்பிக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பத்தை சொல்கிறார்கள். ரவி, இந்த ஓட்டல் விஷயத்தில் நான் தலையிடவில்லை. நீங்கள் ஸ்ருதியிடமே விட்டுவிடுங்கள் என்கிறார்.

இன்றைய எபிசோட்:

மறுநாள் காலையில் தன்னுடைய யோகா கிளாஸ் தொடங்குவதற்காக பயங்கரமான கெட்டப்பில் விஜயா, பார்வதி, சிந்தாமணி மூவருமே நோட்டீஸ் கொடுக்க கிளம்பி விட்டார்கள். ஒவ்வொரு வீட்டிற்க்காக சென்று யோகாவை பற்றி பேசி அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வித்யா வீட்டிற்கு ரோகினி, கிரிஷை பார்க்க வந்திருக்கிறார். அதேசமயம் பார்த்து தன்னுடைய வண்டி ரிப்பேர் ஆனதால் மீனாவுமே வித்யா வீட்டிற்கு வருகிறார். உடனே ரோகினி, கிரிஷை அழைத்துக்கொண்டு ஒழிந்து கொள்கிறார். அப்போது மீனா, மெக்கானிக்கல் வரும் வரை உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று வெளியே கிளம்பினார்.

மீனா கேட்ட கேள்வி:

அப்போது கிரிஷ் செருப்பை பார்த்தவுடன் மீனா ஷாக் ஆகி கேள்வி கேட்கிறார். பின் வித்யா தடுமாற, உடனே ரோகினியின் தோழி, என்னுடைய மகன் செருப்பு தான் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் வித்யா, எத்தனை நாட்கள் தான் இப்படி பொய் சொல்லப் போகிறாய். தயவு செய்து உண்மையை சொல் என்கிறார். இதனால் கோபப்பட்டு ரோகினி, வித்யாவை திட்டுகிறார். அதற்குப்பின் வித்யாவின் வீட்டிற்கு நோட்டீஸ் கொடுக்க விஜயா வருவதை பார்த்து மீண்டும் ரோகினி, கிரிஷ் இருவருமே ஒளிந்து கொள்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, விஜயாவின் யோகா கிளாஸ் பற்றி எல்லோரிடமே சொல்லி சந்தோஷப்படுகிறார். எல்லோருமே யோகாவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு விஜயாவுமே ஏதேதோ பதில் சொல்லி சமாளிக்கிறார். அதன் பின் விஜயா நோட்டீஸ் கொடுத்திருக்கும்போது லட்சுமியை பார்த்திருக்கிறார். விஜயா அவரிடம் பேச போவதற்குள் அவர் சென்று விடுகிறார். அதைப்பற்றி மீனாவிடம் விஜயா சொல்ல, ரோகினி ஷாக் ஆகிறார். அதற்குப் பின் ரோகினி, வித்யாவிற்கு போன் செய்து என் அம்மா வந்தால் தயவு செய்து எனக்கு போன் செய். கிரிஷை பத்திரமாக பார்த்துக் கொள் என்றெல்லாம் சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full