நீண்ட நாட்களுக்கு எதிர்காலத்தை பற்றி நினைக்கும் முத்து-மீனா, கோபத்தில் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, விஜயா செய்த வேலையை மறைமுகமாக சுட்டிக் காட்டி இருந்தார். பின் மீனாவை தனியாக அழைத்து சென்று திட்டி அனுப்பி விட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் போட்டுக் கொடுத்தார். பின் கிரிசை அழைத்து செல்வதற்கு அவருடைய பாட்டி லட்சுமி, மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். இதை அறிந்து சென்ற முத்து-மீனாவை லட்சுமி திட்டி விட்டார். கடைசியில் லட்சுமி, கிரிஷை அழைத்து செல்கிறேன் என்றார். இதைக் கேட்ட மீனா ஷாக் ஆனார்.
கிரிஷ் பாட் டி, முத்து ஒரு ரவுடி. அவனிடம் கிரிஷ் இருந்தால் குணம் மாறிவிடும் என்றெல்லாம் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு முத்து ரொம்பவே உடைந்து போனார். கோபத்தில் மீனா, கிரிஷ் பாட்டியை திட்டிக் கொண்டிருந்தார். கடைசியில் லக்ஷ்மி, கிரிஷை அழைத்துக் கொண்டு வித்யாவின் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு முத்து-மீனாவை திட்டியதை நினைத்து லட்சுமி ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். ஆனால், ரோகிணி அதை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல முத்து- மீனா இருவரை பற்றி திட்டி கொண்டு இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் வீட்டில் முத்து-மீனா இருவரும் கிரிஷ் பாட்டி வந்து சென்றதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் மனோஜ், முத்துவை குறை சொன்னார். அதற்குப்பின் மனோஜ், கடையில் ராணி செய்த வேலையை பற்றி சொன்னார். ரவி- முத்து எல்லோருமே திட்டினார்கள். அதற்கு மனோஜ், என்னுடைய பிரச்சினை பார்த்துக் கொள்ள தெரியும் என்றார். அதற்கு பின் முத்து, தன் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது முத்து நண்பர் அப்பா ஆன செய்தியை சொல்லி சந்தோசப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் நண்பர்களும் , மீனாவின் நண்பர்களுமே குழந்தையை பெற்றுக் கொள்ளும் விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். இதனால் அவர்களுக்குமே குழந்தையின் மீது ஆசை அதிகமாகின்றது. பின் ட்ரெண்டிங் வீடியோ எடுப்பதற்காக சுருதி, கணவன் மனைவி தலையில் பூ வைக்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள ஒவ்வொரு ஜோடியுமே பூ வைக்க, அதை வீடியோவாக சுருதி எடுக்கிறார். ஆனால், முத்து மட்டும் வீட்டில் இல்லை. அதற்குப்பின் கிரிஷ் விஷயத்தை பற்றி அண்ணாமலை கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு மீனா, க்ரிஷ் பாட்டி வந்து சென்ற விஷயத்தை எல்லாம் சொல்கிறார். கடைசியில் முத்து, மீனாவிற்காக பூ வாங்கி தருகிறார். அதை பார்த்த மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் அதை முத்து, மீனாவின் தலையில் வைக்கிறார். பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மேலே சீக்கிரம் ரூம் கட்டிவிடலாம் என்று இருவருமே தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.