வீட்டை மீட்க தெரு தெருவாக அலையும் முத்து-மீனா, வக்கீல் சொன்ன விஷயம் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 5/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, நீ வட்டிக்கு பணம் கொடுத்து அவர்கள் அதிகமாக வட்டி கட்டியும் பத்திரத்தையும் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக அவர்களுடைய பத்திரத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன் என்றார். சிந்தாமணியும் சவால் விட்டார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி அவருடைய வீட்டு பத்திரத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டுக்குள் வருவதைப் பற்றி எல்லாம் ரோகினி பேசி இருந்தார். மனோஜ், என் அம்மா உன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

மனோஜ் கொஞ்சம் கொஞ்சமாக ரோகினி சொல்வது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். பின் மனோஜ்-ரோகினி இருவரும் சேர்ந்து ஸ்ருதியின் ஹோட்டலுக்கு போனார்கள். அங்கு முத்து, மீனா எல்லோருமே இருந்தார்கள். இருவரையும் ஒன்றாக பார்த்து முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. எல்லோருமே மாற்றி மாற்றி மனோஜை கேள்வி கேட்டார்கள். மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் முத்துவிற்கு ரோகிணியின் சதி வேலை புரிந்து விட்டது.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் சிந்தாமணி, முத்து- மீனாவை பழி வாங்குவதற்காக உடனடியாக 38 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று வக்கீல் இடம் நோட்டீஸில் அனுப்ப சொன்னார். பின் முத்துவின் வீட்டிற்கும் அந்த நோட்டீஸ் வருகிறது. 24 மணி நேரத்தில் மொத்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று நோட்டீசில் இருக்கு. அதை பார்த்து மொத்த வீடுமே பயப்படுகிறது. வழக்கம் போல மனோஜ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிண்டல் செய்தார். அண்ணாமலை உடைந்து போய் என்ன என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார். எப்படியாவது இந்த வீட்டை மீட்க வேண்டும் என்று முத்துவிடம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, எப்படியாவது வீட்டை மீட்பதற்கான ஏற்பாடு செய்ய என்று எமோசனலாக பேசுகிறார். முத்து-மீனா இருவருமே பைனான்சியரை சந்தித்து பேசலாம் என்று ஆபீஸ்க்கு போகிறார்கள். ஆனால், பைனான்சியர் அங்கு இல்லை. முத்து, பைனான்சியர் இடம் போனில் பேசுகிறார். அவர் ஒரு இடத்திற்கு வர சொல்கிறார். முத்-துமீனா இருவரும் அங்கே கிளம்பி போகிறார்கள். ஆனால், பைனான்சியர் அங்கு இல்லை. மீண்டும் வேறொரு இடத்திற்கு பைனான்சியர் வர சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அங்கும் அவர் இல்லை. முத்து-மீனா இருவரும் தெருத்தெருவாக பைனான்சியர் சொல்லும் இடத்திற்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறார்கள். பைனான்சியர் வேண்டுமென்றே இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்பதை முத்து புரிந்து கொள்கிறார். பின் முத்து-மீனா இருவரும் வக்கீலை சந்தித்து பேசுகிறார்கள். வக்கீல், இப்போது கோர்ட் லீவ். எமர்ஜென்சி கேஸ் மட்டும்தான் நடக்கப்படும். எதுவாக இருந்தாலும் பத்து நாட்கள் கழித்து தான் கோட்டில் பேச முடியும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு முத்து- மீனா இருவருக்குமே தூக்கி வாரி போடுகிறது. பின் சோகத்துடன் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அண்ணாமலை, என்ன ஆனது என்று கேட்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full