ஆர்டரை கெடுக்க சிந்தாமணி-விஜயா போடும் திட்டம், மீனா ஜெயித்தாரா? இல்லையா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்துவிடம் எஸ்.ஐ நடந்ததை பற்றி விசாரித்தார். உடனே அவர், முத்து சாவியை வாங்கி கொடுத்து வார்னிங் செய்தார். மறுநாள் காலையில் ஸ்ருதி- ரவி இருவரும் தங்களுடைய முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக இன்விடேஷனை வீட்டில் கொடுத்தார்கள். அதில் விஜயா நடனம் ஆடுகிறார், டெக்கரேஷன் வொர்கிங் மீனா செய்கிறார் என்று சொன்னார்கள்.
நேற்று எபிசோட்டில் தாத்தாவின் உறவினர், நீங்கள் அனுப்பிய நபர் தான் போனை தவற விட்டவர் என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இதை மீனாவுடன் சொன்னார். ஆனால், மீனாவால் வித்யா தான் போனை திருடினார் என்று நம்பவே முடியவில்லை. ரோகினி செய்ய சொல்லி வித்யா செய்து இருப்பார் என்றார் முத்து. பின் மீனா, பங்சன் நேரத்தில் ப்ரச்சனை வேண்டாம் என்றும் சொல்லியும் முத்து ஏற்றுக்கொள்ளாமல் வித்யாவின் வீட்டிற்கு சென்றார்.
சிறகடிக்க ஆசை:
முத்துவை பார்த்தவுடன் வித்யா ஷாக் ஆகி இருந்தார். பின் முத்து, தன்னுடைய மொபைலை காண்பித்து விசாரித்தார். உஷாரான வித்யா, ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்தார். ஆனால், முத்துவும் விடாமல் உண்மையை வர வைக்க பேசி இருந்தார். வித்யா, தெளிவாக பொய் சொன்னார். இதனால ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த முத்து, நடந்ததை மீனாவிடம் சொல்ல, ரோகினிக்கு ஒரே சந்தோஷம். பின் ரோகினி, தன்னுடைய தோழியை சந்தித்து நன்றி சொன்னார். அவருமே அவருக்கு ஆறுதல் சொன்ன உடன் இருவருக்கும் இடையே இருந்த சண்டை விலகி விட்டது.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மனோஜ், ரோகினியை குச்சால் அடித்தார். வலி தாங்க முடியாமல் ரோகினி கதறினார். ஒரு கட்டத்தில் ரோகினி பேய் பிடித்தது போல் நடித்து, என்னுடைய அப்பாவின் ஆத்மா என் உடம்பிலிருந்து சென்றுவிட்டது. நான் குணமாகிவிட்டேன் என்று சொன்னவுடன் மனோஜ் நம்பி விட்டார். இன்னொரு பக்கம் ரவி, ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய திருமணநாளுக்கு லீவு வேண்டும் என்று தன்னுடைய ஓனரிடம் கேட்ட உடன் அவரும் சம்மதித்தார். அந்த சமயம் பார்த்து ஓனர் கீழே விழுந்ததால் அவரை தூக்கி கொண்டு வெளியில் வந்தார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்த சுருதி பயங்கரமாக கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். ரவி, சுருதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு வந்தார் . ஆனால், சுருதி வீட்டிலேயே இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்ருதி எங்கே? என்று கேட்டதற்கு ரவி ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதை பார்த்து முத்துவிற்கு சந்தேகம் வந்து ரவியிடம் விசாரித்தார். ரவி எல்லா உண்மையும் சொல்லி விட்டார். உடனே முத்து-மீனா இருவரும் சுருதியை தேடி போனார்கள். மண்டபத்திற்கு வந்த அனைவரும் ஸ்ருதியை தான் விசாரித்தார்கள். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சமாளித்தார். இதையெல்லாம் பார்த்த ஸ்ருதியின் அப்பா, அம்மாவிற்கு சந்தேகம் வந்தது.
https://www.youtube.com/watch?v=j1vGJ1d4LbY
சீரியல் ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சிந்தாமணி, உங்களுடைய மருமகள் மீனா பெரிய ஆர்டர் எடுத்து இருக்கிறார்.. அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஜயாவிடம் சொல்கிறார். விஜயாவும் கை அடிபட்டது போல் நடிக்கிறார். மீனாவும் அதை நம்பி அவருக்கு எல்லா உதவியும் செய்கிறார். தன்னுடைய பெரிய ஆர்டருக்கு நேரம் ஆவதால் என்ன செய்வது என்று புரியாமல் மீனா இருக்கிறார். ஆனால், விஜயா அவரை போக விடக்கூடாது என்று ஒவ்வொரு வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார். பின் மீனா, வீட்டில் இருந்தபடியே தன்னுடைய ஆர்டரை செய்து முடிக்கிறார். இதை பாராட்டி முத்து அவருக்கு மாலை அணிவிக்கிறார். இதை பார்த்தவுடன் விஜயவிற்கு பயங்கர கோபம் வருகிறது.