பாட்டி சொன்ன விஷயத்தால் பீதியில் இருக்கும் மீனா, சாமியாடி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 12/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் பெரியப்பா, ரோகினி தான் கிரிஷ் அம்மா என்பதை சொல்லவில்லை. பின் இதை பற்றி சொல்ல முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது ட்ரிப்பில் இருந்து ரோகினி, சுருதி எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது போனில் மீனாவிடம் கோவிலில் நடந்ததை எல்லாம் முத்து சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து ரோகினி விசாரித்தார். அவர் அம்மா உண்மையை சொல்வதால் ரோகிணி திட்டிக் கொண்டிருந்தார்.

லக்ஷ்மி, கிரிஷ்க்கு உறவினர்கள் யாரும் வேண்டாமா? அதற்காகத்தான் நான் போனேன் என்று தன் தரப்பு நியாயத்தை சொன்னார். இருந்தாலுமே கேட்காமல் ரோகினி வழக்கம்போல் திட்டி விட்டு நான் சொல்வதை மட்டும் நீ செய் என்று போனை வைத்து விட்டார். அதற்குப்பின் எல்லோருமே தீபாவளி பண்டிகைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றார்கள். அங்கு பாட்டி எல்லோரையும் விசாரிக்கிறார். அதற்குப்பின் மீனா- முத்து இருவருமே ஒரு கோயிலுக்கு சென்று இருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

அப்போது அங்கிருந்த சாமியாடி, மீனாவை பார்த்து எதற்காக இங்கு வந்தாய்? இங்கிருந்து கிளம்பி விடு. உனக்கு பெரிய பிரச்சனை இருக்கிறது. சீக்கிரம் கிளம்பு கிளம்பு என்று கத்தினார். இதைக் கேட்டு மீனா பயந்து விட்டார். முத்து, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவருக்கு சமாதானம் செய்து அழைத்து வந்தார். இருந்தும் மீனா, அந்த சாமியாடி சொன்னதை நினைத்து வருத்தப்ட்டார். பின் விஜயா, தன் மாமியார் சொன்னதால் டான்ஸ் ஆடினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், மீனா மட்டும் சோகமாக இருக்கிறார். இதை கவனித்த பாட்டி, என்னவென்று விசாரிக்கிறார். அப்போது மீனா, கோவிலில் சாமியாடி சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். உடனே பாட்டில், அந்த சாமியாடி ரெண்டு மாதத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்தார். ஆனால், அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் அப்படியே நடக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டு மீனாவிற்கு இன்னும் பயமாக இருக்கிறது. அந்த சமயம் பார்த்து மீண்டும் சாமியாடி மீனாவை தேடி வீட்டிற்கு வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது சாமியாடி, ரோகிணியை பார்த்து முறைக்கிறார். பின் மீனாவைப் பார்த்து இங்கு இருக்காதே, கிளம்பி விடு, அவளை கூட்டிட்டு போ என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார். இதனால் மீனாவிற்கு இன்னும் பயமாகிறது. பாட்டியுமே என்ன நடக்கப்போகிறதோ என்று கவலையில் இருக்கிறார்.. அதற்குப் பின் மறுநாள் காலையில் எல்லோரும் தீபாவளிக்காக தயாராகி கோவிலுக்கு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய கணவருக்கு திதி கொடுப்பதற்காக லட்சுமி, ரோகினிக்கு போன் செய்து வர வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full