திடீரென்று காணாமல் போன முத்து, தேடி அலையும் மீனா, சந்தோஷத்தில் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி தன்னுடைய மகனை அழைத்து கொண்டு பள்ளிக்கு போனார். க்ரிஷ் பள்ளியில் தான் அண்ணாமலை வேலைக்கு சேர்ந்திருந்தார். அண்ணாமலையை பார்த்தவுடன் ரோகினி ஷாக்காகி ஒளிந்து கொண்டார். அவர் சென்ற பிறகு ரோகினி, செக்யூரிட்டி இடம் விசாரித்தார். அதற்கு அவர், புதன்கிழமை மட்டும் வேலைக்கு வருவார் என்றார். பின் என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து கிரிஷ் உடன் வீட்டுக்கு வந்து விட்டார் ரோகினி. தன் அம்மாவிடம் நடந்ததை ரோகினி சொல்ல, அவர் உண்மையை சொல்லிவிடு என்றார்.
உடனே கோபத்தில் ரோகினி, அவர் அம்மாவை திட்டிவிட்டு, இதற்கு ஒரு வழி செய்கிறேன் என்றார். அதற்கு பின் தாங்கள் வாங்க இருக்கும் பங்களாவை பார்க்க ரோகினி- மனோஜ் இருவருமே போய் இருந்தார்கள்.
அதை பார்த்தவுடன் எப்படியாவது அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ரோகினி சொன்னார்.
நேற்று எபிசோட்டில், புது பங்களாவை சுத்தி பார்த்து மனோஜ்- ரோகினி இருவருமே பங்களா ஓனரிடம் அமௌன்ட் பத்தி பேசி இருந்தார்கள். அவர், ஐந்து கோடி மதிப்பு. உங்களுக்கு மூன்று கோடிக்கு தருகிறோம். அட்வான்ஸ் தொகையாக 50 லட்சம் கொடுங்கள் என்றார்.
சிறகடிக்க ஆசை:
உடனே மனோஜ் 30 லட்சம் தருகிறேன் என்றவுடன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அவர்கள் ஒரிஜனர் ஓனரே இல்லை. அவர்கள் அந்த பங்களாவில் வாடகை இருப்பவர்கள். மனோஜை ஏமாற்றி பணத்தை வாங்க பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆர்டரின் மூலம் தனக்கு கிடைத்த லாபத்தை நினைத்து மீனா சந்தோஷப்பட்டார். அப்போது அந்த மண்டபத்தின் மேனேஜர், இங்கு சிந்தாமணி என்பவருக்கு தான் எப்போதுமே ஆர்டர் கிடைக்கும் என்று பயங்கமராக பில்டப் விட்டார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் பார்த்து சிந்தாமணி மண்டபத்திற்கு வந்து ஆர்டர் கொடுக்காததால் மேனேஜரிடம் சண்டை வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, தனக்கு கிடைத்த லாபத்திற்கு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து இருந்தார். ஆனால், வழக்கம் போல் விஜயா, மீனாவின் வேலையை கிண்டல் கேலி செய்தார். அதற்கு பின் மீனா, உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னவுடன் முத்துவின் முகமே மாறுகிறது. அது மட்டுமில்லாமல் மீனா, சில வீட்டு வேலைகளையும் முத்துவுக்கு வைத்தார். இதனால் முத்து, வருத்தப்பட்டு அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, காலையில் எழும்போது இருந்தே முத்து காணவில்லை. அவர் தன்னிடம் சொல்லாமல் சென்றது நினைத்து என்று கவலைப்பட்டார். இதை பற்றி மீனா, அண்ணாமலை இடம் கேட்க, அவருமே நான் முத்துவை பார்க்கவில்லை என்றார். அப்போது விஜயா, இன்னும் சமைக்கவில்லையா? என்று கேட்டு மெனு கார்டு கொடுத்தார். உடனே ஸ்ருதி, விஜயாவை கிண்டல் அடித்து பேசுகிறார். அதற்குப்பின் மீனா, முத்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரிக்கிறார். ஆனால், அவர்களுக்குமே முத்து பற்றி தெரியவில்லை என்று விசாரிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி வீட்டிற்கு சென்று இருகிறார். அப்போது பார்வதி வீட்டில் உள்ள தன்னுடைய திருஷ்டி புகைப்படத்தை பார்த்து விஜயா சண்டை போடுகிறார். அதற்கு பின் மனோஜ் வாங்கும் புது பங்களா பற்றி பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து விஜயாவின், கிளாஸ்க்கு வரும் காதல் ஜோடி, யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து ஓடிவிடலாம் என்றெல்லாம் பிளான் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய தம்பி சத்யாவிற்கு ஃபோன் செய்து முத்துவை பற்றி சொல்ல, இருவருமே முத்து போகும் இடங்களுக்கு எல்லாம் சென்று விசாரிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.