சிந்தாமணி பொண்ணா நீ? அதிர்ச்சியில் மீனா, முத்து எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ட்ரிப் முடித்து வீட்டிற்கு சுருதி-ரவி இருவரும் வந்துவிட்டார்கள். எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாரானார்கள். விஜயா, மனோஜ் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். அப்போது வந்த மனோஜ், நிச்சயதார்த்த மோதிரத்தை காணவில்லை என்று சொன்னார். வீட்டில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. விஜயா, எங்கே போச்சு என்று பதறினார். அண்ணாமலை ஷாக்கில் இருந்தார்.
ரேகா, என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்ளணும் என்றார். சத்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ரேகா, சிந்தாமணியின் புகைப்படத்தை காண்பித்து இவர் தான் என்னுடைய அம்மா என்றார். அதைப் பார்த்து சத்யா ஷாக்கானார். பின் ரேகா, நம்முடைய காதலை பற்றி எங்கள் வீட்டில் தெரிந்தால் பிரச்சனை தான் வரும் என்றார். சத்யா , உன் அம்மாவால் என் குடும்பத்திற்கு நிறைய பிரச்சனை வந்திருக்கிறது. என்னுடைய அக்கா ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார் என்றார். ரேகா, முதலில் உன் அக்கா மாமாவிடம் பேசலாம் என்றார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் மீனாவை சந்திக்க அவருடன் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய கோரிக்கையை மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், அவர்களை பேசவிடாமல் விஜயா மாற்றி மாற்றி மீனாவிற்கு வேலை வைத்தார். உடனே முத்து, விஜயா சொன்ன வேலைகள் எல்லாம் செய்தார். இதை பார்த்து மீனாவுடன் வேலை செய்பவர்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதற்குப்பின் சத்யா-ரேகா இருவரும் பைக்கில் வந்தார்கள். அதை சிந்தாமணி பார்த்து பின் தொடர்ந்து வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சத்யா- ரேகா இருவரும் மீனா, முத்திருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். அவர்களை பின் தொடர்ந்து வந்த சிந்தாமணி ஷாக் ஆகிறார். கோபத்தில் சிந்தாமணி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் மீனா, தலைவியானதால் கேக் வெட்டி செலபரேட் செய்கிறார்கள். அதற்குப்பின் ரேகா, தான் சிந்தாமணி மகள் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். இதனால் மீனா, நீங்கள் இருவரும் பேச வேண்டாம், காதலிக்க வேண்டாம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்றெல்லாம் புலம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே முத்து, பெரியவர்கள் செய்த தவறுக்கு இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள். உங்கள் காதலுக்கு நான் சப்போர்ட் செய்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஆட்டோவில் மனோஜ், ஹரிணி இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆட்டோவில் செல்வது செட் ஆகாதால் ஹரணிக்கு வாந்தி வந்து விடுகிறது. மனோஜ் கேரிங்காக ஹரிணியை பார்த்து கொள்கிறார். அதை பார்த்து ரோகிணிக்கு கோபம் வருகிறது. மனோஜ் இல்லாத நேரம் பார்த்து ஹரணியிடம் ரோகிணி பேசுகிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, சத்யா- ரேகா இருவரும் காதலிக்கும் விஷயத்தை பற்றி தன்னுடைய கணவரிடம் சொல்லி கோபப்படுகிறார்.