மீனா சொன்ன விஷயத்தால் ஷாக்கான ஸ்ருதி-ரவி, அவமானப்பட்ட விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, ரேகாவிடம் தன்னுடைய காதலை சொல்லி விட்டார். ரேகா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி போன் செய்து ரேகாவிடம் பேசி இருந்தார். பின் ரேகா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எனக்கு நீ துணையாக இருக்க வேண்டும். என் காதலுக்கு என் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நீ தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்றார். பின் கோயிலில் ஸ்ருதி-மீனா பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜயா, மனோஜிற்கு திருமணம் ஏற்பாடு செய்திருக்கும் விஷயத்தை பற்றி இடம் சொன்னார்.
விஜயா- மனோஜ் இருவரும் சூப்பராக தயாராகி பெண் வீட்டார் செய்தார்கள். அங்கு பெண் வீட்டில் எல்லோருமே நன்றாக பேசி இருந்தார்கள். பின் பெண்ணை பார்த்தவுடன் மனோஜ்க்கு ரொம்பவே பிடித்து விடுகிறது. பின் மனோஜ்- கல்யாண பெண் இருவரும் தனியாக பேசிக்கொண்டார்கள். அதற்குப்பின் பெண் வீட்டாரின் உறவினர்கள் எல்லோருமே விஜயாவின் குடும்பத்தை பற்றி விசாரித்தார்கள். அப்போது பெண்ணுடைய தாத்தா, விஜயாவின் அப்பாவை பற்றி விசாரித்தார்.
சிறகடிக்க ஆசை:
விஜயா, நாம் உறவுக்காரர்களா என்று சந்தோஷப்பட்டார். உடனே பெண்ணின் தாத்தா, நீங்கள் எங்களுக்கு தூரத்து சொந்தம். உங்கள் மகன் அண்ணன் முறை வேண்டும் என்றார். இதைக் கேட்டு மனோஜ் ஷாக் ஆகி விட்டார். பெண் வீட்டாரருக்குமே ஒன்றும் புரியவில்லை. இந்த சம்மந்தம் வேண்டாம். உறவு முறை சரி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மனோஜ்-விஜயா சோகமாக இருந்து கிளம்புகிறார்கள். பின் வீட்டில் மனோஜ், முத்து, ரவி எல்லோருமே மாடியில் சரக்கடித்துக் கொண்டு தங்களுடைய சோக கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சமையல் செய்வதற்காக விஜயா ஒரு ஆளை வீட்டிற்கு வரவைக்கிறார். அந்த நபர் வீட்டிற்கு வந்தவுடன் 1008 கண்டிஷன் போடுகிறார். விஜயாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இதனால் கோபப்பட்டு விஜயா அந்த நபரை திட்டி அனுப்பி விடுகிறார். பின் முத்து, இப்போதாவது மீனாவின் அருமை தெரிகிறதா என்று கேட்கிறார். இருந்தாலும் விஜயா, மீனாவின் மீது கோபத்தில் தான் இருக்கிறார். பின் இதை பற்றி முத்து, மீனாவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா, நான் என்ன உங்க வீட்டு சமையல் காரியா? என்று கோபப்படுகிறார். பின் முத்து, மீனாவை சமாதானம் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சுருதி, ரவி இருவரும் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த மீனா, நீத்து ஹோட்டல் நிறுத்திவிட்டு பூக்கடையை ஆரம்பித்திருக்கிறார். அந்த கடைக்கு ரவியின் பெயரை வைத்திருக்கிறார். அந்த கடைக்கு சிந்தாமணி தான் எல்லா பூவெல்லாம் கொடுக்கிறார். இதனால் ஏதோ ஒரு பிரச்சனை செய்ய இருக்கிறார் என்கிறார். இதனால் சுருதி, ரவி இருவரும் கோவப்படுகிறார்கள். ரவி, நான் அம்மாவிடம் சொல்லி சிந்தாமணியை அவர்கள் கடைக்கு பூ கொடுப்பதை நிறுத்த சொல்கிறேன் என்கிறார்.