கிரிஷை வெளியே துரத்த நடக்கும் சதி வேலை, முத்து சொன்ன வார்த்தையால் கொந்தளித்த மீனா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, எதற்காக நீ இந்த வேலை செய்து கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக எழுந்து வா என்று திட்டி இருந்தார். ஆனால் மனோஜ் எதுவும் பேசாமல் கிரிஷ் சாப்பாடு ஊட்டி விட்டார். அதற்குப் பின் மனோஜுடன் தூங்க கிரிஷ் ரூமிற்கு வந்தார். மனோஜ் ஆரம்பத்தில் மறுத்தாலும் கிறிஸ் அம்மாவின் ஆவி வந்துடுமோ என்ற பயத்தில் அங்கேயே கிரிஷை தூங்க சம்மதித்தார். இதை எல்லாம் பார்த்து ரோகினிக்கு சந்தோசமாக இருக்கிறது.
க்ரிஷ், மனோஜின் ஷூவை பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த முத்து, பயங்கரமாக கோவப்பட்டு மனோஜிடம் சண்டைக்கு போனார். மனோஜ், நான் எதுவும் செய்ய சொல்லவில்லை. பின் கிரிஷ், என்னை பள்ளியில் விடுவீர்களா? என்றார். மனோஜ், முடியாது என்று மறுத்து விட்டார். உடனே ரோகிணி பேய் வந்தது பல முறைக்கிறார். பயத்தில் மனோஜ் ஒத்துக் கொண்டார். அதற்குபின் பார்வதி-சிவன் இருவருமே முத்து வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் கிரிஷை தத்தெடுத்து வளர்ப்பது தொடர்பாக அண்ணாமலையிடம் கேட்டார்கள்.
சிறகடிக்க ஆசை
மனோஜ், தயவுசெய்து இந்த வீட்டை விட்டு அழைத்து செல்லுங்கள் என்றார். உடனே முத்து- மீனா இருவருமே அவனுக்கு பாட்டி இருந்தார்கள். அவர்களை மீறி அழைத்துச் செல்ல முடியாது என்றார்கள். விஜயா வழக்கம் போல மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். ரோகிணியுமே க்ரிஷ் பாட்டியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்றார். ஆனால், யார் பேச்சையும் விஜயா கேட்கவில்லை. கடைசியில் மீனா, கிரிஷ் இந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வதை கேட்டு விஜயாவிற்கு ஷாக்காக இருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, கிரிஷ் இந்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். அவனை தத்து கொடுப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர் பாட்டி தான் முடிவு எடுக்கணும் என்கிறார். விஜயா, மனோஜ் தவிர வீட்டில் உள்ள யாருமே கிரிசை தத்து கொடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பின் பார்வதி, சிவன் இருவருமே அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். அதற்குப்பின் முத்து, கிரிஷை தத்து எடுப்பதற்கு என்னென்ன தேவைகள் என்பது எல்லாம் தெரிந்து கொண்டு மீனாவை அழைத்துக் கொண்டு ஆஸ்ரமத்திற்கு போகிறார். இதை அறிந்த மீனா, யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீர்கள்? கிரிஷை தத்தெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
சீரியல் ட்ராக்:
இதை நான் கிரிஷ் நலனுக்காக தான் சொல்ல வருகிறேன். கூடிய சீக்கிரத்திலேயே நான் உண்மையையும் சொல்கிறேன். இப்போது என்னால் எதுவும் பேச முடியாது என்று அங்கிருந்து செல்கிறார். இதையெல்லாம் கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. முத்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மீனா ஒத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் மனோஜ் தன்னுடைய பிஏவிடம் கிரிசை வேறொரு நாட்டிற்கு தத்து கொடுப்பதை பற்றி சொல்கிறார். அவருமே தனக்கு தெரிந்தவர்களின் மூலம் கிரிஷை தத்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். இதை அறிந்த ரோகினி பயங்கரமாக கோபப்படுகிறார்.